districts

img

ஊராட்சி ஊழியர்களை சொந்த வேலைக்கு பயன்படுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்

உடுமலை, டிச.8-  மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றி யம், கடத்தூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களை ஊராட்சி நிர்வாக வேலைகளுக்காக பயன்படுத் தாமல் ஊராட்சி தலைவர் கமலவேணி மற்றும் அவரது கணவர் கலையரசு தனது வீட்டின் சொந்த வேலைக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஊராட்சி பகுதியில் குப்பை மற்றும் சாக்கடைகள் தேங்கி  சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, பொதுமக்கள்  சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு  முன்பு வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் மனு கொடுத்தும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக் காமல் மெத்தன போக்கில் ஈடு பட்டு வருகிறது. நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்  இந்நிலையில், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மடத்துகுளம் தாலூகா செய லாளர் ஆர்.வி. வடிவேல் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத் தில், ஊராட்சி பணியாளர்களை மக்கள் பிரதிநிதிகள் தங்களது சொந்த வேலைகளுக்கு பயன் படுத்துவதாக தொடர்ந்து குற்றச் சாட்டுகள் எழுந்து வருகிறது தற்போது பெய்த மழையால் அனைத்து பகுதியிலும் மழை நீர் தேங்கியதை அகற்றும் பணிக்குகளுக்கு ஊழியர்களை பயன்படுத்தாமல் தங்களது  சொந்த வேலைகளுக்கு பயன்ப டுத்துவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என தெரிவித்தி ருந்தார்.

;