தருமபுரி, டிச.14- ஆந்திராவில் தமிழக தொழி லாளர்கள் படுகொலை செய்யப் பட்டது தொடர்பாக உரிய நீதி விசா ரணை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன் தருமபுரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறுகை யில், தருமபுரி மாவட்டத்தில் விவ சாயம் அழிந்து வரும் சூழலில் குடும்பம், குடும்பமாக வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலைமை உள்ளது. குறிப்பாக, சித்தேரி கிராமத்தில் இருந்து வேலை தேடி பழங்குடி மக்கள் ஆந்திரா மாநிலத்திற்கு செல்கின்றனர். அப்படி சென்ற தொழிலாளர்களில் இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம மான முறையில் உயிரிழந்துள்ள னர். ஆகவே, இவர்களின் மரணம் தொடர்பாக தமிழக அரசு உடன டியாக நீதி விசாரணைக்கு உத்தர விட வேண்டும். பழங்குடி தொழி லாளர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியு றுத்தினார். மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட மாநாடு அரூரில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் உள் ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரதி நிதிகள் பங்கேற்று தருமபுரி மாவட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவா திக்க உள்ளனர், என்றார். முன்னதாக, இந்த செய்தியா ளர் சந்திப்பின்போது மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.