districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கல்லூரி மாணவி தற்கொலை

ஈரோடு, செப். 23- ஈரோடு அருகே கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் தற் கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டை, அரிஜன காலனியைச் சேர்ந்த லட்சுமணனின் இரண்டாவது மகள் கீர்த்தனா. இவர்  நம்பியூர் அரசு மாணவியர் விடுதியில் தங்கி,  தனியார் கல்லூரியில் பிஏ தமிழ் முதலாம் ஆண்டு படித்து  வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு போக  பிடிக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார். வழக்கம் போல்  வியாழனன்றும் வேலைக்கு சென்ற லட்சுமணன் முற்பகல்  11 மணியளவில் வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது  கீர்த்தனா செல்போனில் பேசி வந்தது தெரிந்தது. இதனை யடுத்து அவரிடமிருந்த செல்போனை பிடுங்கி கொண்டு லட்சுமணன் வேலைக்கு சென்றுவிட்டார்.  வேலை முடித்து மாலை 5 மணியளவில் வீட்டிற்க்கு வந்து  போது வீட்டில் உள் தாழிட்டு இருந்தது. இதனால் அக்கம்  பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உன்ளே சென்று  பார்த்தனர். அப்போது கீர்த்தனா மின்விசிறியில் தூக்குமாட் டிய நிலையில் இருந்துள்ளார். கீர்த்தனாவை மீட்டு சிகிச்சைக் காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கீர்த்தனா வரும் வழிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அம்மா பேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.

டெக்ஸ்வேலியில் தீபாவளி கொண்டாட்டம்

ஈரோடு, செப்.23- ஈரோடு அருகே கங்காபுரம் பகுதியில் தேசிய நெடுஞ் சாலையில் டெக்ஸ்வேலி சர்வதேச ஒருங்கிணைந்த ஜவுளி  மையம் அமைந்துள்ளது.  வாரச்சந்தை, தினசரி சந்தை என சுமார் 2 ஆயிரம் ஜவுளிக் கடைகள், பர்னிச்சர் கடை, பொழுது போக்கு அம்சங் களுடன் அமைந்த கொங்கு மண்டலத்தின் ஷாப்பிங் தள மாகும். இங்கு ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெறும். அப்போது இங்குள்ள கடைகளில் வாங்கும் ஆடைகள்,  துணிகள், ஜவுளிகள் உள்ளிட்ட அனைத்து பொருட் களுக்கும் 5 முதல் 50 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும். இதுபற்றி டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குநர் பி.ராஜ சேகர், செயல் இயக்குநர் டி.பி.குமார் மற்றும் தலைமை  செயல் அலுவலர் சிலாஸ்பாஸ் ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் ஒரு நெருக்கடி யான சூழலை சந்தித்தது. தற்போது ஓரளவு அந்த பிரச்சனை களில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். பண்டிகைகள், கோவில் விழாக்கள், வீட்டு விசேசங்கள் என்று அனைத்து விழாக்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த உற்சா கத்தை அதிகரிக்கும் வகையில் டெக்ஸ்வேலி தீபாவளி கொண்டாட்டத்தை அறிவிக்கிறது.  அக்டோபர் 1 முதல் கொண்டாட்ட நிகழ்வுகள் தொடங்கு கின்றன. 4,5 தேதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலை மற்றும் கலாச்சார போட்டிகள் நடத்தப்படுகின்றன. 11,12 தேதிகளில் ஈரோடு தனியார் பண்பலை வானொலியின்  தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பரிசு கூப்பன் வழங்கப்பட்டு இறுதியில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக கார், இரண்டாவது பரிசாக 3 பைக்குகள், மூன்றாம் பரிசாக 50  பேருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.  மேலும் டெக்ஸ்வேலி வளாகம் மிகப்பெரிய ஷாப்பிங் மால், மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் கூடிய ஈரோடு மாநகரின்  முக்கிய அடையாளமாக விரிவுபடுத்தப்பட உள்ளது என்று  கூறினர். அத்துடன் இங்கு 50, 100 கோடிக்கு விற்பனை நடை பெற்றாலும் அது ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்குத்தான் சென்று சேரும் என்று குறிப்பிட்டனர்.

