ஈரோடு, செப்.12- ஈரோடு கருங்கல்பாளையத்தில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மகாகவி பாரதியார் நினைவு தினம் செப்.11 ஆம் தேதி யன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பாரதியார் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் ஈரோடு கருங்கல்பாளை யத்தில் உள்ள நூலகத்திற்கு வந்திருந்தார். அங்கு மனித னுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் உரையாற்றினார். அவ ரது இறுதி பேச்சு ஈரோடு, கருங்கல்பாளையத்தில் அமைந் துள்ள நூலகத்தில் நடைபெற்றது. அதன் நினைவாக அந் நூலகத்தில் அவருக்கு மார்பளவு சிலை வைக்கப்பட்டுள் ளது. அந்த சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.