தருமபுரி ஜூலை 4- மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 1998 முதல் தற்போது வரையில் ஒப்பந்த பணி யாளர்களாக உள்ள மின் ஊழியர்களை நிரந்திரம் செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு, பெருந்திரளாக மனு அளிக்கும் இயக்கம், சிஐடியு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் சார்பில் செவ் வாயன்று நடைபெற்றது. மின்வாரிய தொழிற்சங்கத்து கடன் 2018 பிப்ரவரி 22-ல் போடப்பட்ட ஒப்பந் தத்தின்படி, 1998 ஜனவரி 6 ஆம் தேதி முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந் தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப் பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப் படையில் நியமித்து நிரந்தரப்படுத்த வேண்டும். முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் சிஐடியு மின் ஊழி யர் மத்திய அமைப்பு பெருந்திரள் முறை யீட்டு இயக்கத்தை மேற்கொண்டது. இதன்ஒருபகுதியாக, தருமபுரி மாவட் டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் பழனிதேவி-யிடம் மனு அளித் தனர். இவ்வியக்கத்தில், சங்கத்தின், மாநில துணைத்தலைவர் பி.ஜீவா தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் தீ.லெனின் மகேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் வி.வெண்ணிலா, எம்.ஆறு முகம், ஏ.கோவிந்தன், எம்.காளியப்பன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நிறைவாக, சிஐடியு மாநிலச் செயலா ளர் சி.நாகராசன் உரையாற்றினார். முடி வில், மாவட்ட பொருளாளர் வி.சீனிவா சன் நன்றி கூறினார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு சிஐடியு மின் ஊழியர் மத் திய அமைப்பின் திட்டத் தலைவர் பி. பாபு தலைமையில் மனு அளிக்கும் இயக் கம் நடைபெற்றது. இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டச் செயலாள ரும், மாநிலத் துணைத்தலைவருமான ஆர்.நாகராஜன், பல்லடம் வட்டத் தலை வர் ஆர்.ஜெயராஜ், செயலாளர் பி.ராம லிங்கம், பொருளாளர் என்.சுந்தரம், உடு மலை வட்டத் தலைவர் எஸ்.ஜெகா னந்தா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக சிஐடியு திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் சிறப்புரை ஆற்றினார். இதில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். நிறைவாக திட்டப் பொருளாளர் கே.மோகன்தாஸ் நன்றி கூறினார்.
நாமக்கல்
சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத் திய அமைப்பின் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மனு கொடுக்கும் போராட் டத்திற்கு, மின் ஊழியர் மத்திய அமைப் பின் நாமக்கல் திட்ட தலைவர் ஏ.சௌந் தர்ராஜன் தலைமை ஏற்றார். கரூர் மண் டல செயலாளர் ஆர்.தனபால், நாமக்கல் திட்ட செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், சிஐடியு நாமக்கல் மாவட்ட செயலாளர் சி.வேலுச்சாமி மற்றும் திட்ட துனைத் தலைவர் எல்.பி.கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். இதில், திரளானோர் பங்கேற் றனர்.
உதகை
இதேபோன்று, மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக் கும் இயக்கம் நடைபெற்றது. இதில், மின்ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை ஏற் றார். இதில், குன்னூர் கோட்டை செயலா ளர் அபூபக்கர், உதகை கோட்ட செயலா ளர் ஜெகநாதன், குன்னூர் கோட்டத் தலைவர் அப்துல்ரகுமான் ஆகியோர் உரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் எல்.சங்கரலிங்கம், மாவட்ட செயலாளர் சி.வினோத், பொருளாளர் ஏ.நவீன் சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக, நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு
இதேபோன்று ஈரோடு மாவட்டத்தி லும், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப் பின் சார்பில், பெருந்திரள் முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. முன்னதாக, ஈரோடு மின்பகிர்மான வட்டம் மற்றும் கோபி வட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழி யர்களின் விபரங்களை மாவட்ட ஆட் சியர் மூலம் தமிழக முதல்வருக்கு பரிந் துரை செய்ய மனு அளித்தனர். இவ் வியக்கத்தில், மண்டல தலைவர் சி. ஜோதிமணி தலைமையில் செயலாளர் கள் பி.ஸ்ரீதேவி, பாண்டியன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றி னர். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கோவை
சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மண் டல தலைவர் பி.மதுசூதனன், பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில இணைச்செயலாளர் டி.மணி கண்டன் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக் கைகள் குறித்து உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.