districts

img

சாலையோரத்தில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

கோவை, டிச.7- கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு மாந கராட்சி ஆணையர் அபராதம் விதித்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் திங்களன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரான பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிக் பஜார் தனியார் நிறுவ னத்தின் அருகில் சாலையோரங்களில் குப்பைகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டிருந்தது. இதையடுத்து சம் மந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். இவ் வாய்வின் போது மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், சுகாதார அலுவலர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்த னர்.

;