districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பழங்குடியின கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு

உதகை, செப்.9- உதகை அருகே உள்ள பாகல்கோடுமந்து பழங் குடியின கிராமத்தில், தமிழக பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த பாகல்கோடு மந்து பழங்குடியின கிராமத்தில் கட்டப்படும் பழங்குடியி னருக்கான பால் பதனிடும் நிலையத்தை தமிழக பழங் குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  முன்னதாக, தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு-  உறைவிட உயர்நிலைப்பள்ளியை ஆய்வு செய்து, அங்குள்ள  பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களை சந்தித்து அப் பள்ளியை மேலும் தரம் உயர்த்தும் வழிமுறைகள் குறித்து  கலந்துரையாடினார். இதனையடுத்து பந்தலூர் வட்டத்தில் புதிய வீடுகள் கோரிய பழங்குடியின கிராமங்களான 10 ஆம்  நம்பர் காலனி, ஏலமன்னா ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டார்.  இதன்பின் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பழங்குடியின மக்க ளுக்கு வன உரிமை வழங்குவது, அவர்களுக்கு வீடு மற்றும்  அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது. மேலும், இதற்கு முன்னதாக வழங்கப்பட்ட பழங்குடியின வீடுகளுக்கு வழங் கப்பட்ட தொகையைவிட தற்போது வழங்கப்படும் வீடு களுக்கு கூடுதலாக தொகை வழங்கப்படும் எனவும், அத் துடன் பணி முடிக்காமல் நிலுவையில் உள்ள வீடு களுக்குத் தேவையான முன்மொழிவுகள் அனுப்பும் பட்சத்தில் கூடுதலாக தொகைப் பெற்றுத் தருவதாகவும் அண்ணாதுரை உறுதியளித்தார். முன்னதாக, இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அம்ரித்,  மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காரம், மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயராமன், முது மலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்குமார், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை

ஈரோடு, செப். 9- ஈரோடு, காசிபாளையம் மற்றும் கோபி அருகே டி.ஜி. புதூர்  அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக  உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம் என மாவட்ட நிர்வாகத்தின் செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிட்டர், மெக் கானிக் மோட்டார் வெகிக்கிள், ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏர்கன்டிசனிங் டெக்னீசியன் ஆகிய தொழிற்பிரிவுகளில், சேர்ந்து பயில விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கோபி செட்டிபாளையம் மற்றும் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகலாம். 14 வயது முதல் 40 வயது  வரை உள்ள ஆண் பயிற்சியாளர்கள் மட்டுமே விண்ணப் பிக்கலாம். பெண் பயிற்சியாளர்களுக்கு வயது வரம்பில்லை.  பயிற்சியில் சேரும் மாணவ, மாணவியருக்கு சிறந்த கட்டணமில்லா பயிற்சியுடன் தமிழக அரசால் மாதம் ரூ.750 உதவித் தொகை அளிக்கப்படும். அரசு பள்ளிகளில் படித்து முடித்துவரும் தகுதியுள்ள பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகையும், விலையில்லா பாட புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வரை படக் கருவிகள், தையற்கூலியுடன் இரண்டு செட் சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து அடையாள அட்டை  வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், டி.ஜி.புதூர், கோபி மற்றும் முதல்வர்,  அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு  என்ற முகவரியில்  அல்லது நேரிலும்  94990 55705, 9443257677 ஆகிய எண்களிலும்  தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சாலை விபத்தில் ஒருவர் பலி

உதகை, செப். 9 -  குன்னூர்-மேட்டுப் பாளையம் தேசிய நெடுஞ் சாலையில் காட்டேரி பூங்கா  அருகே கே.எம்.எஸ் கடை உள்ளது. குன்னூரிலிருந்து மேட்டுபாளையம் நோக்கி  சென்ற ஸ்கார்பியோ வாக னம் சாலையோரம் வளை வில் இருந்த கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.  இதில் கடையில் இருந்த  ரஞ்சித்குமார் (35), பாலக் காட்டை சேர்ந்த கார் ஓட்டுநர்  ரஞ்சித்(19)  மற்றும் வாகனத் தில் வந்த எட்டுபேரை காவல் துறையினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் குன்னூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில்  பாலக்காட்டை சேர்ந்த  கார்  ஓட்டுநர் ரஞ்சித் (19) பரிதாப மாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த மற்ற 9 பேரும் குன்னூர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த விபத்து குறித்து  காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடு புகுந்து திருட முயன்று வளர்ப்பு நாயிடம் சிறைப்பட்ட இளைஞர்