நாமக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு சான்றிதழ்

நாமக்கல், செப்.23- ராசிபுரம் மற்றும் திருச் செங்கோடு அரசு மருத்துவ மனைக்கு ஒன்றிய அரசின் தேசிய தர உறுதி சான்றிதழ் மற்றும் இலக்ஷ்யா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் மற்றும் திருச் செங்கோடு அரசு மருத்துவம னையில் விபத்து மற்றும் அவ சர சிகிச்சை பிரிவு, புறநோ யாளிகள் பிரிவு, குழந்தை கள் பிரிவு உள்ளிட்ட 13 துறை களில் சிறப்பாக சேவை வழங் கியமைக்காக ஒன்றிய அர சின் தேசிய தர உறுதி சான் றிதழ் மற்றும் இலக்ஷ்யா சான்றிதழ்கள் வழங்கப்பட் டுள்ளது. இதனைத்தொ டர்ந்து மேற்படி வழங்கப் பட்ட சான்றிதழ்களை நாமக் கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்-கிடம் காண்பித்து மருத் துவ அலுவலர்கள் வாழ்த்து  பெற்றனர்.

வாக்காளர் தினவிழிப்புணர்வு போட்டிகள்

ஈரோடு, செப். 23- தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகள் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச. சந்தோஷினிசந்திரா தலைமை வகித்தார். இந்திய தேர்தல்  ஆணையமானது பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு, “எனது வாக்கு எனது உரிமை” “ஒரு வாக்கின் மகிமை” என்ற கருப் பொருளை மையமாக கொண்டு மகளிர் சுய  உதவிக்குழுவினர்க்கு கோலப்போட்டி நடத்தப்படும். 18  வயதுக்கு குறைவான பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் 18-21 வயது நிரம்பிய கல்லூரி மாணவர் களுக்கு சுவர் விளம்பரம் மற்றும் சுவரொட்டி தயாரித்தல் போட்டியும், பாட்டு போட்டியும் நடைபெறும். மேலும், மாவட்ட அளவில் மூன்றுபேர் கொண்ட குழு  அமைத்து அவற்றிலிருந்து மாவட்ட அளவில் மூன்று சிறந்த  போட்டியாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து தேசிய வாக்காளர் தினத்தன்று (25.01.2023) பரிசு வழங்கப்பட வுள்ளது. 

கொடநாடு விவகாரம்: விசாரணை அக்.28 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

உதகை, செப்.23- கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் சாட்சி யங்கள் இடையே விசாரணை நடத்த  அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் நீதிபதி யிடம் கால அகவசம் கேட்கபட்டதால் வழக்கு விசாரணை அக்.28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன்  உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை குறித்த மறு  புலன் விசாரணை கோவை மேற்கு  மண்டல ஐஜி சுதாகர் மேற்பார்வை யில், மாவட்ட கூடுதல் கண்காணிப் பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில்  5 தனிப்படை காவல் துறையினர் மிக  தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த வழக்கு சம்பந்தமாக மறு புலன் விசாரணையில் குற்றம் சாட் டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ், ஜித்தன் ஜாய், ஜம்சிர் அலி  உட்பட 10 நபர்களிடமும், முக்கிய குற்றவாளியாக கூறப்படும் வாகன விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர்  தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோ ரிடம் தனிப்படை காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை  நடத்தினர். அவர்களிடம் சேகரிக்கப் பட்ட தகவலின் அடிப்படையில் பல் வேறு கோணங்களில் தனிப்படை காவல்துறையினர் சார்பில் விசா ரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணை  உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நீதிபதி முருகன் முன்னி லையில் விசாரணைக்கு வந்தபோது,  அரசு தரப்பு சார்பில் வழக்கறிஞர் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகி யோர் ஆஜராகி இவ்வழக்கு விசா ரணை சம்பந்தமாக இதுவரை 316  சாட்சிகளிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சேக ரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் 516 செல்போன் தடையங்கள் மற்றும்  தொலைத்தொடர்பு கருவிகள் மூலம்  சேகரிக்கப்பட்ட பொருட்களை கைப் பற்றி ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்விசாரணையானது கேரளா, கர் நாடகா போன்ற பகுதிகளில் விரிவு படுத்த வேண்டிய சூழ்நிலை இருப் பதாலும் வழக்கின் முக்கிய குற்றவாளி யாக கூறப்படும் வாளையார் மனோஜ் வழக்கினை தீவிரப்படுத்த உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் சாட்சி யங்களிடையே விசாரணை நடத்த கூடுதல் அகவாசம் வேண்டும் என நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதி முருகன் வழக்கு  விசாரணையை எதிர்வரும் அக்.28 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந் நிலையில், வழக்கில் புதிய திருப்ப மாக வாகன விபத்தில் உயிரிழந்த  ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனக ராஜின் சகோதரர் தனபாலிடமிருந்து 13 செல்போன்கள் மற்றும் 6 சிம்  கார்டுகள் பறிமுதல் செய்து விசாரணை  செய்யப்பட்டு வருகிறது.

