districts

img

ரயில் பாதையில் மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை ரத்து

மேட்டுப்பாளையம், செப்.6- மேட்டுப்பாளையம் மற்றும் நீல கிரி மலை பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக மலை ரயில் செ்ல லும் இருப்பு பாதையில் மண் சரிவு கள் ஏற்படுள்ளது. இதனை சீரமை்க கும் பணி நடைபெற்று வருவதால் உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வா கம் அறிவித்துள்ளது. சுற்றுலா தலமான உதகைக்கு செல்லும் வகையில் மேட்டுப்பாளை யத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சி்ன னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற் றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலை யின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவது வழக்கம். இந்நிலை யில், திங்களன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளோடு உத கைக்கு மலை ரயில் புறப்பட்டு சென் றது. இதனிடையே ஞாயிறன்று இரவு மேட்டுப்பாளையம் மலையடிவார பகுதிகள் மற்றும் நீலகிரி மலைத்தொ டரில் பெய்த கனமழை காரணமாக கல்லார் - ஹில்குரோ ரயில் நிலை யங்களுக்கிடையே மண் சரிவுகள் ஏற்பட்டன. மண் மற்றும் கற்கள் உருண்டு விழுந்து மலைரயிலின் இருப்பு பாதை புதைந்து போனது.  இதன் காரணமாக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புற்ப பட்ட நீலகிரி மலை ரயில் பாதி வழி யில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டு்ப பாளையம் ரயில் நிலையத்திற்கு திரும்பி வந்தது. தண்டவாள பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளை  சீரமைக்கும் பணியில் ரயில்வே பணி யாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில்,  மேட்டுப்பாளையம் - உதகை இடை யேயான ரயில் சேவை ரத்து திங்க ளன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக் கப்பட்டது. இந்நிலையில், சீரமைப்பு பணிகள் முடிவடையாத நிலையில், செவ்வாயன்றும் ரயில் சேவை ரத்து  செய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவ தும் முடிவடைந்த பின்னர் தான் மலை ரயில் சேவை தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

;