districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரயில்வே கேட் விழிப்புணர்வு பேரணி

சேலம், ஜூன் 6- சர்வதேச ரயில்வே கேட் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு, சேலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேர ணியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் துவக்கி வைத்தார்.

சர்வதேச ரயில்வே கேட் விழிப்புணர்வு நாள் ஜூன் 6, 7  ஆகிய தினங்கள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே கேட் விழிப்பு ணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சேலம், கோவை, திருப் பூர், ஈரோடு, கரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த சேலம்  ரயில்வே கோட்டத்தில் ரயில்வே கேட் கிராசிங் விழிப்பு ணர்வு பேரணி பெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவ லகம் முன்பிருந்து துவங்கிய பேரணியை, கோட்ட  மேலாளர் பங்கஜ்குமார் சிங்கா துவக்கி வைத்தார். அப் போது, ரயில்வே பாதையை கடக்கும்போது இருபுறமும் பார்த்து செல்ல வேண்டும். ரயில்வே கேட் முன்பு இருக் கும் எச்சரிக்கை பலகைகளை மதித்து நடக்க வேண் டும். விலைமதிப்பு இல்லாத உயிரை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்டு பலர் பங்கேற்ற னர்.

 

சாலையில் சரிந்த தடுப்புச்சுவர்கள் சீரமைக்கும் பணி தீவிரம்

நாமக்கல், ஜூன் 6- கொல்லிமலையில் பிரதான சாலையில் மழையால் சரிந்த தடுப்புச்சுவர்களை சீரமைக்கும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலாத் தலத்திற்கு, தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்க ளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து  செல்கின்றனர். கடந்த சில வாரங்களாக கொல்லிமலை யில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வனப்பகுதி யில் உள்ள காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளை வுகளை கொண்ட பிரதான சாலையில், மழையின் கார ணமாக சில கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள தடுப் புச்சுவர்கள் சரிந்து விழுந்தது. உடனடியாக நெடுஞ் சாலைத்துறையினர் சரிந்து விழுந்த கற்களை அகற்றி  போக்குவரத்தை சரி செய்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொல்லிமலையில் மழை இல் லாததால் தடுப்புச்சுவர்கள் சீரமைக்கும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. இதனை சேந்தமங்க லம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட உதவி செயற் பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் சுப்பிர மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட னர். மழை தொடங்குவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

\மேலும், கொண்டை ஊசி வளைவுகளில் மண்சரிவு  அபாயம் ஏற்பட உள்ள இடங்களை ஆய்வு மேற் கொண்டு, தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. வனப்பகுதியில் இருந்து சாலைகளுக்கு மழைநீர் வரும் பகுதிகளை ஆய்வு செய்து, சாலைக்கு செல்லா மல் அருகில் உள்ள மழைநீர் வடிகாலில் செல்வதற்கு ஏதுவாக சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை யும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சிசிடிவி பழுது நீக்க பயிற்சி

ஈரோடு, ஜூன் 6- ஈரோட்டில், இலவசமாக கண்காணிப்பு கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் பயிற்சி அளிக் கப்படுகிறது.

இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவசமாக கண்காணிப்பு கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி ஜூன் 13 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி  வரை 13 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. இப் பயிற்சியில், சீருடை, உணவு உட்பட அனைத்தும் இல வசம் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றி தழ் வழங்கப்படும். இதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்ட வர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக் கப்படுவர். நூறு நாள்  வேலைத் திட்டத்தில் இருப் பவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ்  உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்ப முடையோர் 8778323213, 7200650604, 0424-2400338 ஆகிய  எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மயக்கமடைந்த பெண்ணிடம் நகை திருட்டு

கோவை, ஜூன் 6- மயக்கமடைந்த பெண்ணிடம் 3 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம், இளங்கோ நகரில் பிரபல பல் மருத்துவமனையில், அப்பகுதியைச் சேர்ந்த  சூரிய நாராயணன் என்பவரது மனைவி முத்துப் பாண்டியம்மாள் (26) ஊழியராக வேலை பார்த்து வருகி றார். இந்நிலையில், முத்துப்பாண்டியம்மாள் வேலைக்கு சென்றபோது, அவருக்கு தலை சுற்றி மயக்கம் ஏற்பட் டது. இதுகுறித்து அங்குள்ள மருந்துக்கடையில் பணி யாற்றி வரும் சக பெண் ஊழியர் ரம்யா என்பவரிடம் கூறி னார். அவர் உடனே முத்துபாண்டியம்மாளை வந்து  கடையில் படுத்து ஓய்வு எடுக்கும்படி கூறியுள்ளார். பிறகு அவரை, சூரியநாராயணன் வந்து அழைத்துச் சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கழுத்தில் இருந்த 3 பவுன் நகை காணாமல் போனது கண்டு  அதிர்ச்சியடைந்தார். மயக்கம் அடைந்து விழுந்தபோது நகையை யாரோ திருடி இருக்கலாம் என சந்தேகம் அடைந்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறை கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல்

