கோவை, செப்.8- புக்கிங் கட்டணத்திற்கு மேல் பணம் கேட்டதால் பய ணத்தை ரத்து செய்த வாடிக் கையாளரை அழைத்து ஓலா ஓட்டுனர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கோவை கணபதி பகு தியைச் சேர்ந்த 26 வயது பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் ஒப்ப ணக்காரர் வீதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கி யுள்ளனர். பின்னர் வீடு திரும்ப ஓலா செயலியில் ஆட்டோ ஒன்றை பதிவு செய்துள்ளனர். ஓலாவில் இருந்து சந்தோஷ் (30) என்ற ஆட்டோ ஓட்டுநர் இவர்களுக்காக வந்துள்ளார். ஆனால் அவர் புக் செய்த பணத்தை விட 100 ரூபாய் அதிகமாக தர வேண்டுமென கூறியுள்ளார். இதனால் புக்கிங் செய்த அப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் நிர்ணயித்துள்ள வாடகைக்கு மேல் அதிகம் தரமுடியாது என மறுத்து ஓலா நிறுவனத்தின் ஆட்டோவிற்கான பதிவை ரத்து செய்துள்ள னர். மேலும், ரத்து செய்து விட்டு வேறொரு ஆட்டோ ஏறி சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் புக்கிங் செய்த போது வந்த அப்பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்டு அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியாதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் பெரியகடை வீதி போலிசார் வழக்கு பதிவு அந்த ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.