districts

img

பருவமழையினால் பாதிப்பு இல்லை

உதகை, ஜூலை 7- நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழையினால் பெரிய ளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறிய தாவது, நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை கடந்த இரண்டு,  மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. ஆனால், இது வரையில் பெரிய அளவில் எந்த வொரு பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த ஜூன் 2023 முதல் இது வரை  மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு கள் குறித்து கணக்கெடுக்கப்பட் டுள்ளது.  இதில் கடந்த 24 மணி நேரத் தில் 7 இடங்களில் மரங்கள் விழுந் துள்ளன. 2 இடங்களில் பகுதி  அளவில் வீடுகள் சேதமடைந் துள்ளன. ஜூன் மாதம் முதல் இது வரை 16 வீடுகள் பகுதி அளவு சேத மடைந்துள்ளன. அதேபோல் கடந்த  மாதம் முதல் இன்று வரை 28 இடங் களில் மரங்கள் விழுந்துள்ளன. பாதிப்புகளும் மிக குறைந்த அள வில் ஏற்பட்டுள்ளன. மக்களை முகாம்களில் தங்க வைக்கும் அளவிற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

மேலும், இயற்கை பேரிடர்களினால் மரம்  சாலைகளில் விழுந்தால் உடனடி யாக அப்புறப்படுத்த தேவையான  மின் ரம்பம் உட்பட்ட இயந்திரங் களும், ஜேசிபி ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அபாயகரமான மரங்களை கண்ட றிந்து அதனை அகற்றும் பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. மேலும், அவசர காலங்களில்  பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு  மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இயற்கை இடர்பாடு களினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர், ஏற்கனவே  நமது மாவட்டத்துக்கு வருகை தந்து  இரண்டு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர்.  மேலும், சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங் களை அகற்ற வருவாய் கோட் டாட்சியர் தலைமையில் குழுக்கள்  அமைக்கப்பட்டு, மழை காலத் திற்கு முன்பாகவே உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய 3  கோட்டங்களிலும் 200க்கும் மேற் பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி ஏதேனும் அபாயகரமான மரங்கள் இருக்கும்  பட்சத்தில் வருவாய்த்துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு  அம்மரங்களை அகற்ற நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் தென் மேற்கு பருவமழையை முன்னிட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன, என்றார். 

;