சேலம், ஜூன் 6- சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ள கைதியிடமிருந்து கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவர், வழிப் பறி சம்பவங்களில் ஈடுபட்டு கைதானார். அவரை கன்னங்குறிச்சி போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதன்பின் அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் சிறை யில் கைப்பேசி பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. சிறைக் காவலர்கள் கண்காணித்து வந்தனர். அப்போது, அவர் அடைக்கப்பட் டுள்ள அறையில் சோதனை நடத்தியதில், அங்கு ஒரு கைப்பேசி, சிம் கார்டு, வயர் ஆகி யவை இருப்பது தெரியவந்தது. அவற்றை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் துறையி னர், வழக்குப்பதிவு செய்து, அஜித்குமா ருக்கு எவ்வாறு கைப்பேசி கிடைத்தது? என் பது குறித்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

அணை நிலவரம்

மேட்டூர் அணை
நீர்மட்டம்: 44.880 அடி
நீர்வரத்து: 239 கனஅடி
நீர் திறப்பு:2100 கனஅடி
பவானிசாகர் அணை
நீர்மட்டம்:56.14/105 அடி 
நீர்வரத்து: 592 கனஅடி
நீர் திறப்பு: 155 கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:78.40/120அடி
நீர்வரத்து:171கனஅடி.
நீர் திறப்பு:32கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:39.53/160 அடி
நீர்வரத்து:190.94கனஅடி

போலி தங்க நாணயம் கொடுத்து மோசடி

நாமக்கல், ஜூன் 6- ராசிபுரத்தில் போலி தங்க நாணயம் கொடுத்து மோசடி செய்த கும்பல் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அதிசயராஜ் என்பவரின் மனைவி பத்மாவதி. இவர்  அப்பகுதியில் ஆடை தயாரிப்பு தொழில் செய்து வருகிறார்.  இவரது தொழிற்கூடத்தில் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த  பாசா என்பவர் மகன் சேட்டு வேலை செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பத்மாவதியிடம், தங்க நாணயங்கள் குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி யுள்ளார். வருமான வரி செலுத்த வேண்டிய பிரச்சனை உள்ள தால், குறைந்த விலைக்கு தங்க நாணயம் தருகின்றனர் எனக்கூறி, ரூ.65 லட்சம் மதிப்புள்ள நாணயங்களை ரூ.45  லட்சத்து பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார். இதனைய டுத்து ரூ.20 லட்சத்துக்கு மட்டும் தற்போது வாங்கிக்கொள்ள லாம் என பேசி முடித்துள்ளனர்.

ஆனால், தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்த வேண்டும் எனக்கூறியதால் சேட்டு, அவரது நண்பரான முகமது ஜாவித்  (34) ஆகிய இருவரும் பெங்களூருவிலிருந்து பெற்று வந்ததா கக்கூறி இரு தங்க நாணயங்களை கொண்டு வந்து கொடுத் துள்ளனர். இதனை கடைக்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது உண்மையான நாணயங்கள் தான் என தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் நம்பிய பத்மாவதி ரூ.20 லட்சம் கொடுத்து நாணயங்கள் பெற்று வரச்சொல்லி யுள்ளார். இதனையடுத்து இருவரும் பெங்களூரு சென்று, ராஜேஷ் என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாக கூறப்படு கிறது. மொத்தம் 1600 நாணயங்கள் கொண்டு வந்து பத்மாவதி யிடம் கொடுத்துள்னர். அதனை பத்மாவதி சோதனை செய்து  பார்த்தபோது, அனைத்தும் போலியானவை எனத்தெரிய வந்தது.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பத்மாவதி நாம கிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் இடைத்தரகர்களாக செயல்பட்ட சேட்டு, முகமது ஜாவித் ஆகிய இருவரையும் கைது செய்து  விசாரணை மேற்கொண்டனர். இந்த மோசடியில் பெங்களூரு வைச் சேர்ந்த ராஜேஸ் உள்ளிட்ட 4 பேர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவரது தகவலின் பேரில் பெங்களூரு சென்ற  போலீசாருக்கு ராஜேஷ் உள்ளிட்ட மோசடி கும்பல் தலை மறைவானது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் ராசிபுரம் வட்டா ரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

;