திருப்பூர், செப். 9- பல்லடம் அருகே வடுகபாளையம் புதூரில் வீடு புகுந்து  திருட முயன்ற வாலிபரை, வீட்டு உரிமையாளரின் வளர்ப்பு  நாய் இரண்டு மணி நேரம் ‘சிறை’ பிடித்து வைத்தது. திருப்பூர் மாவட்டம், பல்லடம், வடுகபாளையம் புதுார் ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபால் (52). விவசாயி. வியாழ னன்று அதிகாலை, வாலிபர் ஒருவர், இவரது வீட்டு காம்ப வுண்ட் சுவரை தாண்டி குதித்து உள்ளே வந்து திருட முயன் றார். அப்போது காம்பவுண்டில் இருந்த வீட்டு உரிமையாளர்  கோபாலின் வளர்ப்பு நாய் அவரைப் பார்த்து சத்தமாக குறைத் தது. அந்த நாயைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து பயந்து போன  வாலிபர் தப்பி செல்ல முடியாமல் நின்ற இடத்தில் ஒடுங்கிப்  போனார். நீண்ட நேரமாக அந்த நாய் குறைத்துக் கொண்டிருந் தது.சிறிது நேரம் கழித்து வீட்டு உரிமையாளர் வீட்டு கதவைத்  திறந்து வெளியே வந்து பார்த்தபோது, அந்த நாயினால் இளை ஞர் ஒருவர் முற்றுகையிடப்பட்டு இருப்பதை பார்த்தார். இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். காவல்துறையினர் நேரில் வந்து அந்த இளைஞரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் பீகார்  மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் என்பது தெரிய  வந்தது. வீடு புகுந்து திருட முயன்ற போது அந்த நாயிடம்  மாட்டிக் கொண்டதும், அவர் சிக்கியதாக தெரிவித்தார். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காமநாயக்கன்பா ளையம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில்  போலி சாவியை போட்டு திறக்க முயன்று அப்பகுதி மக்களால்  பிடிக்கப்பட்டு கடுமையாக உதைத்து அனுப்பியதும் தெரிய  வந்தது. மேலும் ஏதேனும் திருட்டு சம்பவங்கள் ஈடுபட்டு இருக் கிறாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வரு கின்றனர்.

முதல்வருக்கு எம்எல்ஏ செல்வராஜ் நன்றி

திருப்பூர், செப். 9 - திருப்பூரில் தகை சால் பள்ளி உருவாக்கப்படும் என்று அறி வித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் நன்றி தெரிவித்துள் ளார். கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரில் பள்ளிக் கல் வித்துறை அமைச்சரை சந்தித்து, திருப்பூரில் தகை சால் பள்ளி  உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். மேலும்  முதல்வருக்கும் கடிதம் எழுதினேன். தற்போது திருப்பூரில் தகை சால் பள்ளி உருவாக்கப் படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக முதல்வர், பள் ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு திருப்பூர் மக்கள்  சார்பில் நன்றி தெரிவிப்பதாக க.செல்வராஜ் குறிப்பிட் டுள்ளார்.

