districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

நாமக்கல், ஜுன் 3- நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 5 ஆவது சுற்று  கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஆம்தேதி முதல்  21 நாட்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோமரி தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலை மையில் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளைக் கொண்டு  ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்தப்படும். அந்தந்த அலுவ லர்கள் செய்ய வேண்டிய பணிகள் எடுத்துரைக்கப்ப டவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி  கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதி யில் குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசிபோட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் முன் கூட்டியே தடுப்பூசி போடப்படும் விவரம் விளம்பரப்படுத்தப்ப டும்.   இத்தடுப்பூசிப்பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வா ளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை கொண்டு  105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  எனவே, விவசாயிகள் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அழைத் துச்சென்று 10.06.2024 முதல் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பி டப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முகாம்களில் தங்களது  கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படுத்தும் சாலையை சீர் செய்க 

விபத்து ஏற்படுத்தும் சாலையை சீர் செய்க  நாமக்கல், ஜூன் 3- எப்போதும் விபத்து ஏற்படுத்தும் மல்லசமுத்திரத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீர் படுத்த வேண்டும்  என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் மல்லச முத்திரம் அருகே, அக்கரைபட்டியில் இருந்து ஆத்துமேடு செல்லும் கிராம இணைப்புசாலை பல வருடங்களாக குண் டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இவ்வழியாக தினமும்  இரவு, பகல் பாராமல் எண்ணற்ற கனரக, இலகுரக, இருசக்கர  வாகனங்கள் என எந்நேரமும் சென்ற வண்ணம் உள்ளது. இச்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டி கள் செல்லமுடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வரு கின்றனர். ஒருசிலர் தவறி கீழே விழுந்து பெரும் அவதிக்கு  ஆளாகின்றனர். எனவே, சாலையை சரிசெய்ய சம்மந்தபட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

பனியன் தையல் கட்டணம்  7 சதவிகித உயர்வு ஜூன் 6 முதல் அமல்

திருப்பூர், ஜூன் 3 – பனியன் தையல் கட்டணம் 7 சதவிகித கூலி உயர்வு வரும்  ஜூன் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று உள்நாட்டு  பனியன் தையல் நிலைய உரிமையாளர் (பவர்டேபிள்) சங்கம்  செயலாளர் கே.எஸ்.முருகேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியா ளர்கள் சங்கம் (சைமா) மற்றும் திருப்பூர் உள்நாட்டு பனியன்  தையல் நிலைய உரிமையாளர்கள் (பவர்டேபிள்) சங்கத் திற்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி சனியன்று  சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் தையல் கட்டண உயர்வு பற்றி  நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி மூன்றாம் ஆண்டான 2024க்கு புதிய தையல் கூலி  உயர்வு 7 சதவிகிதம் வரும் ஜூன் 6ஆம் தேதி வியாழக்கிழமை  அமலுக்கு வருகிறது. இதன்படி பனியன் ரகங்களுக்கு டஜ னுக்கு ரூ.87.07 வீதமும், பேக் பட்டி டிராயருக்கு 7 சதவிகித  உயர்வு என்ற அடிப்படையில் ரூ.168.01 வீதமும், பேக் பட்டி  டபுள் பாக்கெட் ரகங்களுக்கு 7 சதவிகித உயர்வு அடிப்படை யில் 177.04 வீதமும் தையல் கூலி பெற வேண்டும். இந்த  உயர்வு 2025 ஜூன் 5ஆம் தேதி நடைமுறையில் இருக்கும்,  அதன் பிறகு இதே ஒப்பந்தப்படி நான்காம் ஆண்டுக்கு 7 சதவி கிதம் கூலிஉயர்வு நடைமுறைக்கு வரும்  என்று கே.எஸ்.முரு கேசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் இன்று வாக்கு எண்ணிக்கை: முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

திருப்பூரில் இன்று வாக்கு எண்ணிக்கை: முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு திருப்பூர், ஜூன் 3 – திருப்பூர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் செவ்வாயன்று நடைபெ றவுள்ள நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் உள்ளிட்டோர் திங்களன்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள முன் னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாநகராட்சி எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி யில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருந் துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர்  (வடக்கு) மற்றும் திருப்பூர் (தெற்கு) ஆகிய சட்டமன்ற தொகு திகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் மேற்பார்வை யாளர்கள் அறை, தேர்தல் அலுவலர் அறை, முகவர்கள் அறை, ஊடக மையம் ஆகியவை அமைந்துள்ள இடங்களை யும், வாகனங்கள் வரும் வழி, முகவர்கள் வந்து செல்லும்  வழி, சிசிடி பொருத்தப்பட்ட இடங்கள், வாக்கு எண்ணும் இடத் தில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பொருட்கள், மேஜைகள், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து  திருப்பூர் பாராளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாநகர  காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட வரு வாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், திருப்பூர் சார் ஆட்சியர் சௌம்யா ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (தேர்தல்) ஜெயராமன், வட்டாட்சியர் (தேர்தல்) தங்க வேல் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள், தொடர்பு டைய தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஏ.டி.எம்.மையங்கள் செயல்படாததால் பொதுமக்கள் அவதி:

