districts

img

சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சாலை சீரமைப்பு

திருப்பூர், செப். 3 – திருப்பூர் மாநகரில் மோசமான நிலையில் இருந்த சாலையை சீரமைக் காவிட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சீரமைப்புப் பணியைத் தொடங்கினர். திருப்பூர் மாநகராட்சி 9ஆவது வார்டு, வெங்கமேடு முதல் செட்டிப்பா ளையம் வரை உள்ள மாநில நெடுஞ்சா லையில் பாதாளச் சாக்கடை, குடிநீர்  குழாய் போன்ற திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பகுதிகளில், முறை யாக பள்ளங்களை மூடி செப்பனிடப்ப டவில்லை. இதனால் இந்த சாலையின் பல பகுதிகள் குண்டும், குழியுமாக விபத்து ஏற்படுத்தும் அபாயத்தில் உள் ளன. எனவே இந்த சாலையை செப்ப னிட்டு புதிய தார்ச்சாலை அமைத் திட மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்  துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும். இனியும் இந்நிலை தொடர்ந் தால் சம்பந்தப்பட்ட துறை அலுவல கங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  முற்றுகைப் போராட்டம் நடத்தும் என்று  வெங்கமேடு பகுதி கிளைகள் எச்ச ரிக்கை பதாகை அமைத்திருந்தன. இதையடுத்து மண்டல உதவி ஆணையர் மற்றும் உதவிப் பொறியா ளர் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர் கள் சனிக்கிழமை இங்கு வந்து மார்க் சிஸ்ட் கட்சியினருடன் பேச்சுவார்த்தை  நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கட்சி யின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே. மாரப்பன், வெங்கமேடு பகுதி கட்சி  கிளைச் செயலாளர் என்.பாலசுப்பிர மணியம், மூத்த உறுப்பினர் அப்பன் என் கிற என்.பாலசுப்பிரமணியம், துரை,  ஸ்ரீதர், பாலாஜி ஆகியோர் பங்கேற் றனர். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உடனடியாக ஜேசிபி இயந்தி ரம் கொண்டு வரப்பட்டு மோசமான நிலையில் உள்ள பகுதிகள் சீரமைக்கப் பட்டன. மேலும் நெடுஞ்சாலைத் துறை  உதவி செயற்பொறியாளர் திங்கள்கி ழமை நேரில் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப் பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

;