தருமபுரி, செப்.7- தமிழக அரசின் புதுமைப் பெண் நிதியுதவி திட்டத்தால் மாணவி யரின் இடைநிற்றலை தடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தருமபுரியில் பள்ளிக் கல்வித் துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் புதனன்று அரசு மருத்துவக் கல்லூரி கலையரங் கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வர வேற்று பேசினார். தருமபுரி மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜி.கே. மணி (பென்னாகரம்), எஸ்.பி. வெங்கடேஸ்வரன் (தருமபுரி), சதா சிவம் (மேட்டூர்) உள்ளிட்டோர் பேசி னர். இதன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தி யாளர்களிடம் கூறுகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் தருமபுரியில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் தரும புரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங் களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்று பல் வேறு கருத்துக்களை தெரிவித் துள்ளனர். கல்வியில், பின் தங்கிய நிலையில் உள்ளதாகக் கருதப்படும் இந்த 4 மாவட்டங் களில் கல்வித் தரத்தை மேம்படுத் துவதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் பெறப்பட் டுள்ளது. அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதனையொட்டி, கடந்தாண்டு முதற் கட்ட கூட்டமும், தற்போது இரண்டாம் கட்டமாக ஆய்வுக் கூட்டங்களும் நடை பெற்று வருகிறது. இந்த மாவட் டங்களில் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இருப்பதை அறிய முடிகிறது.
குறிப்பாக, தருமபுரி, கிருஷ்ண கிரி மாவட்டங்களில் இதுபோன்ற நிலை இருப்பதைஅறிய முடிகிறது. இக்குறையை களைய தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரு கிறார். இதில், குறிப்பாக அண்மை யில் அறிவிக்கப்பட்ட புதுமைப் பெண் நிதியுதவி திட்டம் இந்த இடை நிற்றலை தடுக்கும். இங்கு மட்டு மல்ல, தமிழகம் முழுவதிலுமே பெண் குழந்தைகள் இடை நிற்றலை இத்திட்டம் தடுக்கும். இதேபோல, தமிழகத்தில் பல் வேறு மாவட்டங்களில் பள்ளிக் கல்வி தொடர்பாக சில பிரச்ச னைகள் உள்ளதாக தெரிய வந் துள்ளது. இவை அனைத்தையும் அரசு பள்ளிகளில் பயின்ற கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் புதுமைபெண் திட்டம் மூலம் களையும். இந்தக் ஆய்வுக் கூட்டங்கள் மூலமாக பெறப்படும் கருத்துக்கள் அனைத்தும் முதல்வரின் கவனத் துக்கு எடுத்துச் சென்று நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இத்தகைய கள ஆய்வின் மூலமாக ஏராளமான கருத்துக் களையும், ஆலோசனைகளையும் பெற முடிகிறது. ஆகவே, நாங்கள் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு வருகிறோம். பள்ளிக் கல்வித்துறை மூலம் மாணவர் களுக்கு இலவச திட்டங்கள் வழங் கப்படுகிறது. இவை மாணவர் களை சரியாக சென்றடைந் துள்ளதா அல்லது அதில் ஏதேனும் குறை உள்ளதா எனவும் ஆய்வு நடத்தி வருகிறோம். மாணவ, மாணவியரின் பாதுகாப்புக் கருதி சிதிலமடைந்த வகுப்பறை உள் ளிட்ட கட்டிடங்கள் இடித்து அகற் றப்பட்டன. அந்த இடங்களில் தேவைக்கேற்ப புதிய கட்டிடங்கள் கட்டுவது குறித்து பட்டியல் சேக ரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளிக்கும் வகுப் பறையைப் போலவே கழிப்பறை கட்டிடங்களும் முக்கியம். அவை, வகுப்பறைகளைப் போலவே தூய் மையாக இருப்பதும் அவசியம். அதனால்தான் நாங்கள் ஆய்வுக் கூட்டங்களின்போது, முன்னறிவிப் பின்றி திடீரென நேரடியாக பள்ளி களுக்கு சென்று கழிப்பறையின் சுத்தம், பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறோம். அதேபோன்று, அரசுப் பள்ளிகளில் போதிய கழிப் பறை வசதிகளை ஏற்படுத்த தேவை யான நிதி ஒதுக்கீடு செய்யப் படும். கழிப்பறைகளை பள்ளிக் கல்வித்துறை மட்டுமன்றி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி உள் ளிட்ட துறைகள் மூலமும் பரா மரிக்க வேண்டும். கழிப்பறை கட்ட டங்கள் இல்லாத பள்ளிகளில் தனி யார் சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆர்) மூலம் கட்டி பராம ரிக்கவும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்வரும் 4 ஆண்டுகளில் பள்ளி களின் கழிப்பறைகளை ஏற் படுத்தி பராமரிக்கவும், வகுப்ப றைகள் கட்டவும் ரூ.7,000 கோடி ஒதுக்கப்படும். அதில், நிகழாண் டில் 1,300 கோடி ஒதுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவத்திற்கான ‘நீட்’ தேர்வை அரசுப் பள்ளி மாணவர் களும் ஏராளமானவர்கள் எழுதி யுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் எப்படியிருந்தாலும் மாணவ, மாண வியர் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரும் தொடர்ந்து ஆலோ சனை வழங்கி வருகிறார். மேலும், தன்னம்பிக்கை வழிகாட்டி நிகழ்ச்சிகளையும் அரசு நடத்தி வருகிறது. எனவே, மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எல் லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார். இக்கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சரிடம் சிபிஎம் மனு
பெரியாம்பட்டி அரசு பள்ளியில் பழுதடைந்த வகுப்பறையை புதுப்பிக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றிய கவுன்சிலர் வி.உதயக்குமார், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யா மொழியிடம் மனு அளித்தார். அவர் அளித்துள்ள மனுவில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்திற்குட்பட்ட பெரியாம் பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சுற்றுவட்டார கிராமத்தில் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பழைய கட்டிடம் என்பதால் பல வகுப்பறைகள் பழுதடைந்தால் இடிந்து விழும் சூழல் நிலையில் உள்ளது. எனவே பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புது வகுப்பறை கட்டடம் அமைத்து தரவேண்டும். மேலும் இதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. தாழ்வான பகுதியில் பள்ளி அமைந் துள்ளதால் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே பள்ளி யில் மழைநீர் தேங்காதவாறு தரைபகுதிக்கு பவர் பிளாக் கல் அமைத்து தரவேண்டும். பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ள தால், பள்ளி விடுமுறை நாட்களில் சமூக விரோதி கள் கூடராமாக மாறி விடுகின்றன. எனவே பள்ளி யின் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரித்து தர நடவ டிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.