districts

ஜூன் 15 ஆம் தேதி கொடிசியாவில் திமுகவின் முப்பெரும் விழா அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோவை, ஜூன் 10- கோவை கொடிசியா மைதானத் தில் ஜூன் 15 ஆம் தேதி, திமுகவின்  முப்பெரும் விழா நடைபெற உள்ள தென அமைச்சர் சு.முத்துசாமி செய்தி யாளர்களிடம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழ் நாடு – புதுச்சேரியில் 40/40 வெற் றியை கொடுத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மகத்தான  வெற்றிக்கு காரணமான திமுக தலை வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவானது கோவையில் நடைபெற உள்ளது.  

இதுதொடர்பாக மாநில வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி திங்க ளன்று செய்தியாளர்களிடம் கூறுகை யில், கொடிசியா மைதானத்தில் ஜூன்  15 ஆம் தேதியன்று மாலை 4 மணிக்கு  முப்பெரும் விழா நடைபெற்றது. இன் றைய தினம் (திங்களன்று) இதற்கான  அடிக்கல் நடும் நிகழ்ச்சி நடைபெற் றது. மேலும், இந்தியா கூட்டணி ஆட் சியை பிடிக்கவில்லை என்றாலும், மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதனால் பாஜக மத்தியில் தன்னிச் சையாக செயல்பட முடியாமல் தவிக் கிறது. மக்கள் பெருவாரியான வாக்கு கள் கொடுத்துள்ளனர் முதல்வர் மேல்  வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரித் துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுக ளில் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட  பல்வேறு திட்டங்கள் நிலைத்து நிற் கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் பல் வேறு பணிகளை செய்துள்ளார். இது தான் முக்கியமான வெற்றிக்கு கார ணம். எங்கேயும் நடக்காத மாபெரும்  வெற்றியாக இது அமைந்துள்ளது. இந்த விழா முதலில், செட்டிபாளை யம் எல்அண்ட்டி புறவழிச்சாலை யில் திட்டமிட்ட நிலையில், மழை யின் காரணமாக கொடிசியா மைதா னத்திற்கும், ஜூன் 14 ஆம் தேதிக்கு பதி லாக 15 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள் ளது, என்றார்.

பின்பு, இந்த முப்பெ ரும் விழா சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, 2026 அடித்தளம் போட்டு வெகு நாட்கள் ஆனது. இது  தேர்தலை நோக்கி அல்ல, மக்களை  நோக்கிய பயணம், என்றார். இந்நிகழ்வின்போது, திமுக மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த் திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி  முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சட்டத் துறை இணைச்செயலாளர்கள் கே.எம்.தண்டபாணி, அருள்மொழி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார், துணைமேயர் வெற்றிச்செல் வன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.