districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தகவல் பெறுவோர், சமூக ஆர்வலர்கள்  பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

திருப்பூர், அக்.16- தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவோர், சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்  என்று திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு தொடர்பாக அவசர ஆலோசணைக் கூட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.     ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் கோவை , ஈரோடு ,  திருப்பூர், கரூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சமூக  ஆர்வலர்கள், தகவல் உரிமை ஆர்வலர்கள் மற்றும் ப;y வேறு பொதுநல இயக்கங்கள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து  கொண்டனர்.  அதில் சமூக நலத்தின் மீது அக்கறையுடன் ஊழல், லஞ்சத்திற்கு எதிராக பொதுப் பிரச்சனை, முறைகேடு தொடர் ்பாக புகார் தெரிவிக்கும் பொழுதும், தகவல் பெறும் உரிமை  சட்டத்தை பயன்படுத்தி தகவல் கோரும் பொழுதும் சமூக  ஆர்வலர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும், பொய்  வழக்கு புனையப்படுவதும், இறுதியாக கொலை செய்யப் படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனை  தடுத்து சமூக ஆர்வலர்களுக்கான பாதுகாப்பை உறுதி  செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த  ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கபட்டது.  அதன் அடிப்படையில் மேற்கண்ட நான்கு மாவட்டம் மற்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழக  விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து அனைத்து  இயக்கங்கள் சார்பில் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டது.    ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மாவட்டத்தில் சூழற்சி  முறையில் சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

ஈரோடு, அக்.16- ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கி ணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள்  மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மருத்துவ முகாம் பவானி தாலுகாவிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி குறிச்சியில் செவ்வாயன்றும் (நாளை), பெருந்துறை தாலுகாவிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முருங் கத்தொழுவில் புதனன்றும் மாற்றுத்திறனாளிகள் முகாம்  நடைபெறவுள்ளது.  மேலும், பெருந்துறை தாலுகாவிலுள்ள ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி முகாசிபிடாரியூரில் வியாழனன்றும், சத்தியமங்கலம் தாலுகாவிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளி மில்மேடு, மொடக்குறிச்சி தாலுகாவிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எழுமாத்தூர் ஆகிய இடங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான  தேசிய அடை யாள அட்டை, அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ரூ. 1.14 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், அக்.16 - மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.14 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்கு முறை விற் பனைகூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறை முக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 524  விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தி ருந்தனர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிக பட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரத்து 302,  குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 500, சராசரி விலை யாக ரூ. 8 ஆயிரத்து 550 விலை போனது. மொத்தம் 4307  மூட்டைகள் 1 ஆயிரத்து 354 குவிண்டால் பருத்தி ரூ.1  கோடியே 13 லட்சத்து 57 ஆயிரத்து 296-க்கு விற்பனை யானது. இந்த ஏலத்தில் 15 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத் திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய் திருந்தார்.

போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூரில் தொடக்கம்

திருப்பூர், அக்.16- உலக போலியோ தினத்தை முன் னிட்டு திருப்பூர் கிழக்கு ரோட்டரி சங்கம்  மற்றும் அனைத்து ரோட்டரி சங்கங் களின் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி திருப்பூரில் தொடங்கியது.  திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் பள்ளி  மைதானத்தில் விழிப்புணர்வு சைக்கிள்  பேரணியை ரோட்டரி சங்கங்களின் ஆளுநர் இளங்குமரன் துவக்கி வைத் தார். திட்ட தலைவர் நல்லசிவம் தலைமை வகித்தார். சுமார் 165 பேர்  கலந்து கொண்ட இந்த சைக்கிள் பேரணி, திருப்பூரில் இருந்து ஊத்துக் குளி, பெருந்துறை, ஈரோடு வழியாக பவானி சென்று நிறைவடைகிறது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பொது மக்களை சந்தித்து போலியோ ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களையும் விநி யோகித்தனர்.

