districts

img

பணியிடத்தில் பாலியல் புகார் பெட்டி வைத்திடுக - சிஐடியு

கோவை, டிச.15- பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டி  மற்றும் புகார் பெட்டி அமைத்திருப்பதை உறுதிப்படுத்தக்கோரி சிஐடியு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது. இதுதொடர்பாக சிஐடியு கோவை  மாவட்ட செயலாளரும், புலம்பெயர்ந்தோர் தொழிலாளர் சங்கத்தின் செயலாளருமான எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில்  சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களை பாதுகாத்திடும்  வகையில் 1979, 1981 ஆம் ஆண்டு சட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், பணியிடத்தில் பாலியல் புகார் கமிட்டி மற் றும் புகார் பெட்டி அமைத்து மாதம் ஒரு முறை தொழிலாளர் நலத்துறை கண்கா ணித்திட வேண்டும். வடமாநில தொழிலாளர் களை விருந்தினர் தொழிலாளி என அழைக் கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;