districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது சேலம், ஜூன் 1- 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த  இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே உள்ள எரவாடா தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (26). இவர் அங்கிருந்த ஒரு அறக்கட்டளை நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் பணி செய்து கொண்டிருந்தார். அப் போது அங்கு வந்த 6 வயது சிறுமியிடம், ரஞ்சித்குமார் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள், ரஞ்சித்குமாரை பிடித்து தாக்கினர். இதனால் மயங்கி சரிந்த ரஞ்சித் குமாரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதையடுத்து அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு ரஞ்சித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஐடிஐ-யில் சேர ஆட்சியர் அழைப்பு

ஐடிஐ-யில் சேர ஆட்சியர் அழைப்பு சேலம், ஜூன் 1- சேலத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மகளி ருக்கான மேட்டூர் அணை மற்றும் கருமந்துறை பழங்குடி யினர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பயிற்சியில் சேரவும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். வெல்டர்,  பெயிண்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், பிட்டர், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஏசி மெக்கானிக் ஆடை தயா ரித்தல், பிளம்பர் ஆகியவற்றிக்கு பயிற்சி அளிக்கப்படு கிறது. அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்ந்த அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். இதில் 14 வயதை தாண்டிய மகளிரும்,  14 முதல் 40 வரை உள்ள ஆண்களும் இணையதளம்  வாயிலாக ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க  வேண்டும். மேலும், விவரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0427-2400329 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

புகையிலைப் பொருட்கள் விற்ற கடைக்கு சீல் தருமபுரி, ஜூன் 1- பாலக்கோடு அருகே தடைசெய்யப்பட்ட புகையி லைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரி கள் சீல் வைத்தனர். தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலு வலர் பானு சுஜாதா உத்தரவின்பேரில், தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறு வது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். இதன் தொடர்ச்சியாக காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையி லான குழுவினர், பாலக்கோடு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது 5 ஆவது மைல் கல் பகுதியில் உள்ள மளிகை கடையில் ஆய்வு செய்த  போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்து, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த னர்.

சூறைக்காற்றுக்கு கோழி செட் சேதம்

சூறைக்காற்றுக்கு கோழி செட் சேதம் நாமக்கல், ஜூன் 1- ராசிபுரம் பகுதியில் வெள்ளியன்று நள்ளிரவில் வீசிய சூறைக்காற்றுக்கு கோழி செட் பெயர்ந்து கீழே  விழுந்து முற்றிலும் சேதமானது.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (47). விவசா யியான இவர் தனது நிலத்தில். ரூ.3.60 லட்சம் மதிப் பில் கீற்று மற்றும் தகரம் கொண்டு கோழி செட் அமைந் திருந்தார். கடந்த இரண்டு நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நள்ளிரவில் கடந்த  இரண்டு நாட்களாக நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு  இடங்களில், சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. விவசாய கடன் வாங்கி செட்  அமைத்துள்ள நிலையில், சூறைக்காற்றுக்கு ஒரு சில  நொடியில் சரிந்து விழுந்ததால், விவசாயி கனகராஜ் கவலை அடைந்துள்ளார்.

கடமான் தாக்கி வனவிலங்கு பாதுகாவலர் பலி
மான்களின் உடல்நிலை குறித்து பரிசோதனை

சேலம், ஜூன் 1- குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கட மான் தாக்கி வனவிலங்கு பாதுகாவலர் ஒரு வர் உயிரிழந்த நிலையில், கடமான்களின் உடல்நிலை குறித்து மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரம் அருகே உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங் காவில் புள்ளி மான், கடமான், முதலை, குரங்கு, வண்ணப் பறவைகள், வெள்ளை மயில் என 200க்கும் மேற்பட்ட வன உயிரி னங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வியாழனன்று வனவிலங்கு பாதுகாவ லர் தமிழ்ச்செல்வன், கடமானுக்கு உணவு வைக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பா ராத விதமாக கடமான் தமிழ்செல்வனை முட் டியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு வனவிலங்கு பாதுகாவலர் முரு கேசன் என்பவர், தமிழ்ச்செல்வனை காப் பாற்ற முயன்றபோது அவரை மான் முட்டி யது. இதைத்தொடர்ந்து இருவரும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். முருசேகனுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக  மாவட்ட வன அலுவலர் காஷியப் ஷஷாங்  ரவி, பூங்காவின் உதவி இயக்குநர் செல்வ குமார் ஆகியோர் வெள்ளியன்று பூங்கா விற்கு நேரில் சென்று, அங்கிருந்த ஊழியர்க ளிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பூங்காவில் மொத்தம் 37 கடமான்கள் உள் ளன. இதில் 30 பெண் கடமான்களாகும். வன ஊழியர்களை முட்டி தாக்கிய ஆண் கடமான் திடீரென ஆக்ரோஷமானதற்கு காரணம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், ஒசூரில் இருந்து கால்நடை மருத்துவக்குழுவினா் வரவழைக்கப்பட்டு, கடமான்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. அதன் காரணமாக பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்று லாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கோடை மழையால் பசுமை பொங்கும் வனப்பகுதிகள்!