தியேட்டர் உரிமையாளர் இழப்பீடு வழங்க உத்தரவு

திருப்பூர், செப். 9 – திருப்பூரில் டிக்கெட் முன்பதிவு செய்து படம் பார்க்கச் சென்றபோது, குடும்பத் தலைவர் மதுபானம் அருந்தி இருப்ப தாகக் கூறி, ஒரு குடும்பத்தாரை திரையரங்கிற்குள் அனு மதிக்க மறுத்து வெளியேற்றிய விவகாரத்தில் இழப்பீடு  வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலை மகாலட்சுமி குடியிருப்பைச்  சேர்ந்தவர் செல்வநாயகம். இவர் தனது மனைவி மற்றும்  மகளுடன் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று மாலை  திரைப்படம் பார்ப்பதற்காக யூனியன் மில் சாலையில் உள்ள  ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு சென்றுள்ளார். முன்பதிவு செய்த டிக் கெட்டுடன் அங்கு சென்றபோது, செல்வநாயகம் மதுபோ தையில் இருப்பதாகக் கூறி உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர். அத்துடன் டிக்கெட் முன்பணத்தையும் திருப்பித் தராததால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக செல்வநா யகம் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயத்தில் கடந்த  2020ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதில் திரையரங்கில் படம் பார்க்க  செல்வநாயகத்திற்கு அனுமதி மறுத்ததுடன், டிக்கெட் முன்ப ணத்தையும் தராதது நிரூபிக்கப்பட்டுள்ளது. எதிர்தரப்பினர்  வாதத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை. எனவே அவரி டம் வசூலிக்கப்பட்ட டிக்கெட் முன்பணத்தை கொடுப்பதுடன்,  மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகை யாக ரூ.5 ஆயிரத்தையும், வழக்குச்செலவு ரூ.5 ஆயிரத் தையும் ஸ்ரீ சக்தி திரையரங்க உரிமையாளர் சுப்பிரமணியம் வழங்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் இந்த தொகையை வழங்காவிட்டால் அதன்பிறகு பணத்தை ஒப்ப டைக்கும் காலம் வரை 6 சதவிகித வட்டியையும் கணக்கிட்டு  அதை சேர்த்து வழங்க வேண்டும் என நுகர்வோர் வழக்குத்  தீர்ப்பாயத் தலைவர் தீபா உத்தரவிட்டுள்ளார்.

வங்கி ஊழியர்  மீது வழக்கு

திருப்பூர் செப்.9- பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் மாணிக்கம்(47) . தனியார் வங்கி ஊழியர். இவர் கடந்த  7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந் தார். இதற்கான மாத தவணை கடந்த சில மாத மாக செலுத்தவில்லை என்று  கூறப்படுகிறது. வங்கி கிளை  சார்பில் தவணை தொகையை வசூல் செய்ய தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் மாணிக்கத்தின் வீட் டுக்கு வந்துள்ளார். அவரு டன் வாக்கு வாதம் செய்து  தகராறில் ஈடுபட்ட மாணிக் கம் கட்டையால் அவரது தலையில் தாக்கினார். இது குறித்து சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில்  மாணிக்கத்தை கைது செய்து  பல்லடம் போலீசார் விசார னை மேற்கொண்டுள்ளனர்.

சிக்கண்ணா கல்லூரி மாணவர் சேர்க்கை

திருப்பூர், செப்.9- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முது நிலைப்பட்ட வகுப்புகளுக் கான மாணவா் சேர்க்கைக்கு  ஆன்லைன் மூலமாக வரு கிற 16 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறி விக்கப்பட்டுள்ளது.  கல்லூரி  இணையதளம் தவிர போலியான வேறு முகவரியில் விண்ணப்பித்து ஏமாற வேண்டாம். இதில், விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.60  நெட்பேங்கிங், டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் மூல மாக செலுத்தலாம் என அறி விக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை சேதப்படுத்தியவர் கைது

திருப்பூர், செப். 9 - திருப்பூரில் வெவ்வேறு மூன்று இடங்களில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்தியது தொடர்பாக காவல் துறையினர் புலன் விசா ரணை செய்து குற்றவாளியை கைது  செய்தனர். திருப்பூர் தெற்கு காவல் நிலைய  சரகத்திற்கு உட்பட்ட ஈஸ்வரன் கோயில் வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள விநாயகர் சிலையின்  இடது கை பகுதி கடந்த 6ஆம் தேதி  இரவு சேதப்படுத்தப்பட்டது. அதே போல் தென்னம்பாளையம் காலனி பகுதியில் அமைந்துள்ள சக்தி மாரி யம்மன் கோயில் வெளிப்புற வளாகத் தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர்  சிலையின் வலது மற்றும் இடது பக்க  கை பகுதி சேதப்படுத்தப்பட்டு இருந் தது. கே.எம்.ஜி.நகர் பகுதியில் உள்ள  காமாட்சியம்மன் கோயில் வளாகத் தில் விநாயகர் சிலையின் வலது மற் றும் இடது பக்க கை பகுதிகள் சேதப்ப டுத்தப்பட்டு இருந்தன.  செவ்வாய்க்கிழமை 6ஆம் தேதி  ஒரே நாளில் நடைபெற்ற இந்த சம்ப வங்கள் குறித்து தெற்கு காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட் டது.

