districts

காளானில் பிஸ்கட்

கோவை, ஜூலை 10- காளானில் மதிப்பூட்டப் பட்ட பொருட்கள் தயா ரிப்பு பயிற்சி வேளாண் பல் கலையில் வழங்கப்படுகி றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை யில் இருந்து மதிப்பூட்டப் பட்ட பொருட்கள் தயா ரிக்கும் பயிற்சி வரும் 12,13 ஆகிய தேதிகளில் நடக்கி றது. இப்பயிற்சி பல்கலை., யில் உள்ள அறுவடை பின் சார் தொழில்நுட்ப மையத் தில் காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை நடக்கி றது. இதில், முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ் கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ் ஆகியவையும், காளானில் காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறு காய், பிழிதல் தொழில்நுட் பம் குறித்த பயிற்சிகள் வழங் கப்படுகிறது. பயிற்சி கட்ட ணம் ரூ.1,770 என தெரிவிக் கப்பட்டுள்ளது.