அவிநாசி, ஜூன் 3 – அவிநாசி அருகே கருவலூர், சேவூர் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். அவிநாசி ஒன்றியம், கருவலூர், சேவூரில் ஏராளமான பின் னலாடை தொழில் நிறுவனங்கள், அரிசி ஆலைகள், விசைத்த றிக்கூடங்கள், வணிக நிறுவனங்கள் உட்பட எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இங் குள்ள பின்னலாடை தொழிற்கூடங்களில் வெளி மாநில தொழி லாளர்கள், வெளி மாவட்ட தொழிலாளர்கள் அதிக அளவு பணி  புரிந்து வருகின்றனர். இவர்கள் கருவலூர், சேவூர் உட்பட பல் வேறு  பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்க ளுக்கு வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலர் கடைக்களுக்கு வந்து பொருட்கள் வாங்குவதுதற்கும், உறவி னர்களுக்கு பணம் அனுப்புவது உள்ளிட்டவற்றுக்கு ஏடிஎம் களை நம்பி தான் உள்ளனர். இந்நிலையில், கருவலூர், சேவூ ரில் உள்ளிட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரம்   செயல்படவே இல்லை. இதனால்  வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் எனப் பலர் சிரமத்திற்கு உள் ளானர்கள். இது குறித்து மாவட்ட முதன்மை வங்கி நிர்வாகத் தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூரில் இன்று வாக்கு எண்ணிக்கை: பல்லடம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர், ஜூன் 3 – திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரி யில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண் ணிக்கை செவ்வாயன்று நடைபெறவுள் ளதால் பல்லடம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்லடத்தில் இருந்து திருப்பூர்  நோக்கி வரும் வாகனங்கள் வீரபாண்டி  காவல் நிலையம் வழியாக பழவஞ்சிபாளை யம், சந்திராபுரம், உஷா தியேட்டர் வழியாக  பழைய பேருந்து நிலையம் செல்ல வேண் டும். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து  பல்லடம் நோக்கி செல்லும் பேருந்துகள் தெற்கு காவல் நிலையம் வழியாக தாராபுரம்  சாலை, சந்திராபுரம், பழவஞ்சிபாளையம், வீரபாண்டி காவல் நிலையம் வழியாக வீர பாண்டி பிரிவு சென்று பல்லடம் சாலையில் இணைய வேண்டும். வித்யாலயத்தில் இருந்து வரும் பேருந்து கள் உள்ளிட்ட வாகனங்கள் வீரபாண்டி பிரி வில் இருந்து மேற்சொன்ன பழவஞ்சிபாளை யம் வழியாக திருப்பூர் பழைய பேருந்து நிலை யம் வர வேண்டும். திருப்பூர் இருந்து பல்லடம் நோக்கி செல் லும் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாக னங்கள் சந்தைப்பேட்டை வழியாக தென்னம் பாளையம் சந்தைபேட்டை, முத்தையன்  கோயில் வழியாக, கருப்பகவுண்டம்பா ளையம் சென்று தமிழ்நாடு தியேட்டர் முன் பாக பல்லடம் சாலையில் செல்ல வேண்டும்.  அதேபோல் பல்லடத்தில் இருந்து வரும் கார்,  ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் தமிழ்நாடு தியேட்டரில் இருந்து முத்தையன் கோயில் வழியாக சந்தைப்பேட்டை வழி யாக வந்து திருப்பூர் வர வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் அதிகாலை  4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைமுறை யில் இருக்கும் என்று மாநகரக் காவல் துறை  செய்தியறிக்கை வெளியிட்டுள்ளது.

