districts

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, மே 19- விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் காரிமங்கலம் ஒன்றியப் பேரவை கூட்டம், வட்டச் செயலாளர் மனோகரன் தலைமையில் நடைபெற் றது. நிர்வாகிகள் சுரேஷ்பாபு, தங்க வேல், வள்ளி ஆகியோர் முன்னிலை  வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் ஜி. பாண்டியம்மாள், மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்டத் துணைத்தலை வர் சி.ராஜா ஆகியோர் சிறப்புரையாற் றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் பி.ஜெய ராமன் வாழ்த்துரையாற்றினார். இக்கூட் டத்தில், காரிமங்கலம் வட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண் டும். இத்திட்டத்தை காரிமங்கலம் பேரூ ராட்சியில் அமல்படுத்த வேண்டும். கம்பைநல்லூரில் நிறுத்தப்பட்ட இத்திட் டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண் டும். இத்திட்டத்தின் கீழ் ஓராண்டில் 200 நாள் வேலை, கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். விவசாய கூலித்தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொ டர்ந்து சங்கத்தின் வட்டத் தலைவ ராக மனோகரன், வட்டச் செயலாள ராக பி.சுரேஷ், பொருளாளராக சாந்தா  உள்ளிட்ட 15 வட்டக்குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர்.

;