சேலம், ஜூன் 1- கொளுத்தும் வெயிலால் கடும் வறட்சியிலிருந்த வனப்பகுதிகள், கோடை மழையால் மீண்டும் உயிர்த் தெழுந்துள்ளன. சேலம் மாவட்டத்திலுள்ள கல்வரா யன்மலை, அருநுாற்றுமலை, கோது மலை, வெள்ளாளகுண்டம் மலை, திரு மனுார் ஜம்பூத்துமலை, கிடமலை, நெய்யமலை, மண்ணுார் மலை, சந்து மலை, பெலாப்பாடி மலை, பெரியக் குட்டிமடுவு மற்றும் செக்கடிப்பட்டி, குப் பனூர், சேர்வராயன் மலை உள்ளிட்ட வனப்பகுதிகளால் நிறைந்துள்ள வாழப் பாடி பகுதிகளில் மான்கள், கரடி, காட்டுப் பன்றி, முள்ளம்பன்றி, கடமை, காட்டெ ருமை, நரி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்களும், மயில், கழுகு போன்ற பற வைகளும் அதிகளவில் உள்ளன. வாழப் பாடி, பெத்தநாயக்கன்பாளையம் வட் டத்திலுள்ள வனப்பகுதிகளில் கடந்த 10  ஆண்டுகளில் காட்டெருமை, மான்க ளின் எண்ணிக்கை இரு மடங்காகவும், குரங்குகளின் எண்ணிக்கை 3 மடங்கும், மயில்களின் எண்ணிக்கை பல மடங்கும் அதிகரித்துள்ளன. இந்த வனப்பகுதியில் தாவர உண் ணிகளே அதிகளவில் வசித்து வருவ தால், உணவுத்தீவனத்திற்கு தாவரங்க ளையும் அவற்றின் இலை, காய், கனி களையே அதிகம் சார்ந்துள்ளன. வனப் பகுதியில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மழை பெய்யவில்லை. இத னால், பெரும்பாலான வனப்பகுதிக ளில் மரம், செடி, கொடி உள்ளிட்ட தாவ ரங்கள் காய்ந்து இலையுதிர்ந்து காணப் பட்டன. இதனால், பல இடங்களில் காட் டுத்தீ ஏற்பட்டது. நீரோடைகள், குட்டைகள், சுனை, பாலி உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்ட தால் மான்கள், காட்டெருமை, குரங்கு கள் உள்ளிட்ட விலங்குகள், தீவனம்  மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட் டிய கிராமங்களில் புகுந்தன. இந்நிலை யில் 4 மாதங்களுக்கு பிறகு மே மாதத் தில் எதிர்பாராத விதமாக கோடை மழை  பெய்ததால், வனப்பகுதியில் இலையு திர்ந்து காய்ந்து கிடந்த தாவரங்கள் துளிர்விட்டு தழைத்தோங்கி வளர்ந் துள்ளன. மேலும், வனப்பகுதியில் வறண்டு கிடந்த தடுப்பணை, குட்டை, சுனை உள்ளிட்ட நீர் நிலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் வனவிலங்கு கள் மற்றும் பறவைகளுக்கும் தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. இதனால் வன உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

அவிநாசி சமையலர் பாப்பாள் வழக்கு  விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அவிநாசி சமையலர் பாப்பாள் வழக்கு  விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு திருப்பூர், ஜூன் 1 - அவிநாசி சமையலர் பாப்பாள் வழக்கு விசாரணை ஜூன் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவிநாசி, திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நி லைப் பள்ளி சமையலர் பாப்பாள் மீதான வன்கொடுமை வழக்கு விசாரணை, திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் அமைந்துள்ள எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. உரிய ஆவணங்களை இணைக்க வேண்டியிருப்பதால் விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என்று வழக்கறி ஞர்கள் கோரினர். இதையடுத்து மாலை 4 மணிக்கு வழக்கு  விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.  இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஓய்வுபெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் பரமசாமியிடம் விசா ரணை நடைபெற்றது. அடுத்த விசாரணை ஜூன் 5 ஆம் தேதி  நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலை கடையில் பருப்பு இல்லை: பொதுமக்கள் புகார்

நியாயவிலை கடையில் பருப்பு இல்லை: பொதுமக்கள் புகார் திருப்பூர், ஜூன் 1- தோட்டத்துப்பாளையம் நியாய விலை கடையில் மே  மாதத்திற்கான பருப்பு கிடைக்கவில்லை எனப் பொதுமக்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருப்பூர்  மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோட் டத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் 100க்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் உள்ளனர். இந் நிலையில், நியாய விலை அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற் கான பருப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து கடை விநியோ கிப்பவரிடம் கேட்டால் போதுமான பருப்பு வரவில்லை. வந்தி ருந்தால் கண்டிப்பாக போட்டிருப்போம் என கூறுகின்றனர். வெளி கடைகளில் ஒரு கிலோ பருப்பு ரூ.200க்கு விற்கப்ப டுகிறது. நியாய விலை கடையில் 30 ரூபாய் தான். ஏற்கனவே  போதுமான வேலை இல்லாமல் உள்ள சூழ்நிலையில் நியாய  விலை கடைகளில் கிடைக்கக்கூடிய அத்தியாவசிய பொருட் களும் முறையாக கிடைப்பதில்லை. அரசு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றனர்.

