districts

img

தேங்கிக் கிடக்கும் சாலை பணிகள் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 7- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி யில் சாலை பணிகளை கிடப்பில் போடப் பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி, 14 ஆவது வார்டுக் குட்பட்ட பெரியார் காலனி, முத்துக்கோபால் நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில்  பிரதான சாலை மற்றும் குறுக்குச்சாலைகளை  தோண்டிப்போட்டு பல மாதங்களாகி யுள்ளன. இந்நிலையில், சாலை பணிகளை செய்யாமல் இருக்கும் மாநகராட்சி நிர் வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று பெரியார் காலனி, முத்து மாரியம்மன் கோவில் அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் நகரக்குழு உறுப்பினர் பாபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், நகரக்குழு உறுப் பினர் சுகுமார், கவிதா ஆகியோர் உரை யாற்றினர். முடிவில், கிளைச் செயலாளர் இந்திராணி நன்றி கூறினார்.  இதில், கட்சி கிளைச் செயலாளர் ஜார்ஜ் வர்கீஸ் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, உடனடி யாக மாநகராட்சி நிர்வாகம், சந்தை பிரதான  சாலை மற்றும் குறுக்குச்சாலைகள் அமைக்கும்  பணிகளை துவக்காவிட்டால், ஜூலை 13 ஆம்  தேதியன்று முதலாவது மண்டல அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு படுவோம் என மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரி வித்தனர்.