districts

img

இலங்கை தமிழர் முகாமில் அமைச்சர் ஆய்வு

ஈரோடு, ஜுலை 6- சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அரச்சலூர் மற்றும்  ஈஞ்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களை பார்வை யிட்டு, குறைகளை கேட்டறிந்தார். ஈரோடு மாவட்டம், அரச்சலூர் மற்றும்  ஈஞ்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் அமைந் துள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் ச. சந்தோஷினி சந்திரா முன்னிலையில், அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் முகாம்களுக்கு நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்ட றிந்தார். இந்நிகழ்வின்போது அமைச்சர் பேசு கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து  வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டும் பணி யினை ரூ.178 கோடி மதிப்பீட்டில் சுமார் 3500  வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடை பெற்று வருகிறது. குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் 400 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இலங் கைத்தமிழர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இம்மாத இறுதியில் சுமார் 1000 வீடுகளும் மற்றும் இன்னும் 2 மாதங்களில் சுமார் 1000  வீடுகளும் என 3 மாதங்களில் 3500 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங் கப்படும். இரண்டாம் கட்டமாக 3500 வீடுகள்  கட்டுவதற்காக சுமார் ரூ.222 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள்  விரைவில் துவங்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக, முகாம்களில் வசிக்கும் மக் களுக்கு அடையாள அட்டை மற்றும் வேட்டி,  சேலைகளையும் வழங்கினார்.