திருப்பூர், அக். 10 – தமிழ்நாட்டில் கலவரத்தைப் புகுத்த நினைத் தால் ஆர்எஸ்எஸ் வாலை ஒட்ட நறுக்க தமிழக மக்கள் தயங்க மாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார். திருப்பூர் எம்.எஸ்.நகரில் ஞாயிறன்று மார்க் சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக்குழு சார்பில் பிரம்மாண்டமான சமூக நல்லிணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரை யாற்றிய கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கொடுக்கும்படி அரசுக்கு நீதிபதி உத்தரவு போடுகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எப்போது காவல் துறை அதிகா ரியாக மாறினார்? உள்ளூர் நிலைமை அறிந்து காவல் துறை முடிவு செய்ய வேண்டிய விசயத் தில் நீதிமன்றம் உத்தரவு போடுகிறது.
எனவேதான் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்துவதென விசிக, சிபிஎம், சிபிஐ முடிவு செய்து அறிவித்தன. அனுமதி கொடுக்க முடி யாது என்று காவல் துறை சொன்னவுடன், வேறு தேதியில் அனுமதிப்பீர்களா என்று நீதிமன்றம் கேட்கிறது. நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர் வலத்துக்கு என தேதி தீர்மானிக்கிறார் நீதிபதி. அனுமதி கொடுக்காவிட்டால் அக்டோபர் 30ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டியிருக் கும் என நீதிபதி மிரட்டுகிறார். ஒரு பதற்றமான சூழலில் கலவரம் வந்தால் சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பேற்றுக் கொள்ளுமா? தமிழ்நாட்டில் கலவரத்தைப் புகுத்த நினைத் தால் ஆர்எஸ்எஸ் வாலை ஒட்ட நறுக்க தமிழக மக்கள் தயங்க மாட்டார்கள். எதற்காக ஆர்எஸ் எஸ் பேரணி நடத்துகிறது? ஜவுளி, விசைத்தறி முடங்கிப் போயுள்ளது, பருத்தி நூல் விலை உயர்ந்து தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்து என ஆர்ப்பாட்டம் நடத்த ஆர்எஸ்எஸ் தயாரா? அம்பேத்கரின் 136ஆவது பிறந்த ஆண்டு நடக்கிறது. ஆனால் அவரது நூற்றாண்டு கொண் டாடுவதாக, பொய் சொல்வதைப் பொறுத்த மாகச் சொல்ல வேண்டாமா? அம்பேத்கார் உரு வாக்கிய அரசியல் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்கும் ஆர்எஸ்எஸ், அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறதா? வாழ்நா ளெல்லாம் சாதி கொடுமைகளை எதிர்த்து போரா டியவர் அம்பேத்கர். அரசியல் சட்டத்தை ஏற்க மாட்டோம், மனு நீதிதான் எங்கள் சாசனம் என அறிவித்த கயவர்கள் கூட்டம் ஆர்எஸ்எஸ்.
மனித விரோத மனுநீதி
மனுநீதி சாதியை கண்டித்ததா? சாதிய கட்ட மைப்பை பாதுகாக்கக்கூடியது, ஆண்களைச் சார்ந்துதான் பெண்கள் இருக்க வேண்டும், பெண்கள் நம்பகத்தன்மை இல்லாதவர்கள் என மனுநீதி சொல்கிறது. மனைவி, மகள்களை நம் பாமல் இருக்க முடியுமா? ஆர்எஸ்எஸ்காரர்கள் தங்கள் குடும்பப் பெண்களை நம்ப மாட்டீர் களா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என சொல் லும் இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமா னது மனு நீதி. பகுத்தறிவு, சிந்தனை உள்ள எந்த மனிதனும் அதை ஏற்கமாட்டான். சூத்திரர்கள் தொழில், வியாபாரம் நடத்தக் கூடாது, ஆடு, மாடு வைத்திருக்கக் கூடாது, தங்க நகை அணியக் கூடாது, நல்ல ஆடை அணியக் கூடாது என மனு நீதி சொல்கிறது. மனு சாஸ்திரம் என்பது மனித விரோத சாஸ்திரம். அதை தீயிட்டுக் கொளுத் தும் போராட்டம் நடத்துவோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள் ளுவன் சொன்ன தமிழகத்தில், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது தமிழ் பண்பாட்டு. மேல் சாதி, கீழ் சாதி என சாதிக்கு ஒரு நீதி, பட்டியலின மக்களை மனிதர்களாகவே அங்கீகரிக்க மறுக் கும் நிலை உள்ளது. இந்து என்றால் எல்லோரும் ஒன்று என்பார்கள், ஆனால் சாதி எனச் சொன் னால் நீ வேறு, நான் வேறு என்பார்கள். எனவே மனு வாதிகளின் ஆர்எஸ்எஸ், மனித நேயம், சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது. இவர் களுக்கு எதிராக மகத்தான போராட்டத்தை நடத் துகிறோம்.
தமிழகத்தில் இடதுசாரி, திராவிட இயக் கங்கள் நீண்ட பயணம் இருக்கும் காரணங்க ளால் தமிழகம் அமைதியாக உள்ளது. வட இந்தி யாவில் பாஜக ஆளக்கூடிய மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்தெல்லாம் 40 லட்சம் பேர் இங்கு வேலை செய்ய வந்துள்ளனர். மதக்கலவ ரம் வந்தால் அமைதி இருக்குமா? உயிர், உடமை களுக்குப் பாதுகாப்பு இருக்குமா? எனவேதான் சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் பாது காக்கப்பட வேண்டும் என போராடுகிறோம். இவ் வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். முன்னதாக கொங்கு மெயின் ரோடு ஏகேஜி நகர் சந்திப்பில் இருந்து செந்தொண்டர்கள் புடை சூழ தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏகேஜி நகரில் செங்கொடியை மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். பட்டாசு, சரவெடிகளுடன் தாரை தப் பட்டை முழங்க எழுச்சி மிகு வரவேற்புடன் பொதுக்கூட்ட திடலை தலைவர்கள் வந்தடைந் தனர். மாநகரக்குழு உறுப்பினர் பா.சௌந்தரரா சன் வரவேற்றார். மாநகரச் செயலாளர் பி.ஆர். கணேசன் தலைமை ஏற்றார். முன்னதாக திருப் பூர் கலைக்குழுவினர் இசைப் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில், முன்னாள் மாமன்ற உறுப்பினர் இ.பி.மரியசிசிலியா, கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உரையாற்றினர். திடீரென மழை கொட்டத் தொடங்கிய நிலையில் செந்தொண்டர்கள் அரண் அமைத்து தலைவர்கள் தொடர்ந்து பேசு வதற்கு ஏற்பாடு செய்தனர். இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கட்சி அணியினர், அப்பகுதி மக்கள் பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்ட னர். இந்நிகழ்வில் தீண்டாமை ஒழி்ப்பு முன்ன ணியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கருவ ரைக்குள் அவன் வந்தாலென்ன என்ற பாடலை மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட, மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் பெற்றுக் கொண்டார். கூட்ட நிறைவில் மாநகரக்குழு உறுப்பினர் ஆர்.நந்தகோபால் நன்றி கூறினார்.