கோவை, நவ. 29 – மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை கணபதி பகுதி மூத்த தோழரான மருதாச்சலம் ஞாயிறன்று உடல் நலக்குறைவால் கால மானார். இவரின் மறைவையறிந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், வடக்கு நகரக்குழு செயலாளர் என்.ஆர்.முரு கேசன் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.