districts

img

தோழர் கே.ரமணிக்கு செவ்வணக்கம்

கோயம்முத்தூர், மே 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரும், தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியுமான தோழர் கே.ரமணியின் 18 ஆம்  ஆண்டு நினைவு தினம்  வியாழனன்று அனுசரிக்கப் பட்டது.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் நாடா ளுமன்றத்திலும் சட்டமன்றத் திலும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் தோழர் கே. ரமணி. அவரது நினைவு நாள் நிகழ்வு மார்க்சிஸ்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை  மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்றது. இந்த  நினைவேந்தல் கூட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மையக்கிளைச் செயலாளர் என்.ஜெய பாலன் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், தோழர் கே.ரமணி யின் தலைமையில் நடை பெற்ற தொழிற்சங்க போராட்டங்களையும், கம்யூனிச இயக்கத்திற்கான அவருடைய அளப்பரிய தியாகங்களையும் நினைவு கூர்ந்தார். முன்னதாக, கே. ரமணி அவர்களின் இளைய மகளும், எழுத்தாளரும், கவிஞருமான வத்சலா,  கே.ரமணியின் பொது வாழ்வு குறித்து நினை வேந்தல் நிகழ்வில் கவிதை யாக வாசித்தார்.  

இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் யு.கே.சிவஞானம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே. மனோகரன், கே.அஜய் குமார், கே.எஸ்.கனகராஜ், தீக்கதிர் கோவை பதிப்பு  பொதுமேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், கட்சியின் கோவை மாமன்றக்குழு தலைவர் வி.இராமமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

;