districts

img

கண் துடைப்புக்கு அதிகாரிகள் அலங்கோல வேலை:

திருப்பூர், டிச.4- திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்ட  அறிவிப்பு செய்திருந்த நிலையில், சாலையைச் செப்பனிட அவசர கதியில் அலங்கோலமாக மண்ணை நிரப்பினர். அது  தேங்கியிருந்த தண்ணீருடன் சகதியாக மாறி  வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் நிலை ஏற் பட்டுள்ளதால், மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண் டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் பெருமாநல்லூர் சாலை  பூலுவபட்டி சந்திப்பு முதல் வாவிபாளை யம் வரை 6 கிலோ மீட்டர் நீளமுள்ள முக் கியமான சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கில்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மாநில நெடுஞ்சாலையான இந்த சாலை யில் தோட்டத்துபாளையம், நெருப் பெரிச்சல் பகுதியில் மழைநீர், சாக்கடை நீர்  வெளியேற வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கின்றது. அத்துடன் இந்த இடம் குண்டும், குழியுமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் இச்சாலை மேலும் மோச மடைந்தது.  இது குறித்து மாநகராட்சி மற்றும் நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் பலமுறை மனு அளித்தும், தொடர் போராட்டங்கள் நடத்தியும் உள்ள னர்.

ஆனால் அவ்வப்போது, சிறுசிறு பணி களை மேற்கொள்வதும், மாநகராட்சி வாகனங்கள் மூலம் கழிவு நீரை உறிஞ்சு வதும், மேடு பள்ளமான இடங்களில் மண் கலவையை கொட்டி நிரப்புவதுமாக தற் காலிக ஏற்பாடு மட்டுமே செய்து சமா ளிப்பதையே வாடிக்கையாக கொண்டுள் ளனர். தற்போது பெய்த மழையில் ஏற்பட் டுள்ள பாதிப்பை சரி செய்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிசம்பர்-7 செவ்வாயன்று காலை அஸ்வதி கம்பெனி முன்பு மரணக் குழியில் மரம் நடும் போராட்டம் அறிவித்து இருந்தனர்.  இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை யினர் அவசரகதியில் அந்த இடத்தில் சாலை செப்பனிடும் பணியைச் செய்தனர். சாலை பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரை வெளி யேற்றாமல் அப்படியே ஜல்லி மற்றும் எம்  சாண்ட் மணல் கலவைகளை கொட்டி பள் ளத்தை நிரப்பினர். இதையடுத்து சாலை  சீரமைக்கப்பட்டு இருப்பதாக நினைத்து  இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அந்த இடத்தைக் கடந்து சென்றபோது, திடீரென வழுக்கி விழுந்தனர். அடுத்தடுத்து வாகனங்களில் வந்தவர்களும் இந்த இடத்தில் சகதியில் சிக்கி வழுக்கி விழுந்த னர். காலை 7 மணி முதல் பகல் 11 மணி  வரை அந்த இடத்தில் 15க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து காயமடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேசிய போது மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை இரு துறையினரும் ஒருவர் மீது ஒரு வர் காரணங்களை திசை திருப்பி விடு கின்றனர்.

கழிவுநீர் வெளியேற வழியில்லா மல் சாக்கடை கால்வாய் அமைத்தது மாந கராட்சி நிர்வாகம் தான். சாக்கடை நீரும், மழை நீரும் வெளியேறுவதற்கு வழியில் லாமல் சாக்கடை அமைத்து சாலையில் தேங்க வைத்துள்ளனர். எனவே மாநக ராட்சி தான் கழிவுநீர் கால்வாய் அமைத்து நீரை வெளியேற்ற வேண்டும் என நெடுஞ் சாலை துறையினர் கூறுகின்றனர்.  மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது சாலையின் இருபுறமும் தார்  சாலை அமைக்கும் போது நெடுஞ்சாலைத் துறை தான் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என திசை திருப்புகிறார்கள். கழிவுநீர் மற்றும் மழைநீர் கொண்டு சொல்ல இருந்த பாதை அடைக்கப்பட்டுள்ளன என வும் மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரி விக்கின்றனர்.  எனவே ஆறேழு ஆண்டுகளாகத் தொடரும் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்துகின்ற னர். இது வரை நாற்று நடும் போராட் டம், கப்பல் விடும் போராட்டம், முற்றுகைப் போராட்டம் என பல கட்டப் போராட்டங் கள் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காண மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற் றும் வருவாய் துறை அதிகாரிகளை ஒருங் கிணைத்து  உடனடி நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 7ஆம் தேதி அதே இடத் தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி கூறியுள்ளார்.

;