districts

img

மலை பாதைகளை மலைவாழ் மக்களே சரி செய்யும் அவலம்

உடுமலை, டிச.2- உடுமலை அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் பாதைகள்  மழை வெள் ளத்தால் கடுமையாக சேதம் அடைந்து உள்ள நிலையில், அதனை அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாத சூழலில் மலை வாழ் மக்களே சாலையை சீர் செய் யும் பணியை மேற்கொண்டு வரு கின்றனர். உடுமலை தாலுகாவிற்குட் பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் குருமலை, மாவடாப்பு, குழுப் பட்டி, மேல்குருமலை, பூச்சி கொட் டாம்பாறை, கருமுட்டி, காட்டு பட்டி, ஈசல்திட்டு, கோடந்தூர், ஆட்டுமலை, பொருப்பாறு, தளிச்சி, தளிச்சி வயல், மூங்கில் பள்ளம் ஆகிய செட்டில்மென்ட் பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் குருமலை, குழுப்பட்டி, மாவ டாப்பு, மேல்குருமலை பகுதிக ளுக்கு மக்கள் நடைபாதையாக திருமூர்த்தி மலை அடிவார பகுதி யில் இருந்து சென்று வருகிறார் கள். வாகனங்கள் மூலம் செல்ல வேண்டும் என்றால் வால்பாறை செல்லும் வழியில் உள்ள காடம் பாறையில் இருந்து கரடு முரடான மலை பாதையில் இருந்து தான் வாகனங்களில் செல்ல முடியும்.

இந்நிலையில், கடந்த மாதம் முழுவதும்  பெய்த மழையால், மலை பாதைகள் அனைத்தும் கடு மையான சேதம் அடைந்து உள்ள தால் மருத்துவம் மற்றும் ரேசன் உள்ளிட்ட தங்களுடைய அத்தியா வசிய பொருட்களை வாங்குவ தற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.  ஆகவே, தாங்கள் பயன்படுத்தும் பாதைகளை சரி செய்ய வேண்டுமென உடுமலை வருவாய் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து  முறையிட்டு வந்தனர். ஆனால், தற்போது வரை அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை யும் எடுக்காமல், கண்டும் காணா மல் இருந்து வருகின்றனர். இத னால் மலைவாழ் பெரும் இன்ன லுக்கும், சிரமத்திற்கும் ஆளாகி வந்தனர். இந்நிலையில் கடும்  அதிருப்தியடைந்த  குருமலையில் உள்ள மலைவாழ் மக்களே, தாங் கள் அனைவரும் ஒன்றிணைந்து பாதைகளை சரி செய்யும் பணியை துவக்கி கடந்த சில நாட் களாக மேற்கொண்டு வருகின்ற னர்.

 ஆனால், இதன்பின்னரும் அரசு அதிகாரிகள் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் அலட்சிய மாக இருந்து வருவதாக மலை வாழ் மக்கள் குற்றறம்சாட்டுகின்ற னர். மேலும், கடந்த ஒரு மாதங்க ளுக்கும் மேல் கடுமையான மழை  பெய்து வரும் நிலையில், இன்று  வரை உடுமலை வருவாய்துறை அதிகாரிகள் ஒருவர்கூட மழை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு  சென்று  அங்கு வசிக்கும் மக்களின்  நிலை என்ன என்று பெயரவிற்கு கூட ஆய்வுகள் செய்யவில்லை என்றும் ஆவேசமாக தெரிவிக் கின்றனர். அதேநேரம், மலைவாழ் மக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையான திருமூர்த்தி மலையில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டருக்கு தார் சாலை அமைத்தால் மலை வாழ் மக்களுக்கு மருத்துவம் மற் றும் குழந்தைகள் கல்வி கற்பது போன்றவற்றிக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதன் மூலம் தங்களின் வாழ்நிலையும்  மேம்படும் என மலைவாழ் மக்கள்  வேதனையோடு தெரிவிக்கின்ற னர்.

;