முத்தரப்பு கமிட்டி: விசைத்தறியாளர்கள் வேண்டுகோள்

ஈரோடு, செப்.23- தமிழக அரசு முத்தரப்பு குழு  அமைக்க வேண்டுமென விசைத்தறி யாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.  திமுக அரசு பொறுப்பேற்றதி லிருந்து நூல் இறக்குமதி மீதான 1 விழுக்காடு வரியைக் குறைத்தது. கைத்தறி துறை மூலமாக 5000 விசைத் தறிகளை நவீனப்படுத்த ரூ.6 கோடி மானியம் அளித்தது. கைத்தறி மற்றும் விசைத்தறிகளை கணக்கெடுத்து மின்னணு வணிகம் செய்வதற்கு ரூ.10 கோடி அளித்தது என பல விசைத்தறி தொழிலாளர்களின் 90 லட்சம் குடும்பத் தினர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்  கொள்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள மின் கட்டண  உயர்வு, நூல் விலை உயர்வைக் கட்டுப் படுத்துவது, கைத்தறி துறையில் அரசின் திட்டங்கள் செயல்படுத்த கூட்டுக்குழு அமைக்க வேண்டும். தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி  திட்டம், விசைத்தறி பேனல் போர்டு  திட்டம், மேலும் துறை சார்ந்த திட்டங்கள் விசைத்தறி உறுப்பினர்களுக்கு எவ்வித இடர்பாடுமின்றி சிறப்பாக சென்றடைவதற்கும், இதனை வருங்காலத்தில் மேம்படுத்துவதற்கும் முத்தரப்பு அல்லது நான்கு நபர் கமிட்டி அமைக்க உத்தரவிட வேண்டும் என  மாநில முதலமைச்சருக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

சாலையோர விளக்கு இல்லாததால்  அவிநாசியில் 20 நாட்களில் 3 விபத்து

அவிநாசி, செப்.23 – அவிநாசி அருகே புதுப்பாளையம் பிரிவிலிருந்து புதிய  பேருந்து நிலையம் வரை தெருவிளக்கு மற்றும் எச்சரிக்கை  பதாகை இல்லாததால் 20 நாட்களில் மூன்று விபத்து ஏற்பட்டுள் ளது. திருப்பூர், ஈரோடு, அவிநாசி, சேலம் உள்ளிட்ட பகுதியைச்  சேர்ந்த வாகனங்கள் அவிநாசி நகருக்குள் வந்தால், புதிய  பேருந்து நிலையத்தில் இருந்து, புதுப்பாளையம் பிரிவு,  கணினி ரவுண்டானா அருகே மேம்பாலம் வழியாக கோவை  செல்வது வழக்கம். இந்நிலையில் இரவு நேரத்தில் பய ணிக்கும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், இவ்வழியில் செல்லும்போது சாலையோரங்களில் தெருவிளக்கு இல்லாத தாலும், வளைவு பகுதிகளில் எச்சரிக்கை பதாகை, சிவப்பு  விளக்கு போன்றவை இல்லாததாலும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.  எதிர் திசையில் இருந்து கனரக வாகனத்தில் அதிக வெளிச் சத்துடன் வரும்போது, இரண்டு சக்கர வாகனத்தில் செல் வோரை சாலை ஓரத்தில் ஒதுக்கி விட்டுச் செல்வது தொடர்கி றது. அப்போது, விபத்து ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர்.  இதுகுறித்து சமூக ஆர்வலர் ரவிக்குமார் கூறுகையில்,  இம்மாதத்தில் மட்டும் மூன்று விபத்துக்கள் இந்த சாலை யில் நடந்துள்ளன. இதில் பிரதானமாக சாலையோர விளக்கு  இல்லை, எச்சரிக்கை பதாகை இல்லை என்பதுதான். இது  போன்ற பிரச்சனைகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதி காரிகளிடம், வட்டாரப் போக்குவரத்து (ஆர்டிஓ )அதிகா ரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை. இனியும் உயிரிழப்பு விபத்துகள் நேரிடாமல் தடுப்பதற்கு இந்த சாலையில் உடனடியாக எச்ச ரிக்கை பதாகை அமைக்க வேண்டும். இரவு நேர பயணிக்கும்  வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தைப் போக்கும் வகையில்  சாலையோரங்களில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என  மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினார்.

