districts

img

ஆபத்தான நிலையில் குடிநீர் மேல்நிலைத்தொட்டி

தாராபுரம், டிச.23-  தாராபுரத்தை அடுத்துள்ள குள்ளக்காளிபாளை யத்தில் ஆபத்தான நிலையிலுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரம் வட்டம், குண்டடம் ஒன்றியம், சங்கரண் டாம்பாளையம் சிற்றூராட்சியில் குள்ளக்காளிபாளை யம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்க ளைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இங்கு 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. முப்பது ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த தொட்டியில் இருந்து குள்ளக்காளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் விநியோ கம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொட்டி  கட்டுப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் வலுவிழந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு  தொட்டியின் மேலே முடப்பட்டுள்ள மேற்கூரை முற்றி லும் இடிந்து தொட்டியின் உள்ளேயே விழுந்துவிட்டது. தற்போது மேற்கூரை இல்லாமல் திறந்த நிலையில் உள்ளதால் சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் அசுத்தமான குடிநீரை பயன்படுத்தும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.   மேலும், குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பல வருடங் களானதால் வலுவிழந்த நிலையில் உள்ளது. எனவே அசம்பாதவிதம் நடப்பதற்கு முன்பு இப்பகுதி குடிநீர் விநி யோகத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு உடனடி யாக தொட்டியை அகற்றி, புதிய மேல்நிலைத்தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

;