districts

img

சேலத்தில் இளம்பெண் ஒருவருக்கு ஒமைக்ரான்

சேலம், டிச.23- அமெரிக்காவில் இருந்து சேலம் திரும்பிய பெண்ணிற்கு ஒமைக் ரான் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. தமிழகத்தில் கோவிட் 19 வைர சின் புதிய உருமாற்றியான ஒமைக் ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில், சேலம் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இதையடுத்து அவர் சேலம்  அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, தனிமைப்படுத்தி மருத் துவர்கள் சிகிச்சை அளித்து வரு கின்றனர்.  முன்னதாக, இவர் அமெரிக்கா விலிருந்து சென்னைக்கு திரும் பியதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பாதுகாப் பான முறையில் சேலம் வருகை புரிந்தார். இதன்பின் சேலத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண் டிருந்த நிலையில், கொரோனா பரி சோதனை முடிவுகள் புதனன்று தெரியவந்தது. இதில், இளம் பெண் ணிற்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளார். ஏற்கனவே 2 கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ள நிலையிலும், இளம் பெண்ணிற்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக் கது. 

;