districts

img

மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது

மேட்டுப்பாளையம், செப்.7- மண் சரிவால் தடைபட்ட மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. ஆனால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் தாமதமாக புறப்பட்டு சென் றது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் திலிருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலைரயிலில் பயணித் தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் காட்டு கின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளை யத்தை சுற்றியுள்ள மலைக்காடுகள் மற்றும் நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரண மாக கடந்த செப்.5 ஆம் தேதியன்று அதி காலை கல்லார் மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே மலைரயில் கடந்து செல்லும் இருப்பு பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டது. இதனால் அன்றைய தினம் மேட் டுப்பாளையத்திலிருந்து உதகை வரையி லான மலைரயில் போக்குவரத்து ரத்து செய் யப்பட்டது.

மண் சரிவின் போது பெரும் பாறைகள் தண்டவாளத்தின் மீது உருண்டு கிடந்ததால் அவற்றை வெடி வைத்து தகர்க்கும் பணி யில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்ட நிலை யில், செப்.6 ஆம் தேதி சீரமைப்பு பணி காரண மாக ரயில் சேவை தடைபட்டது. இந்நிலை யில், செவ்வாயன்று மாலையுடன் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலை யில், புதனன்று காலை வழக்கம் போல் மலை ரயில் சேவை துவங்கியது. ஆனால், ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பினை முன்கூட் டியே ரயில்வே நிர்வாகம் உறுதியாக தெரி விக்காத காரணத்தினால் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகள் பல ரும் குழப்பமடைந்து, தங்களது டிக்கெட் டினை ரத்து செய்திருந்தனர். இதனால் இன்று சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு குறைந்தே காணப்பட்டது.  சென்னையிலிருந்து நீலகிரி விரைவு  ரயில் மூலம் புதனன்று காலை மேட்டுப்பா ளையம் வந்தடைந்த பயணிகள் சிலர் மட்டும் தாங்கள் ஏற்கனவே ரத்து செய்திருந்த மலை ரயில் டிக்கெட்டினை மீண்டும் புதுபித்து பய ணம் மேற்கொண்டனர். இதனால் வழக்கமாக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலி ருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் மலை  ரயில், அரை மணிநேரம் தாமதமாக 7.40 மணிக்கு 120 சுற்றுலா பயணிகளோடு உதகை நோக்கி புறப்பட்டு சென்றது.

;