தொழில் வளர்ச்சிக்கு நத்தக்காடையூர் பகுதியில்  மும்முனை மின்சாரம் வழங்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர், ஜூன் 3 – காங்கேயம் வட்டம் நத்தக்காடை யூர், பழையகோட்டை, மருதுறை ஊராட்சிப் பகுதிகளில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நத்தக்காடையூர் கிளைக்கூட் டம். ஞாயிறன்று மூத்த உறுப்பினர் பி. நடராஜ் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் நத்தக்காடையூர்  கிளைச் செயலாளர் இரா.செல்வ ராஜ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரு மாறு: நத்தக்காடையூர், பழைய கோட்டை, மருதுறை ஊராட்சிகளில் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். குறிப்பாக இந்த பகுதியில் விவ சாய மின் இணைப்பு 250 எண்ணிக் கையும், சிஎல்ஆர் பொது குடிநீர், தெரு விளக்குகளும் உள்ளன. அதே போல் பழையகோட்டை ஊராட்சியி லும், மருதுறை ஊராட்சியிலும் பொதுக்குடிநீர் மற்றும் தெருவிளக் குகள் உள்ளன. 280க்கும் மேற்பட்ட தொழிற்சாலை இணைப்புகளும் இப்பகுதியில் உள்ளன. மூன்றுக்கும்  மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார  நிலையங்கள், தனியார் மருத்துவம னைகள், நர்சிங் கல்லூரி, கல்வியி யல் கல்லூரி, அரசு கல்லூரி, தனியார்  பொறியியல் கல்லூரி, 12க்கும் மேற் பட்ட அரசுப் பள்ளிகள், நூல் மில்கள்,  நார் மில்கள், தயிர் உற்பத்தி, தனியார்  குளிர்பானம், மசாலா கம்பெனிகள், எண்ணெய் மில்கள், விசைத்தறிக் கூடங்கள், பனியன் நிறுவனங்கள், சிறு, குறுத் தொழில் நிறுவனங்கள் வளர்ந்திடவும், அதன்மூலம் தொழி லாளர் வேலைவாய்ப்பு வாழ்வாதா ரத்தைப் பாதுகாத்திடவும் தமிழக அரசு இந்த பகுதிக்கு மும்முனை மின் சாரம் வழங்கிட வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் வலியுறுத்திக் கேட்டுள்ளனர். இதற்காக, வரும் ஜூன் 28 அன்று பழைய கோட்டை மின்வாரிய உதவி  இளம் பொறியாளர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம்  நடத்தப்படும் என்று தீர்மானிக்கப் பட்டது.

ரூ. 48.50 லட்சம் நூதன மோசடி

கோவை, ஜூன் 3- கோவையில் வங்கி மேலாளரிடம் ரூ. 48.50 லட்சம் நூதன மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.  கோவை மாவட்டம், வடமதுரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (35) தனியார் வங்கி மேலாளர். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில்,  ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக் கப்பட்டு இருந்தது. பின்பு, அவர் அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக்  செய்து தனது விவரங்களை பதிவு செய்தார். பின்னர், அவரை தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி ஒருவர் ஆன்லைன் வர்த்த கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதனை, நம்பிய கிருஷ்ணராஜ் அந்த  நபர் கூறிய வங்கி கணக்குகளில் பல கட்டங்களாக ரூ. 48  லட்சத்து 57 ஆயிரத்து 115 ரூபாயை அனுப்பினார். ஆனால், அவருக்கு லாப தொகை கிடைக்கவில்லை. முதலீட்டு தொகையையும் திரும்ப பெற்ற முடியவில்லை. அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்ட போது, மீண்டும் பணம் அனுப்பி னால் மட்டுமே, நீங்கள் செலுத்திய தொகையை, லாபத்துடன்  உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்க முடியும் என தெரி வித்துள்ளார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. மொத்தமாக ரூ. 48 லட்சத்து 57 ஆயிரத்து 115 ரூபாயை மோசடி செய்து விட்டனர். இதனால், ஏமாற்றம் அடைந்த கிருஷ்ணராஜ். இது குறித்து கோவை மாநகர சைபர்  கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

உதகை வாக்கு எண்ணும் மையத்தில் 600 போலீசார் குவிப்பு!

உதகை, ஜூன் 3– உதகை, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் செவ்வா யன்று (இன்று) நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தைச்சுற்றி 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மக்களவை தொகுதியில் உதகை, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கியது. கடந்த ஏப் 19 ஆம்  தேதியன்று வாக்குப்பதிவு முடிந்தது. இந்த ஆறு தொகுதி களில் உதகை, குன்னுார், கூடலுார் ஆகிய 3 தொகுதிகளில், 689 வாக்குச் சாவடி, சமவெளி பகுதிகளான, மேட்டுப்பாளை யம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய தொகுதிகளில், 930 வாக் குச்சாவடிகள் என, மொத்தம், 1 ஆயிரத்து 619 வாக்குச் சாவடி மையங்களின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைக்கப்பட்ட ‘ஸ்ட்ராங்’ ரூமில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. அந்த  கல்லுாரி வளாகத்தில், 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. துணை ராணுவம் உட்பட மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், செவ்வா யன்று வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, 600 போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு, 470 அலுவலர் தேர்வு  செய்யப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்  குறித்து தெரிவிக்கப்பட்டது. தலா ஒரு மைக்ரோ அப்சர் வர், கண்காணிப்பாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் என மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 


 

;