districts

2500 சதுர அடிக்குள்ளே கட்டப்படும் வீடுகளுக்கு அனுமதி உத்தரவை தெளிவுபடுத்திய அமைச்சர் முத்துசாமி

கோவை, ஜூன் 3- 2500 சதுர அடிக்கு கீழ் கட்டப்ப டும் வீடுகளுக்கு அனுமதி பெற தேவையில்லை என்ற உத்தரவை மக்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளார்கள் அப்படி கட்டும் வீடுக ளுக்கு அனுமதி பெற தேவை யில்லை என்று தான் உத்தரவு உள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவை கண்ணம்பாளை யத்தில் சூலூர் கட்டடப் பொறியா ளர்கள் சங்கம் சார்பில் பணியேற்பு மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப் பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டார். பின்னர், இந்த விழாவில் பேசிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதி துறை சார்பில் தமிழக அரசு எண் ண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை தெரிந்து கொண்டால் மட்டுமே விதிமீறல்கள் இல்லாமல் கட்டிடங் கள் கட்ட முடியும். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக கட்டட பொறியாளர் சங்கத்தை சேர்ந்த 150 சங்கங்களை அழைத்துப் பேசி னோம். அதில், 43 கோரிக்கை களை ஏற்றுக்கொண்டு 18 கோரிக் கைகள் தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளைய நிறைவேற்ற ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. உயரம் இல்லாத கட்டடங்களுக்கு 12 மீட்டர் என்ற அளவை 14 மீட்டர் என உயர்த்திக் கொடுக்கப்பட் டுள்ளது. வீடு கட்டி நிறைவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் 750 சதுர அடிக்கு மூன்று அரை என்ற விகிதத்தில் இருந்தால் அதற்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கத் தேவையில்லை என்று இருந்ததை. தற்போது, 750 சதுர அடிக்கு எட்டு அறைகள் வரை கட்ட அனுமதிக்கப்பட்டு. அதற்கு நிறை வுச் சான்றிதழ் வழங்கத் தேவை யில்லை என்ற உத்தரவும் பிறப் பிக்கப்பட்டுள்ளது. மக்கள் சரி யாக கட்டிடங்களை அரசு விதிகளு க்கு உட்பட்டு கட்டினால் கட்டிட வரன்முறை மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும். அது மக்களிடம் தான் உள்ளது. தற் போது, 2500 சதுர அடிக்கு கீழே உள்ள கட்டிடங்களுக்கு அனுமதி வாங்க வேண்டியதில்லை என்ற உத்தரவு உள்ளது. ஆனால், தற் போது அந்த உத்தரவு மக்களி டம் எவ்வாறு சென்று அடைந்துள் ளது. என்றால். அந்தக் கட்டிடத்தை எப்படி வேண்டுமென்றாலும் கட்டிக் கொள்ளலாம் என்று நினைப் பது. தவறு அது சட்டத்திற்கு உட்பட்டு தான் கட்டப்பட வேண்டும். 2500 சதுர அடிக்கு குறைவாக கட்டப்படும் பொழுது அதற்கு அனுமதி இல்லை என்று தான் உத்தரவுள்ளதே தவிர எப்படி வேண்டுமானாலும் கட்டலாம் என்ற உத்தரவு இல்லை. அதற்கான அனுமதிக்காக காத்திருக்க வேண் டாம் என்ற உத்தரவு தான் உள்ளது. மக்கள் இதனை புரிந்து கொண்டு நடந்தால் அதிகாரிகளுக்கு வேலை இல்லை என தெரிவித்தார்.