வியாழன், ஜனவரி 21, 2021

districts

img

மதுரை ஆட்சியர் மாற்றம்

மதுரை, ஏப்.28-மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலின் போது அதிமுகவினர் ரூ.300-கொடுத்து வாக்காளர்களை விலை பேசினர். இதை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் மதுரை ஆட்சித் தலைவராகவும் இருந்த ச.நடராஜன் கண்டுகொள்ளவே இல்லை. வாக்குப்பதி விற்குப் பின்னரும் விதி மீறல்கள் தொடர்ந்தது. இதையடுத்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டஅனைத்துக்கட்சியினர் இவரை பணி யிட மாற்றம் செய்யவேண்டுமென தமிழகதலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து மனு அளித்தனர். ச.நட ராஜனின் விதிமீறல், வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆவணங்கள் பாது காப்பு அறைக்குள் வட்டாட்சியர் நுழை ந்தது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் ச.நடராஜனை மாவட்ட ஆட்சி யர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலு வலர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து அவர்சனிக்கிழமை இரவோடுஇரவாக மாற்றப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இந்த நிலையில் மதுரை ஆட்சியராகவும் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் எஸ்.நாக ராஜன் ஞாயிறன்று பொறுப் பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். “திருப்பரங்குன்றம் இடைத்தேர்த லை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்பவர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் திங்கள் கிழமையுடன் வேட்புமனுதாக்கல் நிறைவடையும் நிலையில்,தொகுதியில் ஒன்பது பறக்கும்படை யினர் உள்ளனர். கூடுதலாக பறக்கும் படையினர் நியமிக்க உள்ளோம் என்றார்.”

;