சிக்கண்ணா கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டில் 35 பேர் தேர்வு

சிக்கண்ணா கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டில் 35 பேர் தேர்வு திருப்பூர், ஜூன் 1- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இள நிலை பட்டப் படிப்புக்கான சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க் கையில் 35 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் சிக் கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டுக் கான இளநிலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன் லைன் மூலமாக பெறப்பட்டன. மாற்றுத் திறனாளி, விளை யாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள்,  தேசிய மாணவர் படையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றவர்க ளுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை  கல்லூரியில் நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற் றனர். விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்கள் உரிய மூலச்சான்றி தழ்களுடன் பங்கேற்றனர். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற் றவர்களின் சான்றிதழில் மாவட்ட விளையாட்டு அலுவலர்  கையொப்பமிட்டு பெற்று வந்தவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. பள்ளியில் தேசிய மாணவர் படையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற வர் சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்து கொண்டனர். ராணுவத்தி னரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு ஒதுக்கீட் டில் பங்கேற்றனர். சிறப்பு இடஒதுக்கீடு கலந்தாய்வுக்கு கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்ன தாக மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர் கள் விரும்பிய பாடப் பிரிவுகளுக்கு சேர்க்கை வழங்கப் பட்டது. மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 10 பேரும், விளை யாட்டுப் பிரிவில் 24 பேரும், தேசிய மாணவர் படை பிரிவில்  ஒருவர் என மொத்தம் 35 போ் தேர்வு செய்யப்பட்டனர். இதைய டுத்து அடுத்த கட்ட கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி முதல்  நடைபெற உள்ளது.

பல்லடம் அரசு கல்லூரியில் ஜூன் 10 முதல் கலந்தாய்வு

பல்லடம் அரசு கல்லூரியில் ஜூன் 10 முதல் கலந்தாய்வு திருப்பூர், ஜூன் 1-  பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடை பெறவுள்ள மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்ட வணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக் கையில், இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் 400 இல் இருந்து 303  மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஜூன் 10 ஆம் தேதியும், 302  இல் இருந்து 274 மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஜூன் 11 ஆம்  தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மேலும், தமிழ் பாடத்தில் 100 முதல் 75 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பி.ஏ. தமிழுக்கும், ஆங்கில பாடத்தில் 100 முதல் 55 மதிப்பெண்  பெற்ற மாணவர்கள் பி.ஏ.ஆங்கிலத்துக்கும் ஜூன் 12 ஆம் தேதி  கலந்தாய்வு நடைபெறுகிறது. 273 முதல் 263 மதிப்பெண் வரை  பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 13 ஆம் தேதி  நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் காலை 9 மணிக்கு சேர்க்கை அரங்கில் இருக்க வேண்டும்.  தாமதமாக வருபவர்கள், அந்நேரத்தில் சென்று கொண்டிருக் கும் மதிப்பெண் அடிப்படையில்தான் சேர்க்கைக்கு அனும திக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி

கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி திருப்பூர், ஜூன், 1-  கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் நில ஆவணம்  பெற்று மோசடியில் ஈடுபட்டவரை திருப்பூர் மாவட்ட குற்றப்பி ரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை தென்னம்பாளையம்  பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (62). இவரிடம், கடந்த  ஆண்டு மே மாதம்  பல்லடம், வேலப்ப கவுண்டன்பாளை யத்தை சேர்ந்த சிவக்குமார் (53) என்பவர் 2 கோடி ரூபாய்  கடன் வாங்கி தருவதாக கூறி நில ஆவணம் மற்றும் ரூ.10.75  லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் கூறியபடி கடன்  பெற்று தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதையடுத்து ரத்தி னசாமி, சிவகுமாரின் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். மேலும், ரத்தினசாமி போன்று பலரிடம் கடன் வாங்கி தருவ தாக கூறி, நிலத்தின் ஆவணம் மற்றும் குறிப்பிட்ட தொகையை  பெற்று சிவக்குமார் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ரத்தினசாமி திருப்பூர் காவல் துணை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதைய டுத்து திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிவக்குமார்  மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், தென்காசியில் தலைமறைவாக இருந்த சிவக்குமாரை தனிப் படை போலீசார் வியாழனன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார்  மீது பல மோசடி வழக்குகள் உள்ளது. இதனால் அவரை அடுத் தடுத்து வழக்குகளில் போலீசார் கைது செய்து வருகின்ற னர்.

இலவச நோட்டு, புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்

திருப்பூர், ஜூன் 1- பல்லடம் அரசுப் பள்ளியில் படிக்கும்  1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான நோட்டுப்  புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, அந் தந்த பள்ளிக்களுக்கு கொண்டுச் செல் லப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட  உள்ளதால், முன்னேற்பாடு பணிகளை பள்ளிக் கல்வித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நோட்டு, புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கி நடை பெற்று வருகிறது. பல்லடம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதியில் 85 அரசு  தொடக்க நடுநிலைப் பள்ளிகள் உள் ளது. இவற்றில் தமிழ் வழியில் 7,929  மாணவ, மாணவிகள், ஆங்கில வழி யில், 2,312 மாணவ, மாணவிகள் என மொத்தம் 10,241 மாணவர்கள் படித்து வருகின்றானர். இப்பள்ளிகளுக்கு மூன்று பருவங்களுக்கும் தேவை யான நோட்டு, புத்தகங்கள் கல்வித் துறையினர் சார்பில் வெள்ளிக்கிழமை முதல் அரசுக் கல்லுாரி வளாகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக திருப்பூரில் இருந்து பல்லடத்துக்கு வந்த நோட்டு, புத்தகங்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்றனர்.

