districts

img

காலை சிற்றுண்டி திட்டம் அமைச்சர்கள் துவக்கி வைப்பு

கோவை, செப். 16 -  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரையில் தமிழக முதல்வர் துவக்கிவைத்த நிலையில் வெள்ளி யன்று கோவை உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் அமைச்சர்கள் துவக்கிவைத்தனர். கோவை ராமநாதபுரம் மாநக ராட்சி தொடக்கப் பள்ளியில்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  துவக்கி வைத்தார். கோவை  மாநகராட்சி மற்றும் மேட்டுப் பாளையம், மதுக்கரை ஆகிய இரு நகராட்சிகளில் வெள்ளியன்று  முதல் கட்டமாக  காலை உணவு திட்டம் துவங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரத்து 104 மாணவ, மாணவிகள்  பலன் அடைகின்றனர். இதுகுறித்து அமைச்சர்  செந்தில்பாலாஜி செய்தியா ளர்களிடம் கூறுகையில், முதல மைச்சரின் காலை உணவு திட்டம்  மதுரையில் முதல்வரால் துவங்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கோவை, ராமநாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் உணவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த  சிறப்பு வாய்ந்த திட்டத்தை துவங்கி  வைத்ததில் மகிழ்ச்சியை தெரி வித்துக் கொள்கிறோம் என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மேயர்  கல்பனா ஆனந்தகுமார், மாநக ராட்சி ஆணையாளர் பிரதாப்,  துணைமேயர் வெற்றிச் செல்வன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் நகராட்சி கோட்டை  துவக்கப்பள்ளியில் முதலமைச் சரின் காலை உணவுத் திட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங். தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மாணவ - மாணவி களுக்கு காலை உணவு தொடங்கி  வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் முதற் கட்டமாக 50 துவக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 2,586 மாணவ - மாணவிகள்  காலை உணவு வழங்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சியில் முதலைப் பட்டியில் மைய சமையற் கூடம்  அமைக்கப்பட்டுள்ளது. திருச்செங் கோடு நகராட்சியில் ராஜாகவுண்ட பாளையம் துவக்கப்பள்ளியில்  மைய சமையற் கூடம் கட்டப் பட்டுள்ளது. கொல்லிமலை  ஊராட்சி ஒன்றியத்தில் அருகி லுள்ள சத்துணவுக்கூடங்களில் உணவு தயாரித்து வழங்கப்படு கிறது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சித் தலைவர் து.கலாநிதி, துணைத் தலைவர் செ.பூபதி,  நகர் மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், கொ.கலைச்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி, நகராட்சி ஆணை யாளர் கி.மு.சுதா ஆகியோர் கலந்து  கொண்டனர். 

தருமபுரி

தருமபுரி மாவட்டம், பாலக் கோடு பேரூராட்சிக்குட்பட்ட பாலக் கோடு (தெற்கு) ஊராட்சி ஒன்றிய  அண்ணா தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி மாணவர்களுக்கு காலை  உணவு பரிமாறி துவக்கி வைத் தார். தருமபுரி மாவட்டத்தில் பாலக் கோடு ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட 111 அரசு பள்ளிகளில் முதல் கட்டமாக செயல்படுத்த உள்ளன. இங்கு பயிலும் சுமார் 6,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது என  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பேசி னார். முன்னதாக தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார்,  பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி,  தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தடங்கம் பெ. சுப்பிரமணி, பாலக்கோடு பேரூ ராட்சித் தலைவர் பி.கே.முரளி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  ஈரோடு  இதேபோன்று ஈரோடு மாநக ராட்சிக்குட்பட்ட கொல்லம் பாளையம் அரசு தொடக்கப் பள்ளி யில் முதலமைச்சரின் காலை  உணவு திட்டத்தினை மாவட்ட  ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி தொடங்கி வைத்தார். ஈரோடு மாநகராட்சியில் உள்ள  26 பள்ளிகளிலும், தாளவாடி ஊராட்சி ஒன்றியம், திகனாரை ஊராட்சி, தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் 38 பள்ளிகளிலும் என  64 பள்ளிகளில் செயல்படுத்தப் படுகிறது. இதன் மூலம் மொத்தம் 3291 மாணவ,மாணவியர்கள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.

;