districts

img

இளைஞர்களை அடிமையாக்கும் நவீன புகையிலைப் பொருள்!

இன்றைய காலகட்டத்தில் புகை யிலை மற்றும் மதுபானம் போன்ற வைக்கு பலரும் அடிமையாகி உள்ள னர். குறிப்பாக இளைஞர்கள் அதிகள வில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குறிப்பிடத்தகுந்த பெயரைக்கூறினால் இளைஞர்கள் பெரும் உற்சாகம டைந்துவிடுகின்றனர். அதுவே, சின்ன தலைகாணி என்று அழைக்கப்டும் “கூலிப் (COOL LIP)” எனப்படும் நவீன புகையிலைப் பொருள். இதை கண்டு பிடித்தவர் அனைவரையும் கவரும் வகையில் பெயரை வைத்துவிட்டான். இந்த பெயரினால், அந்தவகையான புகையிலைப் பொருளை வாய்க்குள் வைத்தால் குளிர்ச்சி ஏற்படும் என முதலில் நினைத்துவிடுகின்றனர். அதை பயன்படுத்தும் நபர்கள், “இது புத்துணர்ச்சி தருகிறது” மற்றும் “சுறு சுறுப்பாக இருக்கலாம்” என்பார்கள். அதனால் நாமும் முயற்சி செய்யலாம் என்று தொடங்கி, பின் அதற்கு அடி மையாகிவிடுகின்றனர். இரண்டு வகையான புகையிலைப்  பொருட்கள் உண்டு. ஒன்று புகைபிடிப் பது; அதாவது பீடி, சிகரேட் போன் றவை. இரண்டவது ஹான்ஸ் மற்றும்  கூலிப் போன்ற மெல்லும் புகையிலைப் பொருட்கள். புகையிலைப் பொருட் களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முயற்சிக்க, அதில் சேர்க்கப்படும் பொருட்களே காரணம் ஆகும். அதுவும் குறிப்பாக அதில் கலக்கப்படும் நிக் கோடெக்ஸ் (Nicotex) என்ற வேதிப் பொருளாகும். மேலும், இதில் சந்தன எண்ணெய், குங்குமப்பூ மற்றும் “மெந் தால்” போன்ற வாயில் குளிரூட்டும் வகையான பொருட்கள் சேர்க்கப்படு கின்றன. நிக்கோடெக்ஸ், நாம் உட லில் இருக்கும் நரம்புகளை ஈர்க்கும். இதுதான் சுறுசுறுப்பு மற்றும் புத்து ணர்ச்சி போன்ற பிரம்மையை தருகி றது. ஆனால், இதற்கு அடிமையாகி விட்டபின்னர், அதனை பயன்படுத்தா மல் இருந்தால் கோபத்தில் கத்துவது போன்ற செயல்களை செய்வார்கள், என்று கூறுகின்றனர் கூலிப்-யை பயன் படுத்தும் இளைய சமூகத்தினர். அதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வில்லை என்றால், தலைவலியை அதி கரிக்கும் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த கட்டத்தில் கூலிப் வைத்தால் தான் எல்லாம் சரியாகும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடு வோம். மேலும், இதன் விளைவுகள் மூளைக்கு ஏறும். அதிகளவு இதனை பயன்படுத்தும்போது இதய துடிப்பு அதிகரிக்கும். அதாவது 60 முதல் 100 வரை சாதாரணமாக இருக்கக்கூடிய இதயத்துடிப்பு என்பது, 110, 130தாக அதிகரிக்கும். இது மாரடைப்பிற்கு கொண்டு செல்லும். மேலும், வாய்ப் புற்றுநோய், பக்கவாதம் மற்றும் வலிப்பு போன்றவைகளையும் கூலிப் என்ற பொருளுக்கு இலவமாக பெறலாம். தொடர்ந்து கூலிப் எடுக்கும்போது, ஒரு சாதாரண பிஸ்கட் கடித்தால்கூட பற் களில் இருந்து ரத்தம் கசியும். பின்  உதடுகள் வெடிப்பு ஏற்படும். அதுவே  புற்றுநோய் தொடங்க போகும் அறி குறிகள். வாய் மற்றும் உதடுகளில் வெள்ளையான திட்டுகள் படியும். இந்த கட்டத்தில் மருத்துவரை அணுக வில்லையென்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். இப்போதைய இளைய தலைமுறையினர் இதற்கு அதி கம் அடிமையாகின்றனர். அதைப் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர் களிடமும், மாணவர்களிடமும் ஏற்ப டுத்த வேண்டும். வரும் தலைமுறை யினர் புகையிலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று நுரையீ ரல் நிபுணர் மருத்துவர் சபரிநாத் என்ப வர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஹான்ஸ், கூலிப் போன்ற புகையிலைப் பொருட்கள் விற் பனை செய்வதற்கு தடை அமலில் உள் ளது. அந்த தடையை நீக்குவதற்கு அதன் உற்பத்தியாளர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக் கது. சமூகத்தில் பெரிய விஷச்செடி யாக இருக்கக்கூடிய சாதி, மதம், இனவெறியை அழிக்கக்கூடியவர் களாக இளைஞர்கள் இருப்பார்கள் என்கிற நம்பிக்கையை தகர்க்கும் வகையில், அவர்களையே அழிப்பதற் காக புழக்கத்திலுள்ள கூலிப், ஹான்ஸ், கஞ்சா மற்றும் மதுபானம் உள்ளிட்ட வற்றை முற்றுலும் அழித்தொழிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. -ரவிச்சந்திரன்

;