மாநகர காவல் ஆணையர் சா.பிர பாகரன் உத்தரவின்பேரில் காவல் உதவி ஆணையர்கள் பி.என்.ராஜன்,  கண்ணையன் ஆகியோர் தலைமை யில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப் பட்டன. விநாயகர் சிலைகள் சேதப்படுத் தப்பட்ட சம்பவங்கள் மதம், அரசியல்  அல்லது சமூக விரோதிகளால் நடைபெற்றதா என்ற ரீதியில், பல் வேறு கோணங்களில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டனர். சம்பவ இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு  செய்ததில் சுமார் 60 வயது மதிக்கத் தக்க நீல நிற சட்டை அணிந்திருந்த நபர் ஒருவர் மட்டுமே அடுத்தடுத்து மூன்று இடங்களிலும் விநாயகர் சிலைகளை சேதப்படுத்திச் செல் வது கண்டறியப்பட்டது. இவர் திருப்பூர் வெள்ளியங்காடு திரு.வி.க.நகர் ஏழாவது வீதி அமிர்தா காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த ஆ.மருதாச்சலம் (62)  என்பது தெரியவந்தது. அவரை  காவல் துறையினர் வெள்ளி யன்று கைது செய்தனர். அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசா ரணை செய்ததில், அவரது குடும்பத் தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக கடும் மன  உளைச்சலில் இருந்து வந்ததாக வும், தனக்கு வாழ்க்கை சரியாக அமையாததால் கடவுள் மேல் வெறுப்பு ஏற்பட்டு கல்லால் சிலையை சேதப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். சமுதாயத்தில் பதற்றம் ஏற்படுத் தும் வகையில் சிலையை சேதப்ப டுத்திய நிலையில் 48 மணி நேரத்தில்  குற்றத்தில் ஈடுபட்டவரை காவல் துறை தனிப்படையினர் கைது செய்த தற்கு மாநகர காவல் ஆணையர் சா. பிரபாகரன் பாராட்டுத் தெரிவித்தார்.

94 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் குறுஞ்செய்தியால் கூலி தொழிலாளி அதிர்ச்சி

ஈரோடு, செப்.9- வீட்டிற்கு ரூ.94,985 மின் கட்டணம் செலுத்துமாறு வந்த குறுஞ்செய்தியால் கூலித்தொழிலாளி அதிர்ச்சியடைந்தார். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள  மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரேவண்ணா.  கூலி தொழிலாளியான இவர் மனைவி காளி மற்றும் குழந் தைகளுடன் கிராமத்தில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வருகி றார். வீட்டிற்கு தனது மனைவி காளி பெயரில் மின் இணைப்பு  பெற்றுள்ளார். இவரது வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன் படுத்தி வந்தார்.  இந்நிலையில் இலவச பயன்படு என்பதால் இதுவரை மின் கட்டணம் செலுத்தவில்லை. இந்நிலையில், அவரது செல் போன் எண்ணிற்கு ரூ.94,985 மின் கட்டணம் செலுத்துமாறு  குறுஞ்செய்தி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த  ரேவண்ணா உடனடியாக தாளவாடி மின்வாரிய அலுவ லகத்திற்கு சென்று அதிகாரியிடம் முறையிட்டார். மின்சார மீட் டர் கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தவறாக குறுஞ்செய்தி வந்துள்ளது என அவரிடம் தெரிவித்ததை தொடர்ந்து ரேவண்ணா நிம்மதி அடைந்தார்.

