districts

img

புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம்

நாமக்கல், பிப்.23- நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, புதிய வழித்தடம் மற்றும் நீட்டிப்பு செய்யப்பட்ட வழித்தடத்தில் நக ரப் பேருந்துகள் சேவையை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாநகராட்சி, பழைய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (சேலம் கோட்டம்) சார்பில், புதிய வழித்தடம் மற்றும் நீட்டிப்பு செய்யப்பட்ட  வழித்தடத்தில் நகரப்பேருந்துகள் சேவையை மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஞாயிறன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசு கையில், நாமக்கலில் காலை 8.40 மணிக்கு புறப்பட்டு போடி நாயக்கன்பட்டி, சிவநாயக்கன்பட்டி வழியாக பழையபாளை யம் பள்ளி வரை மாற்றி அமைக்கப்பட்ட வழித்தடத்திலும், நாமக்கலில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு க்ரீன் பார்க் பள்ளி, கருப்பட்டிபாளையம், தும்மங்குறிச்சி வழியாக திண்டமங்க லம் வரை புதிய வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கப் படும். மேலும், பெரியமணலியில் இரவு தங்கல் செய்யப்பட் டதை மாற்றி, நாமக்கல் வரையிலும் மற்றும் நாமக்கலில் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு பெரியமணலி வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்ட வழித்தடத்திலும், நாமக்கலில் மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு புதன்சந்தை வழியாக காரைக்குறிச்சி வரை கூடுதல் நடைகள் இயக்கப்படும் மற்றும் இரவு தங்கல் செய்யப்பட்டதை முட்டாஞ்செட்டி வரை நீட்டிப்பு செய்யப் பட்ட வழித்தடம் உள்ளிட்ட புதிய மற்றும் நீட்டிப்பு செய்யப் பட்ட வழித்தடத்தில் பேருந்து சேவை வழங்கப்படும், என் றார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.இராம லிங்கம், கு.பொன்னுசாமி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், துணை மேயர் செ. பூபதி, போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ப.செங் கோட்டுவேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.