districts

img

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

கோபி, ஜூன் 19- கோபி அருகே மின்வேலியில் சிக்கி ஆண்  யானை உயிரிழந்த விவகாரத்தில், வனத்து றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள பெருமுகை கிராமத்திற் குட்பட்ட கரும்பாறை, கொளத்துக்காடு, சஞ் சீவிராயன்குளம் உள்ளிட்ட பகுதிகள் வனப்ப குதியையொட்டி அமைந்துள்ளது. தொட்ட கோம்பை, கரும்பாறை உள்ளிட்ட பகுதிகளி லிருந்து தண்ணீர் தேடி வரும் வன விலங்கு கள் நீர்வழி பாதையையொட்டி சென்று சஞ்சீ விராயன்குளத்தில் தண்ணீர் அருந்தி விட்டு  மீண்டும் வனப்பகுதிக்கு செல்வது வழக் கம்.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு  முன்  வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் உணவுக்காக  அப்பகுதி யிலிருந்த பயிரிடப்பட்ட கரும்பு, வாழை களை ருசித்து சென்றுள்ளது. இதனைய டுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண் டும் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய  ஆண் யானை ஒன்று உணவுக்காகவும் தண்ணீர் தேடியும் நீர்வழி பாதையையொட்டி  வந்துள்ளது. இதில், கரும்பாறை மேய்ச்சல் பகுதியில் மின்வேலி அமைக்கப்பட்ட விவ சாய நிலத்திற்குள் நுழைய முயன்றபோது யானை  மின்வேலியில் மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி யில் விவசாயிகள் அந்தியூர் வனத்துறையி னருக்கு தகவல் அளித்துள்ளனர்  சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை யினர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானை  குறித்து விசாரணை மேற்கொண்டதில் அது  12 வயது மதிக்கதக்க ஆண் யானை என தெரிய வந்தது. மேலும், அப்பகுதியில் முறை கேடாக மின் இணைப்பு பெற்றுள்ளனரா மும் முனை மின்சாரம் மின் வேலியில் பயன்படுத் தப்பட்டதா உள்ளிட்டவைகள் குறித்து பல் வேறு கோணங்களில் வனத்துறையினர் விசா ரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

;