மின் கட்டண உயர்வை ரத்து  செய்யக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 23 - திருப்பூர் போயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சக்தி நகர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றியக்குழு உறுப்பினர் பி.மகேஸ்வரன் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு பஞ்சாலைத்  தொழிலாளர் சங்கத் தலைவர் கே.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட்  கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, வாலிபர் சங்க ஒன்றி யப் பொருளாளர் மனோஜ்  ஆகியோர் பேசினர். கிளைச் செய லாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

திருப்பூரில் சிறுசேமிப்பு சீட்டு நடத்தி ரூ.22.60 லட்சம் மோசடி 

திருப்பூர், செப். 23 - திருப்பூரில் சிறு சேமிப்பு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி  பனியன் தொழிலாளர்களிடம் ரூபாய் 22 லட்சத்து 60 ஆயிரம்  மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக் கோரி  மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு உள் ளது. திருப்பூர் நல்லூர் பகுதியில், விழுப்புரம் மாவட்டம் மண லூர் பேட்டையை சேர்ந்த பாண்டு என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இங்குள்ள தனியார் பனியன் கம்பெனியில்  அவர் வேலை செய்து வந்தார். அத்துடன் கடந்த ஆறு ஆண்டு களாக அவர் மாதாந்திர சிறு சேமிப்பு மற்றும் தீபாவளி சீட்டு  நடத்தி வந்தார். அவருடன் வேலை செய்து வந்த தொழிலாளர் கள் அவரிடம் சீட்டு சேர்ந்து பணம் கட்டி வந்தனர். இந்நிலையில், சொந்த ஊரில் தனது அண்ணன் பிள்ளை  திருமணத்துக்கு செல்வதாக, குடும்பத்துடன் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால் கடந்த பத்து நாட்களாக அவர்  குடும்பத்தினர் இங்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டு, சீட்டு கட்டி வந்தவர்கள், பாண்டுவின் சொந்த ஊர் மணலூர் பேட்டைக்குச் சென்றனர்.  ஆனால் இவர்கள் தேடி வருவதை அறிந்து சில மணி நேரத் துக்கு முன்பாக அவர் குடும்பத்துடன் அங்கிருந்து வேறு  எங்கோ புறப்பட்டுச் சென்று விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். பாண்டுவிடம் மாத சிறுசேமிப்பு திட்டத்தின் மூலம் பத்துக் கும் மேற்பட்டோர் ரூபாய் 10 லட்சமும், தீபாவளி சீட்டுக்கு இரு பதுக்கும் மேற்பட்டவர்கள் ரூபாய் 11.61 லட்சமும் செலுத்தி  உள்ளனர்.நல்லூர், ஜெய் நகர் ராக்கியாபாளையம்  பிரிவு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பாண்டுவிடம்  பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்கள் வியாழக்கிழமை  திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சா.பிரபாகரனிடம் புகார்  மனு அளித்தனர்.  இதில், தங்களிடம் சீட்டு பிடித்து ரூபாய் 22 லட்சத்து 61  ஆயிரம் ஏமாற்றிவிட்டுத் தலைமறைவான பாண்டுவை கண்டு பிடித்து அவரிடம் இருந்து தங்கள் பணத்தை மீட்டுத் தரும் படி கேட்டுக் கொண்டனர்.

தெக்கலூரில் கஞ்சா விற்றவர் கைது

அவிநாசி, செப்.23 – அவிநாசி அருகே தெக்கலூர் ஆட்டோ ஸ்டேன்ட் பின்புறம்  கஞ்சா விற்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்த னர்.தெக்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே காவலர்கள் திடீர்  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ ஸ்டேன்ட்  பின்புறம் சந்தேகத்துக்கு உரிய முறையில் நின்றிருந்த  நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அவர் தெக்கலூர் வடுகபாளையம் பகுதியில் தங்கியிருக்கும்,  மேற்கு வங்கம் ரக்கிராலா பொஷிம்பாடா பகுதியைச் சேர்ந்த  சௌரத் மோண்டல் (22) என்பதும், இவரிடம் 500 கிராம்  கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி  காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அந்நபரை கைது செய்த னர்.

