districts

img

முழு நேர ஊழியராக்கு: மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் மனு

சேலம், அக்.17- பணி நேரத்தை முறைப்படுத்தி முழு நேர ஊழியராக்க வேண்டும் என வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடு களுக்கே நேரில் சென்று வழங்கும் வகையில் இல்லம் தேடி  மருத்துவம் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 246 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்ற னர். வாரத்திற்கு மூன்று நாட்கள் 2 மணி நேரம் மட்டுமே பணி எனவும், மாதத்திற்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் ஊதி யம் எனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தினசரி முழு  நேரமும் பணியாற்ற வேண்டும் எனவும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பணியாற்ற வேண்டும் எனவும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஊதிய உயர்வு கேட்டும், மருத்துவ சேவை யின் போது ஏற்படும் செலவினங்களை அரசே வழங்க வேண் டும். காலத்திற்கேற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

பணி நேரத்தை முறைப்படுத்தி முழு நேர ஊழியராக்க வேண்டும். தீபாவளி பண்டிகை கால செலவிற்கு ஊதியம் வழங்க வேண் டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அடங்கிய மனுவை 50க்கும் மேற்பட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மக்களை தேடி மருத் துவ ஊழியர் சங்க செயலாளர் எஸ்.கவிதா, பொருளாளர் ஆர். செந்தமிழ் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஈரோடு இதேபோன்று ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில், மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர் சங்கத்தினர் மனு அளித்தனர். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம், மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் தலைவர் என்.ரேவதி, செயலாளர் கெ.தனலட் சுமி, பொருளாளர் பி.ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.