districts

img

பழுதடைந்த சாலையை செப்பனிட மக்கள் கோரிக்கை

தருமபுரி, ஜூலை 2- சோகத்தூர் ஊராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலை களை  செப்பனிட்டு, அடிப்படை வசதி களை செய்து தர மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கிராம  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி ஊராட்சி ஒன்றியம், சோகத்தூர் பஞ்சாயத்தில் உள்ள ரெட்டி அள்ளி, சவுளுப்பட்டி, மாட்டுகானூர் ஆகிய கிராமங்களில் 1000க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு  5000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின் றனர். இந்த கிராமங்கள் தருமபுரி நகரத்தை ஒட்டியே உள்ளது. இந்த கிராமத்தில் மக்கள் பெரும்பாலும் கூலி  தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அதிகமாக  உள்ளனர். இந்நிலையில், இக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லா ததால் கடந்த 10 ஆண்டுகளாக பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். குறிப்பாக, குமாரசாமி பேட்டை ரயில்வே மேம்பாலம் முதல் மாட்டுகானூர் வழியாக பாலக்கோடு - தருமபுரி பிரதான சாலை வரை செல்லும் கிராம சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் விபத்துகள் அதிகளவில் ஏற் படுகிறது. மேலும், தெருக்களில் உள்ள  இணைப்பு சாலைகளும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கிராமங்களில் ஒகேனக்கல் குடிநீர் விநியோகமும் முறையாக இல்லை. இதனால் குடிநீர் எடுத்துவர  மக்கள் 2 கி.மீ. தூரமுள்ள குமார சாமிபேட்டைக்கு செல்கின்றனர். தெரு விளக்குகளும் எரிவதில்லை. மழை நீர் வடிகால் வசதி முறையாக இல்லை.  இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சுடு காடுக்கு செல்லும் பாதையும் குறுகலா கவும் குண்டும், குழியுமான மண்சாலை யாக உள்ளது. மேற்கண்ட அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருமாறு  ஊராட்சி  நிர்வாகம் மற்றும் மாவட்ட  ஆட்சியரிடம் பலமுறை மனு அளிக்கப் பட்டன. ஆனால் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே ரெட்டிஅள்ளி, சவுளுபட்டி, மாட்டுகானூர் கிராமங்களில் உள்ள சாலைகளை செப்பனிட்டு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;