districts

பேச்சுப் போட்டியில் வாகை சூடியவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கல்

நாமக்கல், டிச.20- தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட பேச் சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வழங்கி னார். தமிழ் வளர்ச்சித் துறையின் 2021 - 2022 ஆம் ஆண் டிற்கான, நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா  காந்தி, ஜவர்கலால் நேரு ஆகியோரின் பிறந்த நாளன்று  மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்.2 ஆம் தேதி யன்று நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மணலி ஜேடர் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவன் முதல் பரிசும், ஜேடர்பாளையம் அரசினர் மே ல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி ஜோ.சினேகா இரண்டாம் பரிசும், சௌதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி க.பூமிகா மூன்றாம் பரிசும், மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி ஆ.ஸ்ரீகவி, நாமக்கல் அரசு மகளிர்  மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி செ.மகிமா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற்றனர். இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் நாமக் கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுரி விலங்கியல் துறை மாணவி செ.குணவதி முதல் பரிசும், எருமப்பட்டி அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி மாணவி மு.வித்யா இரண்டாம் பரிசும், நாமக்கல் கவிஞர் இராம லிங்கம் பிள்ளை மகளிர் அரசு கலைக்கல்லூரி கணித வியல் துறை மாணவி செ.ஜெயலட்சுமி மூன்றாம் பரிசும் பெற்றார். இதேபோல் ஜவர்கலால் நேரு பிறந்தநாளான நவ.14 ஆம் தேதியன்று நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 16 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வழங்கினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் வே.ஜோதி உட்பட  மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

;