மாநில கல்வி கொள்கை செயல்படுத்த திட்டம் கருத்துக்களை தெரிவிக்க மக்களுக்கு அழைப்பு

சேலம், அக்.16- மாநில கல்வி கொள்கை செயல்படுத்த திட்டத்திற்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்க சேலம் உள்ளிட்ட 4  மாவட்ட மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. உயர்மட்டக்குழு தீர்மானத்தின்படி மாநிலக் கல்விக் கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்து கருத்துக்  கேட்புக் கூட்டங்கள் மண்டல அளவில் நடத்திட உத்தே சிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சேலம் மண்ட லத்தில் உள்ள சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ண கிரி மாவட்டங்களுக்கான மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் சேலம் கோட்டை நகரவை ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில் வரும் அக்.19, 20 ஆகிய தேதி களில் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரி யர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து  கொண்டு, மாநில கல்வி கொள்கை சார்பான தங்களது எழுத்து  மூலமான கருத்துக்களை தங்களது முழுமையான முகவரி  மற்றும் செல்போன் விவரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவியை தாக்கிய  ஆசிரியை மீது வழக்குப்பதிவு

உதகை, அக்.16- தனியார் பள்ளியில் மாணவியை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம், பிங்கர் போஸ்ட் பகுதியில் நிர்மலா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராள மான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலை யில், அங்கு 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சன்ஷியா என்ப வரை கையெழுத்து சரியில்லை என்று கூறி  ஆசிரியை ஆர்த்தி  என்பவர் கண்ணத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை யடுத்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து இனிமேல் இதுபோல் நடக்காது என்றுக் கூறி ஆசிரியை ஆர்த்தி மற்றும் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. இந்நிலையில், மாணவி சன்ஷியாவை ஆசிரியை ஆர்த்தி மீண்டும் கையெழுத்து சரியில்லை எனக்கூறி கன் னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சன்ஷியா வின் பெற்றோர் அவரை உதகை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் உள்நோயாளியாக அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து உதகை மேற்கு காவல் நிலையத் தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் ஆசிரியை ஆர்த்தி மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் பேசுதல் (294) (பி),  தன்னிச்சையாக காயம் உண்டாகுதல் (323) உட்பட 3 பிரிவு களில் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

செயற்கை பண்ணை குட்டையில் மூழ்கி தாய் மகன் உயிரிழப்பு

தாராபுரம், அக்.16- தாராபுரம் அருகில் செயற்கை பண்ணை குட்டையில் மூழ்கி தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள கோவிந் தாபுரம் கிராமம் சின்னபுத்தூர் மைனர் காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவரது மனைவி சந்திரகலா (30),  மகன் வினோ தர்ஷன் (8) ஆகிய மூவரும் ஞாயிறன்று சோள  காட்டிற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது  தண்ணீர் சேமித்து வைப்பதற்காக 12 அடி பிளாஸ்டிக்  செயற்கை பண்ணை குட்டை அமைத்து தேவைப்படும்போது பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மதியம் ஒரு மணியள வில் குட்டையில் தண்ணீர் நிரம்பியதை அடுத்து மின் மோட் டாரை நிறுத்துவதற்காக சந்திரகலா மற்றும் வினோதர் ஷன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது மகன் வினோ தர்ஷன் குட்டையில் கால் தவறி விழுந்து சத்தம் போட்டு  உள்ளார். இதைக் கேட்ட தாய் சந்திரகலா மகனை காப்பாற் றுவதற்காக முயற்சி செய்தபோது, அவரும் தவறி குட்டை யில் விழுந்துள்ளார். இருவரும் நீண்ட நேரம் முயற்சி செய்த  நிலையில் தண்ணீரில் மூழ்கி இருந்தனர். இந்நிலையில் மின் மோட்டாரை நிறுத்துவதற்காக சென்ற மனைவி மற்றும்  மகன் நீண்ட நேரம்  ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த  சக்திவேல் குட்டை அருகே சென்று  பார்த்தபோது இருவரும் குட்டையில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இரு வரையும் மீட்டுள்ளார். அப்போது சக்திவேலின் மனைவி சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  வினோதர்ஷனை ஆம்பு லன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்தடை

திருப்பூர், அக்.16- ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 18) காலை 9 முதல் மாலை 4 மணி வரை யில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற் பொறியாளர் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். ஊத்துக்குளி துணை மின்நிலையம்: குள்ளாயூர், அணைப் பாளையம், சுப்பனூர், அருகம்பாளையம், முல்லைநாயக் கனூர், வரப்பாளையம், வெங்கலப்பாளையம், பாப்பம் பாளையம், ரெட்டைகிணறு, தாசநாயக்கனூர், மாரநாயக் கனூர், குன்னம்பாளையம், பி.வி.ஆர்.பாளையம்,  மோளக்கவுண்டன்பாளையம், சின்னியகவுண்டங்ன பாளையம், தளவாய்பாளையம், விஜயமங்கலம் ஆர்.எஸ்.,  நசியன் தோட்டம், தொட்டியவலசு, வேலாஞ்சிறை.