districts

img

பெருந்துறை சிப்காட் கழிவுநீர் பிரச்சனை: அமைச்சர் பேட்டி

ஈரோடு, அக்.24- பெருந்துறை சிப்காட் கழிவுநீர் பிரச்சனைக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர்  சு.முத்துச்சாமி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துச் சாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச் சர் சு.முத்துச்சாமி பேசுகையில், சிப்காட் தொழிற் பேட்டை வளாகத்திலிருந்து வெளியேறும் கழிவுக ளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. முதலில் இங்கு செயல் படும் தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீரை நேரடி யாக தரையில் வெளியேற்றாமல், கழிவுநீரை குழாய் மூலமாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு எடுத்து செல்ல வேண்டும். இவ் வாறு செயல்படுத்தினால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற் படுவதை தடுக்க முடியும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலத்திடி நீரினையும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, சுத்திகரிப்பு செய்து மீண்டும் தொழிற்சாலைகளுக்கே வழங் கப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர் கீழே சென்று விடும். இந்நிலையில் தொழிற்சாலைகளிலி ருந்தும் கழிவு நிர் வெளியேறாமல் தடுப்பதன் மூலம்  நீர் மாசு ஏற்படுவதை முழுமையாக தடுக்கலாம். இதற்கு சிறிது கால அவகாசம் தேவை. அதற் கான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உட னடி பணியாக நிரம்பி வழியும் தண்ணீரை வெளியே விடாமல் எடுத்து மறு சுழற்சி செய்யும் பணி நடை பெறுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியுள்ளோம், என்றார்.