தருமபுரி, பிப்.20- இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் திற்கு அங்கீகாரம் வழங்க வேண் டும், என வலியுறுத்தி, இன்சூரன்ஸ் ஊழியர்கள் வியாழனன்று வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். எல்ஐசி முழுவதும் ஏறத்தாழ 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூன்றாம் மற்றும் நான்காம் நிலை ஊழியர் கள் இருந்த நிலையில், 1993 ஆம் ஆண்டுக்கு பிறகு எல்ஐசி-யில் முழு மையான பணி நியமனம் இல்லை. பலமுறை நிர்வாகத்திடம் முறை யிட்டும் பணி நியமனம் செய்யப் படவில்லை. மேலும், ஊழியர்க ளின் எந்த பிரச்சனையும் நிர்வாகம் தீர்ப்பதில்லை. ஊழியர்கள் மீது பல்வேறு நிபந்தனைகளை நிர்வா கம் விதிக்கிறது. இப்பிரச்சனை களை தீர்க்க அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங் கீகாரம் வழங்க வேண்டும், என வலியுறுத்தி வியாழனன்று ஒரு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கிளைத் தலைவர் ஏ.சங்கர் தலைமை வகித்தார். கோட்ட துணைத்தலைவர் ஏ. மாதேஸ்வரன், இணைச்செயலா ளர் ஏ.சந்திரமௌலி, கிளைப் பொருளாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பாலக்கோட்டில் கிளைச் செயலா ளர் நரசிம்மன், அரூரில் கிளைச் செயலாளர் ஞான செல்வம் ஆகி யோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.