திருப்பூர், அக். 7 - திருமுருகன் பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப் போன உணவை சாப்பிட்ட நிலையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறு தல் கூறினார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கே.பாலபாரதி சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை நேரில் சந்தித்து நலம் விசா ரித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. மூர்த்தி, ஆர்.குமார், டி.ஜெய பால், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஆர். மைதிலி, எஸ்சுந்தரம், ஜி.சம்பத்,தெற்கு மாநகர குழு உறுப்பினர்கள் த.ஆறுகுட்டி, ஜி. பொம்முதுரை மற்றும் வாலிபர் சங்க நிர்வா கிகள் நவீன் லட்சுமணன், சரவணன் ஆகி யோர் உடன் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.