நிதி முறைகேடு: அரசு ஊழியர் சஸ்பெண்ட்

உதகை, செப்.9- உதகை கூட்டுறவு நிறுவனத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, விற்பனை பிரிவு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளார். உதகையிலுள்ள நீலகிரி மாவட்ட கூட்டு றவு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், மாவட்டம்  முழுவதும் 30க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் செயல்படுகின்றன. கொரோனா காலகட்டத்தில் நியாய விலைக்கடைகள், உதகை பல்பொருள் அங்காடிகளுக்கு பிற  இடங்களிலிருந்து பொருட்கள் வாங்கி ‘பேக் கிங்’ செய்து விற்பனை செய்யப்பட்டது. இந் நிலையில், பொருட்களை விநியோகம் செய்த பலருக்கு இன்னும் பணம் பட்டுவாடா செய் யப்படவில்லை என உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், உதகை கூட்டுறவு நிறுவ னத்தில் பணிபுரிந்த விற்பனை பிரிவு ஊழியர் ரவி என்பவர் ரூ.45 லட்சம் முறைகேட்டில் ஈடு பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு நிறுவன  நிர்வாக இயக்குநர் தியாகு கூறுகையில், மேற் கண்ட நபர் துறை ரீதியாக விசாரணை நடை பெற்று வருகிறது. மோசடி பணத்துக்காக ரூ.30 லட்சம், ரூ.15 லட்சம் என 2 காசோலை களை அவர் அளித்துள்ளார். வங்கியில் பணம் இல்லாமல் அவை திரும்பின. இதுதொடர் பாகவும், கூட்டுறவு நிறுவனம் சார்பில் நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, என்றார்.

தலைமையாசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்

சேலம், செப்.9- அரசுப்பள்ளி தலைமையாசிரியர் இட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்க ணித்து பெற்றோருடன் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், வன்னியனூர் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் சிவகுமார் (48). இவர் வாழதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற் றப்பட்டார். இதேபோல் அங்கிருந்த தலைமை ஆசிரியை ஜெயசித்ரா, வன்னியனூர் பள் ளிக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று வாழதாசம்பட்டி மற்றும் வன்னியனூர் ஆகிய இரு பள்ளிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர் களின் பெற்றோர்களும் பங்கேற்றனர். இத னைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரி கள், வருவாய்துறை அதிகாரிகள் பலமுறை  சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான  முடிவு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் 9 நாட்களாக நீடித்தது.  இந்நிலையில், வெள்ளியன்று சேலம் கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர், மேட்டூர் சார் ஆட்சியர் வீர்பிரதாப் சிங் தலைமையில் வன் னியனூரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது 4 மாதங்களுக்கு வன்னியனூர் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சசி தலை மையில் பள்ளி செயல்படும். அதன்பிறகு சிவ குமாரை பணியமர்த்த முயற்சி எடுக்கப் படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்த மாணவர் கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

கோவை, செப்.9- கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், செம்மேட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர் (20).  இவர் ஆலாந்துறையை சேர்ந்த 16 வயது சிறுமியை காத லித்து வந்துள்ளார். இதனிடையே ஸ்ரீதர் கடந்த 6 மாதங்க ளுக்கு முன்பு சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று,  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இந்த தக வல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோர் ஸ்ரீதரின் பெற்றோரை தொடர்பு கொண்டு 2 பேருக்கு திருமணம் செய் வது என முடிவு செய்தனர். ஆனால் சிறுமி மைனர் என்பதால் திருமணத்தை தள்ளி வைத்தனர். கடந்த செப்.1 ஆம் தேதி ஸ்ரீதர் சிறுமியை அழைத்து சென்று, அப்பகுதியிலுள்ள விநாயகர் கோவிலில் வைத்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தார். இதன்பின் அவர் சிறுமியுடன் தனது வீட்டில் வசித்து  வந்தார்.  இந்நிலையில், செப்.6 ஆம் தேதியன்று சிறுமியை மருத் துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதை யும், மைனர் பெண் என்பதையும் கண்டுபிடித்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆலாந்துறை காவல் துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறை யினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், உண்மை கள் வெளிவந்தன. இதைத்தொடர்ந்து சிறுமியை கர்ப்பமாக் கிய ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

குறைதீர் முகாம்

நாமக்கல், செப். 9- நாமக்கல் மாவட்ட பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் சனி யன்று (இன்று) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இம் முகாம் நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங் கோடு, பரமத்தி வேலூர் மற் றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங் கல் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. இதில், புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல் மற்றும் நீக் கம் செய்யவும், கைபேசி  எண் மாற்றம் போன்ற கோரிக் கைகளுக்கும் விண்ணப் பித்து பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சியர் (பொ) ரா. மல்லிகா தெரிவித்துள்ளார்.