districts

img

பிஏபி கரையோர விவசாயிகள் போராட்டம்

பொள்ளாச்சி, செப்.16- பிஏபி கரையோர விவசாயிகள் சட்டவிரோதமாக கிணறு  மற்றும் மின்இணைப்பு பெற்றுள்ளதாக பொதுப்பணித்துறை நோட்டீஸ் அளித்துள்ளதை கண்டித்து பிஏபி விவசாயிகள பொள்ளாச்சி சர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மற்றும் திருப்பூர் மாவட்டம் சுற்றுவட்டார கிராமங் களின் வழியாக பரம்பிக்கும் ஆழியார் பாசனத்திட்டத்தின் கீழ்  ஆண்டுதோறும் ஆழியார் அணையில் தமிழக அரசால் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பல  லட்சம் ஏக்கர் தென்னை விவசாயமும், கரும்பு உள்ளிட்ட   காய்கறி விவசாயமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  பிஏபி கால்வாயின் கரையோரம் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு சமீபத்தில் பிஏபி பொதுப்பணித்துறை அதிகாரிகளால் சட்டத்திற்கு புறம்பாக  மின்சாரம் மற்றும்  கிணறு பயன்படுத்துவதாக சமீபத்தில் நோட்டீஸ் கொடுத் துள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளியன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதில், பொள்ளாச்சி பிஏபி கரையோமுள்ள கால்வாய் பகுதிகளில் பல 60ஆண்டுகளுக்கு மேலாக  பல  இலட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வரு கிறோம். மேலும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக மின்சாரம்  கோரி விண்ணப்பித்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும்  தமிழக மின்சாரத் துறையின் அனுமதி பெற்று மின்  இணைப்பும், வருவாய்த் துறை அதிகாரிகள் அனுமதியின்  கீழ் கிணறுகளும் பெற்று விவசாயம் செய்து வருகின்றோம். இந்நிலையில் திடீரென பிஏபி பொதுப்பணித்துறை அதிகாரி கள் பிஏபி கரையோரமுள்ள விவசாய நிலங்களிலுள்ள கிணறுகள் மற்றும் மின் இணைப்புகள் சட்டத்திற்கு புறம்பாக  உள்ளதாக எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது  எங்களை மிக கடுமையான மன உளைச்சலுக்கும்,  அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இதுகுறித்து கவனம் செலுத்தி பிஏபி அதிகாரிகள் கொடுத்துள்ள நோட்டீஸ் களை திரும்பப்பெற வேண்டும். அரசே அனுமதித்த பின்னர்தான் எங்களுக்கு மின் இணைப்பும், கிணறு அனுமதியும் கிடைத்தது. அதன்பின்னர் தான் நாங்கள் பயண்படுத்தினோம். தற்போது பிஏபி அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பானதாக சொல்வது வேதனை அளிக் கிறது. எனவே போர்க்கால அடிப்படையில் விவசாயிகளின் நலனில் அக்கறைக்கொண்டு தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகமும், பொள்ளாச்சி வருவாய் துறை யினரும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற  பிஏபி அதிகாரிகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்ந்தால் விவசாயிகள் போராட்டத்தை நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

;