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.13 ஆயிரம் கோடி வீழ்ச்சி

திருப்பூர், ஜூன் 1 – இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் (2023 – 24) ரூ.13  ஆயிரத்து 700 கோடி அளவுக்கு வீழ்ச்சி  அடைந்துள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட் டுக் கவுன்சில் (ஏஇபிசி) அமைப்பு, மத் திய வர்த்தக அமைச்சகத்தின் தரவு களை தொகுத்து இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி விபரத்தை வெளி யிட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஒவ் வொரு மாதத்திலும் அனுப்பப்படும் ஆயத்த ஆடைகள் அளவையும், வெளி யிட்டு வருகிறது. அதன் அடிப்படையில்  கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 2024ஆம் ஆண்டு மார்ச் முடிய நிதியாண்டில் அனுப்பப்பட்ட ஏற் றுமதி புள்ளி விபரத்தை வெளியிட் டுள்ளது. இதன்படி டாலர் மதிப்பில் 14 ஆயிரத்து 533.6 மில்லியன் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. அதற்கு முந் தைய நிதியாண்டான 2022 – 23-ல் 16 ஆயி ரத்து 193 மில்லியன் டாலர்கள் ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆகியுள்ளது. இதன் மூலம் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடு கையில் 1659.8 மில்லியன் டாலர் குறைந் துள்ளது. இதை ரூபாய் மதிப்பில் கணக்கிட் டால் ரூ.13 ஆயிரத்து 776 கோடியே 34  லட்சம் சரிவைச் சந்தித்திருக்கிறது. எனி னும் ஏஇபிசி அமைப்பு வெளியிட்டுள்ள ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி புள்ளிவி பரத்தில் சுமார் ரூ.10ஆயிரம் கோடி சரிவ டைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் உண்மையான நிலவரத்தைக் குறைத் துக் காட்டுவதற்காக அந்த அமைப்பு இதுபோல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்த கத்தில் ஏறத்தாழ 40 சதவிகிதம் அள வுக்கு பங்களிப்பு செய்து வரும் திருப்பூ ரிலும் ஏற்றுமதி அளவு இதேபோன்ற சரி வைச் சந்தித்திருக்கிறது. எனினும் ஏஇ பிசி நிறுவனம் திருப்பூரை மையப்ப டுத்தி தனியான தரவுகளை வெளியிட வில்லை. பல ஆண்டு காலமாகவே தொடர்ந்து நெருக்கடியைச் சந்தித்து வரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில்  மீளுமா என்ற எதிர்பார்ப்பு இங்குள்ள தொழில் துறையினரிடம் உள்ளது. நாடா ளுமன்றத் தேர்தலில் மோடி அரசு தோல்வி அடைந்து புதிய ஆட்சி அமைந் தால் இங்குள்ள பின்னலாடை தொழில்  புத்துயிர் பெறும் வாய்ப்பு உள்ளது என்று பின்னலாடைத் தொழில் துறையி னர், குறிப்பாக சிறு, குறு, நடுத்தர நிறு வனங்களை நடத்துவோர் எதிர்பார்க் கின்றனர்.

பனியன் நூல் விலையில் மாற்றமில்லை

பனியன் நூல் விலையில் மாற்றமில்லை திருப்பூர், ஜூன் 1 – ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் பனியன் தயாரிப் புக்குப் பயன்படும் பருத்தி நூல் விலை ஏற்கெனவே இருக்கும்  விலையிலேயே மாற்றமில்லாமல் தொடரும் என்று நூல் மில் கள் தெரிவித்துள்ளன. திருப்பூரில் பின்னலாடை தயாரிப்புக்கு மூலப்பொருளாக  இருக்கும் பருத்தி நூலின் விலையை நூற்பாலைகள் முன்பு  மாதம்தோறும் முதல் தேதியில் அறிவித்து வந்தனர். அதன்  பிறகு முன்னணி நூற்பாலைகள் சந்தை நிலவரத்தைப் பொறுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை நூல் விலையை  நிர்ணயித்து அறிவிப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் ஜூன் 1ஆம் தேதி நிலவரத்தைப் பொறுத்தவரை பின்னலாடை  உற்பத்திக்கான கேட்பு வழக்கமான நிலையிலேயே இருப்ப தால் நூல் விலையை மாற்றமில்லாமல் முந்தைய விலையே  தொடரும் என்று நூற்பாலைகள் தெரிவித்துள்ளன. நூல் வர்த்தகர்களிடம் கேட்டபோது, தொழில் துறையினர்  நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர். தேர்தல் முடிவைப் பொறுத்து தொழில் நிலைமையில் மாற்றம்  வரலாம். அதற்கேற்ப நூல் விலை அடுத்து வரும் 15 நாட்க ளுக்குப் பிறகு மாறும் என்று கூறினர்.

ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது  2075 கிலோ அரிசி, பைக் பறிமுதல் 

ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது  2075 கிலோ அரிசி, பைக் பறிமுதல்  திருப்பூர், ஜூன்.1 -  திருப்பூர், தாராபுரம் - அலங்கியம் ரோடு வழியாக ரேசன்  அரிசி கடத்தி வருவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பு லனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அந்த தகவல் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் துளசிமணி வழி காட்டுதலில் எஸ்.ஐ, பொன்குணசேகரன் மற்றும் போலீசார்  சீத்தக்காடு பாலம் அருகில் வாகன தணிக்கை மேற்கொண்ட னர். அப்போது அந்த ரோட்டில் பைக்கை நிறுத்தி சோதனை  செய்தபோது அதில் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய 1025 கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பைக் ஓட்டிய நபரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர் திருப்பூர், தாராபுரம், உடுமலை ரோடு, மாருதிநகர் பகு தியை சேர்ந்த கனகராஜ் (49) என்பதும் சுற்றுவட்டார பகுதிக ளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை  வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு வடமாநிலத்தவர் களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. இத னையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 1025 கிலோ  ரேசன் அரிசி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  அதே போல் எஸ்.ஐ கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தாராபுரம் - பூலவாரி ரோட்டிலுள்ள காலி இடத்தில்  சோதனை செய்தனர்.  அங்கு அரசால் இலவசமாக வழங்கக் கூடிய 1050 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்தி ருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு அரிசி பதுக்கி வைத் திருந்த சதாசிவம் (45) என்பவரை கைது செய்து. அவரிடம்  இருந்த 1050 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த னர்.

வறுமைகோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு இலவச போட்டோ, வீடியோ பயிற்சி

வறுமைகோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு இலவச போட்டோ, வீடியோ பயிற்சி திருப்பூர், ஜூன் 1 - திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட  கிராமங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக் களுக்கு திருப்பூர் அனுப்பர்பாளையத்திலுள்ள கனரா வங்கி யின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச போட்டோகிராப் மற்றும் வீடியோகிராப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 30 நாள் முழு நேரப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க, சேர்க்கை  நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சிக்கான நேர்காணல் வரும் திங்களன்று நடைபெறும். எழுதப்படிக்கத் தெரிந்த 18  வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் விண்ணப் பிக்கலாம். பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை. இந்த  பயிற்சியின் முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்ப டும். அத்துடன் பயிற்சிக்குப் பிறகு தொழில் தொடங்க கடன்  ஆலோசனைகள் வழங்கப்படும். இப்பயிற்சிக்கு விண்ணப் பிக்க “கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி  நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில்,, போக்குவரத்து  சிக்னல் அருகில், அவினாசி சாலை, அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர் -641652” என்ற முகவரிக்கு நேரில் வர வேண் டும். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி: 9489043923, 99525184 41, 8610533436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சீட்டு நடத்தி ரூ.83 லட்சம் மோசடி - பெண் கைது

சீட்டு நடத்தி ரூ.83 லட்சம் மோசடி - பெண் கைது கோவை, ஜூன் 1- சீட்டு முதிர்வடைந்த பின்னரும் அசல் மற்றும் வட்டி தொகையை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி ரூ.83 லட்சம் மோசடி வழக்கில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகுமரன். இவருடைய மனைவி சங்கீதா(43) வீட்டில் இருந்து இட்லி மாவு அரைத்து  விற்பனை செய்து வந்தார். மேலும், பலரிடம் மாதாந்திர சீட்டு  நடத்தி பணம் வசூல் செய்து உள்ளார். சீட்டில் சேர்ந்தவர் கள் சீட்டு முதிர்வடைந்த பின்னரும் அசல் மற்றும் வட்டி தொகையை சங்கீதா திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்த தாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். பின்பு காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சரவண குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இந்த மோசடி தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சங்கீதா ஏராளமா னவர்களிடம் மொத்தம் ரூ.83 லட்சம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்பு சங்கீதாவை போலீசார் கைது  செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

வாக்கு எண்ணும் பயிற்சி கூட்டம்

வாக்கு எண்ணும் பயிற்சி கூட்டம் ஈரோடு, ஜுன் 31- ஈரோட்டில் தபால் வாக்கு எண்ணிக்கையின் போது பின் பற்ற வேண்டிய முறைகள் பற்றிய பயிற்சி கூட்டம் ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்றது.      ஈரோடு மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து. இதனையடுத்து வரும் ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணும்  பணி நடைப்பெறும்.அப்போது பின்பற்ற வேண்டிய விதி முறைகளை பற்றி பயிற்சி கூட்டம் தொடர்ந்து  நடைபெற்று வரு கிறது. இதானையடுத்து வெள்ளியன்று (மே 31) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி கூட்டம் நடை பெற்றது. அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் தெரி வித்தது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளார்  அவர்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க  வேண்டும். மேலும், பணியாளார்கள் கைபேசியை எடுத்து வர அனுமதி கிடையாது. பின்னர் 8 மேதைகள் மற்றும்  ETPB அமைக்கப்பட்டு இருக்கும்.பின்னர் தபால் வாக்கு கள் பிரித்து பின் ஒவ்வொரு மேஜையில்  எண்ணும் பணி துவங்கப்படும். மேலும் பணியாளார் அவர்களுக்கான எழுதும் பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் உள்ளாத என்று சரிபார்க்க வேண்டும். இப்பயிற்சியில், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியா ளர் ரகுநாதன், தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர்,  உதவி  தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பணியாளார்கள்  கலந்து கொண்டனர்.

கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கஞ்சா பறிமுதல்: இருவர் கைது கோவை, ஜூன் 1- 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு  வந்த இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு  கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்ப டையில் சூலூர் காவல் நிலைய காவல்துறையினர் செங்கத் துறை நால்ரோடு சந்திப்பு பகுதியில் சோதனையில் ஈடுப் பட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக கஞ்சாவை விற்ப னைக்கு கொண்டு வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிர வீன்(21) மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அக்ஷய் குமார் (28) ஆகியோரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை  காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் போதை  பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் கடந்த மே 1  முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதி ரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 73 நபர்கள் மீது  45 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 100.745 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக் லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனை யில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்ப டுவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது
லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது கோவை, ஜூன் 1- லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை போலீசார் கைது  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே கரையூரை சேர்ந்த வர் தீபக் திலக் (45). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து  பெங்களூரை தலைமையிடமாக கொண்டு பல பகுதிகளில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி  வந்தார். இந்றுவனத்தில் ரூ.2 ஆயிரம் முதல் பணத்தை முத லீடு செய்தால் 15 மாதம் கழித்து முதலீடு தொகையை 3 மடங் காக வழங்குவதாக விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி திருப்பூர், கோவை, பரமத்திவேலூர், திண் டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பணத்தை கடந்த 2022 ஆண்டு முதல் முதலீடு செய்தனர். சில  மாதங்களுக்கு பணம் திருப்பி வழங்கப்பட்ட நிலையில், அதன் பிறகு பலருக்கு முதலீடு செய்த பணத்தை கூட  திருப்பிக்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாதிக் கப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலை யங்களில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில், கடந்த சில  நாட்களுக்கு முன்பு சேலத்தில் தீபக் திலக்கை போலீசார் கைது  செய்தனர். இந்நிலையில், கோவையை சேர்ந்த சிவசண்முகம் என்ப வர் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார்  அளித்தார். அதில், சிவசண்முகம் மற்றும் அவருடைய குடும் பத்தினர் 11 பேர் சேர்ந்து ரூ.35 லட்சத்தை தீபக் திலக்கின்  நிறுவனத்தின் முதலீடு செய்ததாகவும், ரூ.12 லட்சம் திருப் பிக்கொடுத்த நிலையில் ரூ.23 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற் றியதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தர வின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அம்பிகா, இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீபக் திலக்கை  வெள்ளியன்று கைது செய்து சிறையில் அடைத்தார். போலீஸ்  காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பலரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த விவரங்கள் தெரியவரும் என்று  போலீசார் தெரிவித்தனர்.

மூளைச்சாவு அடைந்த 11 மாத குழந்தையின் இதயத்தை ஒரு வயது குழந்தைக்கு பொருத்தம்

கோவை, ஜூன் 1- மூளைச்சாவு அடைந்த 11 மாத குழந்தை யின் இதயம் கோவையிலிருந்து விமானம்  மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு  வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது. கோவை மாவட்டத்தையை சேர்ந்தவர் சர வணன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியும் தனி யார் மருத்துவமனையில் நர்சிங் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு 11 மாதமான ஆதிரா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இந்த குழந்தை வீட்டில் நாற்காலியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை கீழே விழுந்தது. இதில், காயம்  அடைந்த குழந்தையை அவரது பெற்றோர்  கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் கடந்த வாரம் சிகிச்சைக்கு சேர்த்தனர்.  அங்கு மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு  சிகிச்சை அளித்து வந்த நிலையில், குழந்தை  ஆதிரா மூளைச்சாவு அடைந்ததாக மருத்து வர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, உடல் உறுப்புதானம் குறித்து பெற்றோரிடம் மருத் துவர்கள் விளக்கினர். இதனை ஏற்று, குழந் தையின் பெற்றோர் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். பின்னர், மருத்துவர்கள் குழந்தையின் இத யம், கிட்னி ஆகியவற்றை அறுவை சிகிச்சை  செய்து எடுத்தனர். இதற்கிடையில், சென்னை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயி ருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று  வரும், ஒரு வயது பெண் குழந்தைக்கு இதயம்  தேவைப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, ஆதிராவின் இதயத்தை கோவையில் இருந்து சென்னைக்கு விமா னம் மூலம் அனுப்ப முடிவு செய்தனர். அதன் படி, கோவை தனியார் மருத்துவமனையில் இருந்து குழந்தையின் இதயம் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கி ருந்து விமானம் மூலமாக சென்னை கொண்டு  செல்லப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டது. அதனை தொடர்ந்து, மருத்துவர் கள் இதயத்தை சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு வயது  குழந்தைக்கு பொருத்தினர். இதன் மூலம் அந்த குழந்தை உயிர் பிழைத்தது.

