districts

img

குமரியில் தியானம்… சும்மா எதுவும் நடப்பதில்லை…

பிரதமர் மே 30 முதல் ஜூன் 1 மாலை வரை விவேகானந்தர் பாறையில் தியானம் செய்கிறார்.  ஜூன் 1 ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் தேர்தல். எனவே மே முப்பதாம் தேதி பிரச்சாரம் முடிய வேண்டும்.    ஆனால் பிரதமர் விவேகானந்தர் பாறையில் தியானம் என்ற பெயரில் விவேகானந்தர் உடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறார். விவேகானந்தர் மேற்கு வங்காளத்தில் முக்கியமான ஐ கான் என்பதால் இதன் பாதிப்பு தேர்தலில் இருக்க வாய்ப்பு உள்ளது. விவேகானந்தரை தங்களைப் போன்ற இந்துவ வாதியாகவும் தாங்கள் அவரைப் பின்பற்றுபவர்கள் என்றும் அடையாளப் படுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும். அதே நேரம் மற்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது.  ஏற்கெனவே மேற்கு வங்காளத்தில் சில ராமகிருஷ்ணா மிஷன் துறவிகள் பிஜேபிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாகவும், அதில் ஒருவர் திருணாமுல் காங்கிரஸ் ஏஜென்ட்களை தேர்தல் சாவடிகளில் அனுமதிக்க கூடாது என்று பேசிய தாகவும் மம்தா குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்காளத்தைக் கைப்பற்றுவது பிஜேபியின் முக்கிய மான நோக்கமாக உள்ளது. சும்மா எதும் நடப்பதில்லை. எல்லாமே ஒரு விரிவான செயல் திட்டத்தின் பகுதிதான். -முகநூலில் எழுத்தாளர் இரா.முருகவேள்

;