districts

img

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு புதிய குடிநீர் திட்டம் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

மே. பாளையம், மே 15- கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் நகராட்சிக்கு புதிதாக ரூ. 22 கோடியே 20 லட்சம் செலவில் அமைக்கப்படும் புதிய குடிநீர் திட்டப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மேட்டுப்பாளையம் நகராட் சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு  வசிக்கும் சுமார் இருபதாயிரம் குடும்பங்களுக்கு பவானியாற்றில் இருந்து ஒரு கோடியே இருபது லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக விநி யோகிக்கப்பட்டு வருகிறது. தற் போது தண்ணீர் எடுத்து வரும்  இடத்தில் நகரில் இருந்து வெளியே றும் கழிவுகள் மற்றும் ஆலைக்க ழிவுகள் கலப்பதால், குடிநீர் சுகாதா ரமானதாக  இல்லை என்ற புகார்  எழுந்தது. இதனால் பழைய நீரேற்று நிலையத்தை இடம் மாற்ற  வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி மக்களால் வலியுறுத்தப் பட்டு வந்தது.  இதனையடுத்து கழிவுகள் ஏதும் கலக்காமல், பவானி ஆற்று  நீர் தூய்மையாக வரும் விளாம ரத்தூர் என்னுமிடத்தில் தண்ணீர் எடுக்க நகராட்சி நிர்வாகம் திட்ட மிட்டு, தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு அனுமதியளித்த அரசு இதற்காக ரூ. 22.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து புதிய  குடிநீர் திட்டப்பணிகள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு துவக் கப்பட்டு தற்போது விளாமரத்தூர் பகுதியில் பவானியாற்றில் கிணறு  மற்றும் புதிய  நீரேற்று நிலையம்  அமைக்கும் பணிகள் விறுவிறுப் பாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 சதவீத பணிகள்  நிறைவடைந்துள்ள நிலையில் மழைக்காலம் துவங்கும் முன் பணி களை முடிக்க திட்டமிடப்பட்டுள் ளது. இங்கு எடுக்கப்படும் தண்ணீர் நகரப் பகுதியில் உள்ள சாமண்ணா சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்படும். பின்னர் ஆற்று நீர் சுத்திகரிக்கப்பட்டு குடி நீராக மக்களுக்கு விநியோகிக் கப்பட உள்ளது.