ஓடைகளில் மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்றிடுக

உதகை, ஜூன் 1- கூடலூர் நகர் மற்றும் அதனை ஒட்டி ஓடும்  சிற்றாறுகள், ஓடைகளில் புதர்கள் மண்டியுள் ளதால் அவற்றை தூர்வாரி சீரமைக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக் குட்பட்ட காசிம்வயல், துப்பு குட்டிபேட்டை, கல்குவாரி, முதல் மைல், மங்குழி, காளம் புழா, புறமான வயல் என்பன உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் வழியாக ஓடும் ஓடைகள்  சிற்றாறுகளில் தற்போது புதர்கள் வளர்ந்து  காணப்படுகிறது. கடந்த வருடம் மழை  குறைவு காரணமாகவும் கடுமையான வெயில் காரணமாகவும் ஆறுகள் சிற்றோடை களில் ஏராளமான புதர்கள் வளர்ந்து செடி கொடிகள் நிறைந்து காணப்படுகிறது. தற் போது, தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மழை காலத்தில் வெள்ளப் பெருக்கு அதிகரித்தால் இந்த புதர்கள் கரை யோர பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு  உள்ளது. எனவே, பருவமழை துவங்குவ தற்கு முன் ஆறுகள் சிற்றோடைகளில்  உள்ள புதர்களை அகற்றி சீரமைப்பு நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்ப குதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சிஐடியு வாழ்த்து
அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சிஐடியு வாழ்த்து ஈரோடு, ஜுன் 1- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிஐடியு சார்பில் ஓட்டுநர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜுன் 1 ஆம் தேதி யன்று ஓட்டுநர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி யாக அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கு சிஐடியு அரசு  போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்த னர். ஓட்டுநர் தின பதாகைகளை ஒட்டி பணிமனைகளில் வண்டி கள் புறப்படும்போது, ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில், ஈரோடு மண்டலத் தலை வர் கே.மாரப்பன், பொதுச் செயலாளர் டி.ஜான்சன் கென்னடி,  துணைச் செயலாளர் இளங்கோவன், ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பாஜக நிர்வாகி மீது புகார்

பாஜக நிர்வாகி மீது புகார் கோவை, ஜூன் 1- சமூக வலைதளத்தில் சீமான் குறித்து அவதூறாக பதி விட்ட பாஜக, நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோவை மாந கர காவல் ஆணையரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.  நாம் தமிழர் கட்சி கோவை மண்டலச் செயலாளர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணை யர் அலுவலகத்தில் அளித்த புகாரில் தெரிவித்திருப்பதா வது, பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா சமூக வலைதளத் தில் சாட்டை துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குறித்து அவதூறு பரப்பி வருகிறார். அவரை கண்டிக்காமல் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊக்கப்படுத்தி வருகிறார். எனவே, திருச்சி சூர்யா, மாநிலத்  தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது தக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் ரத்து

வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் ரத்து சேலம், ஜூன் 1- சேலம் வழியாக இயக்கப்படும் கோவை - மங்களூரு உள்ளிட்ட வாராந்திர விரைவு சிறப்பு ரயில்கள் ரத்து செய் யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மங்களூரு -  கோவை இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜூன் 8, 15, 22 மற்றும் 29 ஆம் தேதிகளிலும், மறுமார்க் கத்தில், கோவை - மங்களூரு இடையிலான வாராந்திர சிறப்பு ரயிலும் வரும் ஜூன் 8, 15, 22 மற்றும் 29 ஆம் தேதிகளிலும் ரத்து  செய்யப்படும். இதேபோல கொச்சுவேலி - ஹஸ்ரத் நிஜா முதீன் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 7, 14, 21 மற்றும் 28  ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படும். மறுமார்க்கத்தில் ஹஸ் ரத் நிஜாமுதீன் - கொச்சுவேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் வரும் 10, 17, 24 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதி களில் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

காட்டுயானையை கண்ட விவசாயிகள் அச்சம்

காட்டுயானையை கண்ட விவசாயிகள் அச்சம் ஈரோடு, ஜூன் 1- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அம்மன் கோயில் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் நுழைவதை கண்ட விவசாயிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாள வாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இதனால், விவசாயிகள் பயிர் களை பாதுகாக்க இரவு நேரத்தில் காவல் இருந்து யானைக ளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நெய்தாளபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உள்ள தொட்டத்தாய் அம்மன் கோயில் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் நுழைந்ததை கண்ட விவசாயிகள் அச்சமடைந் தனர்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் புகார்

சேலம், ஜூன் 1- கோரிமேடு அருகே மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். சேலம் மாவட்டம், கோரிமேடு அருகே உள்ள பொன்நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள்  வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு ஒன்றை அளித்தனர். இதன்பின்  அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோரிமேட்டில் ஏற்கனவே 2 மதுபானக்கடை கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிதாக அந்த கடைக்கு எதிரே மதுபானக் கடை மற்றும் மதுக்கூடம் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே செயல்பட்டு வரும் 2 கடையினால் அந்த பகு தியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள் ளது. பகல் நேரத்திலேயே பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவிகள் அந்தப் பகுதியில் செல்ல  முடியாத சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே அந்த கடைகளை அகற்றச்சொல்லி பொது மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தற் போது புதிதாக 3 ஆவது கடையை திறக்க  முயற்சி செய்து வருகிறார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் போராட்டம் நடத்துவதை  தவிர வேறு வழியில்லை, என்றனர்.

சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு

கோவை, ஜூன் 1- பெரிய அளவில் மழை இல்லாததால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 9.48 அடி யாக சரிந்து உள்ளது. கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரை யொட்டி உள்ள 20- க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு சிறுவாணி அணையின் நீர் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணை யில், 49.50 அடி கொள்ளளவு கொண்டு இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மே மாத்தில் மழை பொய்த்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் துவக்கத்தில் 10 அடியாக சரிந்தது. கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்ததால் அணையில் 10.4 அடியாக இருந்தது. அதன் பின் பெரிய அளவில் மழை இல்லாததால் வெள்ளியன்று (மே 31) நீர்மட்டம் 9.48 அடியாக சரிந்து உள்ளது. என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோடை மழையில் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அணையின் நீர்மட்டம் உயர வில்லை. இதனால் சிறுவாணி குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டு நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

டயர் பஞ்சரானதால் சார்ஜா செல்லும் விமானம் தாமதம்

கோவை, ஜூன் 1- கோவையில் இருந்து அதிகாலை 4.15 மணிக்குச் செல்ல வேண்டிய ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமா னம் 160 பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது ஓடுபாதையில் இருந்து புறப்படும் போது ஸ்க்ரூ அழுத்தியதால் டயர் பஞ்சர் கண்டறியப்பட்டது. இத னையடுத்து, பயணச்சேவையை நிறுத்தி வைத்தனர். கோவை - ஷார்ஜா இடையே வாரத் தின் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்படுகிறது. இந்த விமா னம் தினமும் அதிகாலை 3. 45 மணியள வில் கோவையில் தரையிறங்கும். மீண்டும் காலை 4.30 மணி அளவில் ஷார்ஜா புறப்பட்டு செல்லும். சனியன்று காலை 150 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் முன்பக்க டயர் பஞ்சர் கண்டறியப் பட்டது. விமானிகள் கொடுத்த தகவலின் பெயரில் தொழில்நுட்ப குழுவினர் உடனடியாக பழுது சீர் செய்யும் பணி யில் ஈடுபட்டனர். பயணிகள் அருகில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட் டனர். இரவு 9 மணி அளவில் மீண்டும் ஷார்ஜா புறப்பட்டு செல்லும் என தெரிவித்தனர்.  இதுகுறித்து விமான நிலைய அதி காரிகள் கூறும்போது, கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வழக்கமாக 168 பயனுடன் விமானம் புறப்பட்டு செல்லும் இன்று 150 பயணிகள் விமானத்தில் இருந்த நிலையில் விமானம் ஓடுதள பாதையில் புறப்பட தயாராக கொண்டு செல்லப்பட்டபோது டயர் பிரஷர் வித்தி யாசம் உள்ளதை விமானிகள் கண்ட றிந்தனர். உடனடியாக தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்த போது முன்பக்க டயரில் இருந்த பெரிய ஸ்க்ரூ ஒன்று டயரை கிழித்து இருந்தது தெரிய வந்தது. உடனடியாக சீரமைப்பு பணி தொடங்கியது. விமானிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஓய்வு தர வேண்டும் என்பது சட்டம். எனவே அவர்கள் பணி நேரம் முடிந்த காரணத்தால் ஓய்வுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அதே போல் பயணிகள் அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். இரவு 9 மணி அளவில் மீண்டும் விமானம் ஷார்ஜா புறப்பட்டு செல்லும் என எதிர்பார்க்கிறோம். என்றனர். விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில் நுட்ப கோளாறு காரணமாக, அந்த விமானம் கோவை விமான நிலையத் தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, பின்னர் சார்ஜாவிற்கு செல்ல உள்ளது.

அனுமதியின்றி பாறைகளுக்கு வெடி: வீடுகள் கடும் பாதிப்பு

நாமக்கல், ஜூன் 1- தனியாருக்கு சொந்தமான நிலத் தில் கடந்த ஓராண்டு காலமாக பாறை கள் வெட்டி எடுக்கப்பட்டு விற்ப னை செய்யப்பட்டு வருகிறது. இத னால் அப்பகுதியில் வீடுகள், பறவை இனங்கள் கடும் பாதிக்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேலம் பிரதான சாலையில் நீதிமன் றம் அடுத்துள்ள அகரம்நகர் ஸ்ரீ மகாலட்சுமி நகரில், கட்டனாச் சம்பட்டி கிராம எல்லையில் தனியா ருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த ஓராண்டு காலமாக பாறைகள் வெட் டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகிறது.   பல வீடுகள் சூழ்ந் துள்ள இப்பகுதியில் தினந்தோறும் பலமுறை வெடிகள் வைக்கப் பட்டு பாறைகள் உடைத்து எடுத் துச் செல்லப்படுவதாக கூறப்ப டுகிறது. தினந்தோறும் பலமுறை வெடிகள் வெடிக்கப்பட்டு வரும் சூழலில் பொதுமக்கள் நடமாடவே பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள பறவையினங்களும் பாதிக்கப் ப்படுகிறது. அதிர்வு பெரும் அச்சத் தை இப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது. வெடி வைக்கும் பொழுது முன் னெச்சரிக்கையாக அறிவிப்பு கூட  அருகில் வசிக்கும் பொது மக்க ளுக்கு தெரிவிப்பதில்லை என கூறப்படுகிறது. இப்பகுதியில் விபத் தோ, உயிர் சேதமோ ஏற்படுவதற்கு முன்பாக வெடி வெடித்து பாறைகள் உடைப்பதை தடுக்க வேண்டும். அரசின் அனுமதி பெற்று முறையாக அறிவிப்பு செய்து செயல்பட வேண் டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

 
 
 


 

;