districts

img

இந்திய விவசாயிகளை கார்ப்ரேட்டுகளிடம் அடகு வைக்காதே இடதுசாரி கட்சிகள் சாலை மறியல் - கைது

கோவை, டிச. 7 - இந்திய விவசாயிகளை கார்ப் ரேட்டுகளிடம் அடகு வைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், தலைநகர் தில்லியில்  போராட்டம்  நடத்தி வரும் விவசாயிகளுக்கு  ஆதரவு தெரிவித்தும் திங்களன்று இடதுசாரி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி னர். கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில்  கோவை,  காந்திபு ரம் அரசு விரைவு பேருந்து நிலையம் அருகே சாலை  மறியல்  போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், என்.அமிர்தம், ஏ.ராதிகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், நிர்வாகிகள் சிவசாமி, தேவராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ரங்கசாமி,  பி.பெருமாள், பி.ஜெயமணி, நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.முருகேசன், சிபிஐ நகர செய லாளர் கேசவன், சிபிஐ (எம்எல்) நகர  செயலாளர் சுப்பிரமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் ரவி மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.துரைசாமி, எஸ்.தனபால், கே.மோகன், இ.கோவிந்தராஜ், ஈஸ்வரன், அர்த்த னாரி, சக்திவேல், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

சேலம்

சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையம் அருகே சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கணபதி தலைமையில் நடை பெற்ற மறியல் போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, எடப்பாடி தாலுகா செயலாளர் மு.பெரியண்ணன், கொங்கணாபுரம் தாலுகா செயலா ளர் பழனியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ராஜாதி, சேகரி  உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியில் போராட் டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், சேலம் ஜங்ஷன் தலைமை தபால் நிலையத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் கணேசன், மாதர் சங்கத்தின்  மாவட்ட செயலாளர் ஞான சௌந்தரி, சிபிஎம் மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், வாலிபர் சங்க மேற்கு மாநகர தலைவர் கண்ணதாசன், பொருளாளர் கார்த்திக், மாதர் சங்க செயலாளர் ஜெயமாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கைதாகினர்.

;