districts

img

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு வருகை

ஈரோடு, ஆக. 1- ஈரோடு மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டா லின் வெள்ளியன்று காலை சோலார் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட் டுள்ள ஈரோடு நாடாளுமன்ற உறுப்பி னர் அலுவலகத்தை திறந்து வைக்கி றார். தொடர்ந்து வ.உ.சி.பூங்காவில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தைத் திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஆர்என்.புதூரில் பிளாட்டி னம் மகாலில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இதர நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன் பின்னர் சித்தோட்டிலுள்ள அரசு பொறி யியல் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கினைத் திறந்து வைத்து நான் முதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்ட பயனாளிகளிடம் கலந்துரையாடு கிறார். அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத் துத் துறை அலுவலர்களுடனான ஆய் வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இறு தியாக தங்கம் மஹாலில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.