ஈரோடு, மே 16- சீமைக்கருவேல மரங்களை அகற்றி, புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி யுள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒன்றி யத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 14 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் புறம் போக்கு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் இருக்கும் சீமைக்க ருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். இப்பணியில் தொண்டு நிறுவ னங்களையும் ஈடுபடுத்த வேண்டும். மேலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும் இடங்களில் புதியதாக மரக்கன்றுகளை நட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவு றுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலு வலர், மாவட்ட வன அலுவலர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.