உடுமலை, பிப்.26 - திருமூர்த்திமலை அமணலிங் கேஸ்வரர் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றன. மேலும், சில குரங்குகள் சோர்வுடன் காணப்பட்டதைத் தொடர்ந்து, வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உடுமலை அருகே உள்ள சுற்றுலாத் தலமான திருமூர்த்தி மலை அடிவாரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பஞ் சலிங்கம் அருவி பகுதியிலும் ஆயிரக் கணக்கான குரங்குகள் இருக்கின் றன. இந்நிலையில், கடந்த சில நாட்க ளாக குரங்குகள் மர்மமான முறை யில் உயிரிழந்து வருவதாக கூறப்படு கிறது. இங்கு இருக்கும் அடர்ந்த வனப்பகுதிக்குள் குரங்குகள் உயிரி ழந்ததால் வெளியே தெரியவில்லை. இருப்பினும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சில குரங்குகள் உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த உடுமலை வனத்துறையினர் செவ்வாயன்று திருமூர்த்தி மலை பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் குரங்குகள் மர்மமான முறை யில் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட் டது. மேலும், அங்கு சுற்றிக் கொண்டி ருந்த குரங்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, நடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குரங்குகளின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென் னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், குரங்குகள் உயிரி ழந்த தகவல் கிடைத்ததும் திரு மூர்த்தி மலை பகுதியில் ஆய்வு செய் யப்பட்டது. குரங்குகளை பரிசோதிக் கையில், வைரஸ் நோய் பரவி இருப் பது தெரியவந்தது. மேலும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னை யில் உள்ள சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை சுற்றுலாப் பயணிகள் கொடுக் கும் தின் பண்டங்களை சாப்பிடுவ தால் புட் பாய்சன் ஆகி இருக்க லாம். பல குரங்குகள் நடக்க முடியா மல் உடல் நிலை சோர்வாக காணப்ப டுகிறது. பல குரங்குகளுக்கு பழங் கள் மூலம் மாத்திரைகள் கொடுக்கப் பட்டு வருகிறது. மேலும், குரங்கு களை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு களை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் கள்.