11.63 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு

தாராபுரம், செப்.23- தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட கெத்தல்ரேவ் ஊராட்சியில் மாரியம்மன்  கோவிலுக்கு சொந்தமான சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 11.63 ஏக்கர் நிலத்தை இந்து அறநிலைதுறையினர் மீட்ட னர். தாராபுரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார் பில் கோவில்களின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகி றது. மேலும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு  வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் இரா.செல்வராஜ் தலைமையில்  குண்டடம் ஊராட்சி ஒன்றியம் கெத்தல்ரேவ் பகுதியில் புன் செய் நிலம் க.ச.எண். 200/1 -இல் 11.10ஏ/செ  மற்றும் க.ச.எண். 200/3-இல் 0.50 மொத்தம் 11.63 நிலத்தை தனியார் வசமிருந்து  மீட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது. வட்டாட்சியர் வி.கோபால கிருஷ்ணன், சரக ஆய்வர் சா.ஆதிரை, செயல் அலுவலர் கள் சொ.சுந்தரவடிவேல், திரு.சதீஷ் மற்றும் திருக்கோயில்  பணியாளர்கள் முன்னிலையில் சுவாதீனம் பெறப்பட்டு அறி விப்பு பலகை கோயில் சார்பாக வைக்கப்பட்டது.

முதல்வர் காலை உணவுத் திட்டம் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருப்பூர், செப். 23 - திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முத லமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தாராபுரம் வட்டத் திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்  துறை அரசு சிறப்பு செயலரும், திருப்பூர் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலருமான எம்.கருணாகரன் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார். புதன்கிழமை கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் திருப் பூர் மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண் டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. வியாழனன்று குண்டடம் ஒன்றியம் வட சின்னாரிபாளை யம் ஊராட்சி காரப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி, பொன்னங்காளி வலசு ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளி, வீணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அவர் ஆய்வு மேற்கொண்டார். இத்து டன் சமையல் கூடங்கள், முதலமைச்சரின் காலை உணவுத்  திட்ட செயலியை பதிவேற்றம் செய்வது குறித்தும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. குண்டடம் ஒன்றியத்தில் ஆய்வுப் பணிகள் முடித்து, தாரா புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் கோப்புகள் மீது ஆய்வு மேற்கொண்டார். தாராபுரம்  வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம்  பெற புகைப்படம் எடுக்கும் இடம், கணினி முறையில் பதிவேற் றம், அலுவலக பதிவேடுகள், ஓட்டுநர் உரிமம் வழங்கும் பதி வேடுகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.

திருப்பூரில் நைஜீரியர்கள் இருவர் கைது

திருப்பூர், செப். 23 - திருப்பூரில் உரிய ஆவ ணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் ராயபுரம் பகுதி யில் சந்தேகத்திற்கு உரிய முறையில் நின்றிருந்த நைஜீ ரியர்கள் மூவரை வடக்கு  போலீசார் பிடித்து விசா ரணை மேற்கொண்டனர். இதில் சிக்கா அஸ்டின், பிரோன்வு மோசஸ் ஆகிய இருவரும் வைத்திருந்த விசா காலாவதியாகி, சட்ட விரோதமாக இங்கு தங்கி பனியன் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஓடும் ரயிலிலிருந்து விழுந்த முதியவர் காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு

கோவை, செப்.23- கோவை ரயில் நிலையம், நடைமேடை எண் மூன்றில் கண் ணூரிலிருந்து யஸ்வந்த்பூர் செல்லும் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது முதியவர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக தடு மாறி விழுந்த அவர், ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடை யில் சிக்கிக் கொண்டார். இதைக்கண்ட பாதுகாப்பு பணியி லிருந்த போலீசார் ரமேஷ், அருண்ஜித் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு அந்த முதியவரை காப்பாற்றினர். இதைத்தொ டர்ந்து காவல் துறையினர் விசாரித்த போது, அந்த முதியவர் சேலத்தை சேர்ந்த சிவகுமார் என்பது தெரியவந்தது. இதன் பின் அவரை ஆசுவாசப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்த னர். காவலர்கள் முதியவரை காப்பாற்றிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், காவல் துறை யினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வாலிபர் போக்சோவில் கைது

கோவை, செப்.23- கோவை மாவட்டம், அன்னூரைச் சேர்ந்த 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு  படித்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாண விக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.  இதற்கிடையே பிரபாகரன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பலமுறை பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். இதைய டுத்து பிரபாகரன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெற்றோ ருக்கு தெரியாமல் மாணவியை அழைத்துச் சென்று, அப்பகு தியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தார். இதன் பின் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந் துள்ளார். இந்நிலையில், செப்.20 ஆம் தேதியன்று திடீரென மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவர் சிகிக் சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப் போது மருத்துவர்கள், மாணவி 17 வயதில் குழந்தை பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை நலப் பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து அன்னூர் காவல் நிலை யத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 17 வயது மாணவியை திருமணம் செய்து குழந்தை பெற்ற வாலிபரை  கைது செய்தனர். இதன்பின் அவரை நீதிமன்றத்தில் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
 

 

 


 

 

;