உதகை, அக்.11- மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் நீல கிரி மாவட்ட 3 ஆவது பேரவை, உதகை தேவாங்கர் மண்டபத்தில் மாவட்ட தலைவர் எம்.சசிகலா தலை மையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை மூத்த தலைவர் லதா ஏற்றி வைத்தார். பேரவையை துவக்கி வைத்து சங்கத்தின் பொறுப்பாளர் கே.சுந்தரம் உரையாற்றினார். அங் கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் டெய்சி சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா தலைவர் கே.ராஜேந்திரன், சிஐடியு ஸ்டெர்லிங் பயோடெக் சங்க பொதுச் செயலாளர் யூ.மூர்த்தி, சிஐடியு மாவட்ட பொருளாளர் ஏ.நவீன் சந்தி ரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றி னர். இப்பேரவையில், எரிவாயு சிலிண் டரை சிவில் சப்ளை மூலம் அங்கன் வாடி மையங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். பழுதடைந்த கைபேசிக்கு பதிலாக புதிய கைபேசி வழங்க வேண்டும். ஊதியத்திற்கு அதிகமாக தொழில் வரி பிடித்தம் செய்யக்கூடாது. தொழில் வரி பற் றிய விபரம் வழங்க வேண்டும். ஊட் டச்சத்து செலவுகளை அரசே ஏற்க வேண்டும். சாக்கு பை உட்பட பயன் படுத்தப்பட்ட பொருட்களை மையத் திற்கே வந்து சேகரிக்க வேண்டும். மே மாதம் முழுவதும் கோடை விடு முறை வழங்க வேண்டும். பதவி உயர்வு இல்லாத பட்சத்தில் சத்து ணவு அமைப்பாளராக பணி இட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக கவிதா, பொதுச் செயலாளராக எம்.சசிகலா, பொரு ளாளராக சந்திரலேகா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராக விஜயா உட்பட 9 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், சங்கத் தின் மாநில உதவித்தலைவர் சித்ரா நிறைவுரையாற்றினார்.